ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது.
வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கையாக, சுகாதார அமைச்சகம் அனைத்து அரசுத் துறைகளுக்கும் சமோசா, ஜிலேபி, வடா பாவ், லட்டு போன்ற இந்தியாவின் அன்றாட சிற்றுண்டிகளில் உள்ள எண்ணெய், சர்க்கரை மற்றும் டிரான்ஸ்-கொழுப்பு அளவுகளை காட்சிப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இவற்றை தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படும் சுகாதார அபாயங்களை எடுத்துக்காட்ட முயல்கிறது. இந்த பிரச்சாரம் முதலில் நாக்பூர் AIIMS-இல் தொடங்கப்பட்டு, பின்னர் மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்த நடவடிக்கை, CBSE இணைப்பு பெற்ற அனைத்து பள்ளிகளையும் குழந்தைகளின் சர்க்கரை உட்கொள்ளலை கண்காணித்து குறைக்க ‘சர்க்கரை பலகைகள்’ அமைக்க உத்தரவிட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு வந்துள்ளது. இந்த பலகைகள் பரிந்துரைக்கப்பட்ட தினசரி சர்க்கரை உட்கொள்ளல், பொதுவாக உட்கொள்ளப்படும் உணவுகளில் உள்ள சர்க்கரை அளவு, அதிக சர்க்கரை உட்கொள்ளலால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவு மாற்று வழிகள் பற்றிய தகவல்களை பட்டியலிடும். இந்த முயற்சிகள், இந்தியாவில் உடல் பருமன் அதிகரித்து வருவதற்கு ஆதாரங்களை வழங்கும் ஆய்வுகளால் தூண்டப்பட்டுள்ளன. NFHS தரவுகளின்படி, 2005-06 முதல் 2019-21 வரை ஆண்களில் உடல் பருமன் 15% இலிருந்து 24% ஆகவும், பெண்களில் 12% இலிருந்து கிட்டத்தட்ட 23% ஆகவும் உயர்ந்துள்ளது. இந்திய சிற்றுண்டிகளில் உள்ள எண்ணெய் மற்றும் சர்க்கரையின் அளவு வெளிப்படையாக தெரியாததால் — மற்றும், இதனால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதால் — இந்த முயற்சிகள் இந்த இடைவெளியை நிரப்பி, புகையிலை பொருட்களில் உள்ள படமுறை எச்சரிக்கைகளைப் போல “காட்சி நடத்தைத் தூண்டுதல்களாக” செயல்படும். இருப்பினும், விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டும் நடத்தை மாற்றங்களை கொண்டு வர முடியாது, குறிப்பாக அத்தியாவசிய சட்டமியற்றல் நடவடிக்கைகள் இல்லாத நிலையில்.
ஆச்சரியகரமாக, சுகாதார அமைச்சகம் இந்திய சிற்றுண்டிகளை இலக்காகக் கொண்டிருந்தாலும், ஆரோக்கியமற்ற முறையில் பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களைப் பற்றி மக்களை எச்சரிக்க தெளிவான பொட்டலங்களின் முன்பகுதியில் பொறிக்கப்படவும் (front-of-package labels) குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்ற உணவின் விளம்பரம், சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பதை ஒழுங்குபடுத்தவும் தெளிவான முன்-அடையாளப்படுத்துதலை அறிமுகப்படுத்த பல ஆண்டுகளாக எதுவும் செய்யப்படவில்லை. மேலும், அதிக அளவு கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு (high levels of fat, sugar, and salt (HFSS)) உள்ள உணவுப் பொருள்களின் மீது கூடுதல் வரி விதிப்பது சில நாடுகளில் காணப்படுவது போல் உட்கொள்ளலை மேலும் குறைக்கலாம். பொதுவான தொற்றா நோய்கள் (non-communicable disease) தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான தேசிய பல்துறை நடவடிக்கைத் திட்டத்தில் 2017-22-ஆண்டுகளில் குறிப்பிட்டுள்ளதன்படி, அடையாளப்படுத்துதல் மற்றும் விரிவான ஊட்டச்சத்து அடையாளப்படுத்துதல் ஆகியவற்றைச் சேர்ப்பதற்காகத் திருத்தம் செய்யப்பட வேண்டியிருந்தது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) விதிமுறைகளை திருத்த வேண்டும். FSSAI (பொதிப்படுத்துதல் மற்றும் அடையாளப்படுத்துதல்) விதிமுறை 2020-ல் திருத்தப்பட்டது; ஜூலை-15 அன்று, உச்ச நீதிமன்றம் மீண்டும் பேக்கிங் செய்யப்பட்ட உணவில் இந்த அடையாளங்களை வெளிப்படுத்துமாறு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அதிக அளவு கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு (high levels of fat, sugar, and salt (HFSS)) உள்ள உணவு மற்றும் பானப் பொருள்களில் முன்-அடையாளப்படுத்துதல்கள் நடைமுறைக்கு வருவதற்கு, FSSAI முதலில் சர்க்கரை, உப்பு மற்றும் மொத்த கொழுப்பிற்கான மேல் வரம்புகளை வரையறுக்க வேண்டும். இவை இதுவரை இறுதி செய்யப்படவும் அங்கீகரிக்கப்படவும் இல்லை. 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆரோக்கியமற்ற உணவுகளைக் கண்டறிய மக்களுக்கு உதவுவதில் எச்சரிக்கை அடையாளங்கள் மற்ற பொதிப்படுதலைகளைவிட சிறந்தவை என்பதைக் காட்டியது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (Indian Council of Medical Research - National Institute of Nutrition (ICMR-NIN)) நடத்திய ஆய்வில், எச்சரிக்கை அடையாளங்களும் ஊட்டச்சத்து நட்சத்திர மதிப்பீடுகளும் மிதமான ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதைத் தடுக்க உதவியது என்பதைக் கண்டறிந்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தைக் குறைக்க விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பது மட்டும் நல்ல பலனைத் தராது, வலுவான சட்டங்கள் இல்லாமல், இந்த முயற்சிகள் வெறும் குறியீடாகவே இருக்கும்.