வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டம் என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை, "உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஆதரித்தல், வேலைவாய்ப்புத் திறன் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துதல்" என்ற நோக்கத்துடன் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் (Employment-Linked Incentive (ELI)) scheme) உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தும் மற்றும் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும் - முதல் முறை பணியாளர்களுக்கான பகுதி A மற்றும் நீடித்த வேலைவாய்ப்புக்கான பகுதி B ஆகும்.


•  இந்த திட்டத்தின் பகுதி A, முதல் முறை ஊழியர்களுக்கு கவனம் செலுத்துகிறது. அவர்களுக்கு ஒரு மாத ஊதியம் வரை, அதிகபட்சம் ரூ. 15,000 வரை ஊதிய மானியம் வழங்குகிறது. அதே நேரத்தில் பகுதி B கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்க முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயன்பெறும் மொத்த 3.5 கோடி பணியாளர்களில், 1.92 கோடி பேர் முதல் முறை வேலைக்கு சேரும் நபர்களாக இருப்பர்.

•  ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில்  (Employees' Provident Fund Organisation (EPFO)) பதிவு செய்யப்பட்ட முதல் முறை ஊழியர்களை இலக்காகக் கொண்டு, பகுதி A இரண்டு தவணைகளில் ரூ.15,000 வரை ஒரு மாத EPF ஊதியம் வழங்கும். "மாதம் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் பெறும் ஊழியர்கள் இதற்கு தகுதி பெறுவார்கள். முதல் தவணை ஆறுமாத சேவைக்குப் பின்னர் வழங்கப்படும். இரண்டாம் தவணை 12 மாத சேவை மற்றும் ஊழியர் நிதி எழுத்தறிவுத் திட்டத்தை முடித்த பின்னர் வழங்கப்படும்.


• சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, ஊக்கத்தொகையின் ஒரு பகுதி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சேமிப்புக் கணக்கில் சேமிக்கப்படும். பின்னர் பணியாளர் அதை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிக்கை கூறியது.


• இந்த திட்டத்தின் பகுதி B அனைத்து துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக உள்ளது. குறிப்பாக, உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தும். மாதம் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். "குறைந்தது ஆறு மாதங்களுக்கு நீடித்த வேலைவாய்ப்பைக் கொண்ட ஒவ்வொரு கூடுதல் ஊழியருக்கும் மாதம் ₹3,000 வரை, இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்கம் முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும். உற்பத்தித் துறையில், ஊக்கத்தொகை மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும்" என்று  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• ரூ.10,000 வரை கூடுதல் ஊழியரின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation (EPF)) ஊதிய அடுக்குக்கு, முதலாளிக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்; ரூ.10,000-க்கும் மேற்பட்ட ஊதிய அடுக்குக்கும் ரூ. 20,000 வரை ஊதியத்திற்கு ரூ.2,000 சலுகை வழங்கப்படும்; மேலும் ரூ.20,000-க்கும் மேற்பட்ட ஊதியத்திற்கு (ரூ.1 லட்சம்/மாதம் சம்பளம் வரை) ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.


•  ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (Employees' Provident Fund Organisation (EPFO)) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், குறைந்தது இரண்டு கூடுதல் ஊழியர்களை (50-க்கும் குறைவான ஊழியர்கள் உள்ள முதலாளிகள்) அல்லது ஐந்து கூடுதல் ஊழியர்களை (50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் உள்ள முதலாளிகள்) குறைந்தது ஆறு மாதங்களுக்கு நீடித்த அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


•  திட்டத்தின் பகுதி A-ன் கீழ் முதல் முறையாக ஊழியர்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளும் நேரடி நன்மை பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)) முறையில் செய்யப்படும். பகுதி B-ன் கீழ் முதலாளிகளுக்கான கொடுப்பனவுகள் நேரடியாக அவர்களின் நிரந்தர கணக்கு எண்னுடன் (Permanent Account Number (Permanent Account Number)) இணைக்கப்பட்ட கணக்குகளில் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் காலம் ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரை இரண்டு ஆண்டுகள் ஆகும்.


• வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் முதலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் பட்ஜெட் 2024-25-ல் பிரதமரின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு தொகுப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ரூ. 2 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கீடு உள்ளது.



Original article:

Share: