இந்திய தேர்தல் ஆணையம் பயன்படுத்த எளிதான ஆவணங்களைச் சேர்ப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிகாரின் தேர்தல் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) பற்றி வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் கூறிய முக்கியமான கருத்துக்களை தெரிவித்தது. இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) தனது குறைபாடுகளை சரிசெய்து, உடனடியாக அதை கவனத்தில் கொள்ளவேண்டும். அடையாள சரிபார்ப்புக்கு ஏற்கக்கூடிய ஆவணங்களில் ஆதார், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Elector Photo Identity Card) மற்றும் குடும்ப அட்டை (ration card) ஆகியவற்றைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவதன் மூலம், நீதிமன்றம் சிறப்பு தீவிர சீர்திருத்தத்தின் மீதான (Special Intensive Revision (SIR)) விமர்சனத்தை ஒப்புக்கொண்டுள்ளது. சரிபார்ப்புக்காகப் பட்டியலிடப்பட்ட 11 ஆவணங்கள் வாக்காளர் பதிவுக்கு ஒரு கட்டுப்பாடான மற்றும் தேவையற்ற தடையாகும். சிறப்பு தீவிர சீர்திருத்தத்தின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் வகையில் செயல்முறையை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுமாறு உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. "சிறப்பு தீவிர சீர்திருத்தத்தின் முழு நடவடிக்கையும் அடையாளத்தைப் பற்றி மட்டுமே" என்றும், தற்போது பட்டியலிடப்பட்ட 11 ஆவணங்களில் எதுவும் "குடியுரிமைக்கான தெளிவான ஆவணங்கள்" (telltale ones for citizenship) இல்லை என்றும், அவை அனைத்தும் அடையாளத்தை நிரூபிக்க மட்டுமே என்றும் நீதிமன்றம் சரியாகக் குறிப்பிட்டது. மேலும், "மற்ற ஆவணங்களைப் பெறுவதற்கு அடிப்படையாகக் கருதப்படும்" ஆதார் ஏன் விலக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதே நேரத்தில் சாதி சான்றிதழ்கள் (caste certificates) போன்ற சார்பு ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன என்று கேட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டில் உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்தியது. குடியுரிமைக்குப் பதிலாக வசிப்பிடத்தை மட்டுமே நிரூபிக்கும் ஆதார் பற்றிய இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆட்சேபனை, சட்ட முன்னுதாரணங்களைத் தவிர, பிகாரின் நடைமுறை உண்மைகளின் தவறான புரிதலைக் காட்டுகிறது. உதாரணமாக, பீகாரின் மக்கள் தொகையில் 87% பேர் ஆதார் அட்டை வைத்திருந்தாலும், 45%-50% பேர் மட்டுமே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், 2% பேர் மட்டுமே கடவுச் சீட்டு (passports) வைத்திருப்பதாகவும் தரவுகள் காட்டுகின்றன.
உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் இன்னும் முக்கியமானவை. கடந்த தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இருந்த வாக்காளர்களை மீண்டும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கக் கேட்கக்கூடாது என்று உறுதியாக நிராகரித்தது. இந்த முன்னுதாரணம் சிறப்பு தீவிர சீர்திருத்தத்தின் அணுகுமுறைக்கு செயல்முறைக்கு எதிரானது. இது ஒவ்வொரு வாக்காளரையும் குடிமகன் அல்லாதவராகக் கருதுகிறது மற்றும் இது சரியான அடையாளம் இருந்தபோதிலும் வாக்காளர்களின் குறிப்பிடத்தக்க வாக்குரிமை இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சிறப்பு தீவிர சீர்திருத்தத்தை நிறுத்தாமல், நீதிமன்றம் முழு செயல்முறையின் நீதித்துறை மறுபரிசீலனையையும் பட்டியலிட்டுள்ளது. இது நமது ஜனநாயகத்தின் உள்ள அடிப்படை வாக்களிக்கும் உரிமையைப் (right to vote) பாதிக்கிறது என்று நீதிமன்றம் விளக்கியது. அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ், வாக்களிப்பதை எளிதாக்குவதே இந்திய தேர்தல் ஆணையத்தின் பணி என்றும் அதை கடினமாக்குவது அல்ல நீதிமன்றம் நினைவுபடுத்தியது. வாக்காளர் சரிபார்ப்புக்கான ஆவணங்களில் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிக நெகிழ்வுத்தன்மையை அனுமதித்ததால் ஏற்கனவே நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பின்னர் தலைமைத் தேர்தல் ஆணையர் அந்த அணுகுமுறையை நிராகரித்தார். இப்போது, சரிபார்க்கக்கூடிய ஆவணங்களின் பட்டியலை விரிவுபடுத்துவது குறித்த தனது ஆலோசனையின் மூலம், நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு SIR-ஐ ஒரு ஆபத்தான விலக்கு நடவடிக்கையிலிருந்து - ஓரங்கட்டப்பட்ட குடிமக்களைப் பாதிக்கக்கூடிய - உண்மையான உள்ளடக்கிய செயல்முறையாக மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.