நகர்ப்புறத் திட்டமிடல் சூழலில் "கொள்ளளவுத் திறன்" (carrying capacity) என்பது என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


"கொள்ளளவுத் திறன்" (Carrying capacity) என்பது இயற்கை வளங்களைச் சிதைக்காமல் அல்லது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தாமல் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு அல்லது குறிப்பிட்ட பகுதி நிலையான முறையில் ஆதரிக்கக்கூடிய அதிகபட்ச தனிநபர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.


உத்தரகண்ட் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், முதலமைச்சர் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் கவனம் செலுத்துகிறார். இதன் காரணமாக, மாநில அரசானது அதன் வளர்ச்சிக் கொள்கைகளை மலைப்பகுதியின் சுற்றுச்சூழலின் தேவைகளுக்கு ஏற்ப மாற்ற விரும்புகிறது. இதனால், இந்த மாநிலமானது பல சுற்றுலாப் பயணிகளைப் பெறுகிறது. மேலும், கட்டுமானம் சரியாக திட்டமிடப்படாவிட்டால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்.


"ஒரு ஏசி அறையின் கொள்ளளவுத் திறனின் (carrying capacity) அளவு 50 பேர், ஆனால் நாங்கள் 100 பேரை உள்ளே வைத்தால், ஏசி நன்றாக வேலை செய்யாது. இந்த யோசனை நகரங்கள் அல்லது சாலைகள் போன்ற அனைத்து நகர்ப்புற இடங்களுக்கும் பொருந்தும். அதனால்தான், முக்கியமான நகரங்களின் கொள்ளளவுத் திறனை நாங்கள் மதிப்பிடுகிறோம். சில நகரங்கள் அவற்றின் கொள்ளளவுத் திறனின் அளவை மீறினால், சில செயல்பாடுகளுக்கு மாற்று இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்," என்று அதிகாரி கூறினார்.


மலை மாநிலம் அதன் மலைவாசஸ்தலங்களுக்கும் இந்து கோவில்களுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது, 2025 கோடையில் 37 லட்சம் மக்கள் இந்த கோவில்களைப் பார்வையிட்டனர். இந்த பெரும் எண்ணிக்கை பெரும்பாலும் சிக்கலை ஏற்படுத்துகிறது, ஏனெனில் சூழலியலும் உள்கட்டமைப்பும் இவர்களுக்கு ஏற்ப தாங்க முடியவில்லை. 


கன்வர் யாத்திரை (Kanwar Yatra) ஜூலை 11 முதல் 23 வரை திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சுமார் 3 கோடி பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களில் உள்ள சிவன் கோயில்களில் வழங்குவதற்காக கங்கையிலிருந்து புனித நீரை சேகரிக்க ஹரித்வாருக்கு வருவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா? :


நவம்பர் 2017-ல், உத்தரகண்ட் இரண்டு ஆண்டுகளில் 39 பூகம்பங்களை சந்தித்ததாக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறினார். இந்த நிலநடுக்கங்கள் சுற்றுச்சூழல் சமநிலையின்மையால் (ecological imbalances) ஏற்பட்டதாக அவர் விளக்கினார். இந்த சேதத்தை பின்னர் சரிசெய்வதைவிட இதுபோன்ற பேரழிவுகளைத் தடுப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.


2022-ம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2023-ம் ஆண்டின் முற்பகுதியிலும், உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோஷிமத்தில் உள்ள வீடுகள் விரிசல்களைக் காட்டத் தொடங்கின. இதில் உள்ள நகரம் நிலச்சரிவை சந்தித்தது, அதாவது தரை மூழ்கத் தொடங்கியது. இதற்கு ஒரு காரணம் அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சுவதால் ஏற்படுகிறது. ஜோஷிமத் பல ஆண்டுகளாக கனரக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது. சாலை விரிவாக்கம் மற்றும் பிற நடவடிக்கைகள் இந்த நெருக்கடியை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.



Original article:

Share: