பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவிலிருந்து பெரும் பலன்கள். -வி ஆனந்த நாகேஸ்வரம்

 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திட்டம் அனைவருக்கும் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளது மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் இணைய  உதவியுள்ளது.


நிலையான வளர்ச்சிக்கு நிதி உள்ளடக்கம் மிகவும் முக்கியமானது என்பது தெளிவாகிறது. ஏனெனில், 2030ஆம் ஆண்டிற்கான 17 ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் (SDGs) வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக இதை எடுத்துக்காட்டுகின்றன. நிதி உள்ளடக்கத்தில் முதல் படி, வங்கிக் கணக்குகள் இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்குகளை வழங்குவதாகும். ஏனெனில், கணக்கு உரிமை முறையான வங்கி முறைக்கு கதவைத் திறக்கிறது.


நிதி உள்ளடக்கத்தை அடைய, மக்களுக்கு வங்கி சேவைகளை வழங்கும் வலுவான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட கொள்கைகள் அரசாங்கங்களுக்குத் தேவை. தனது முதல் சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) திட்டத்தை அறிவித்தார். இது ஆகஸ்ட் 28, 2014 அன்று நிதி உள்ளடக்கம் குறித்த தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.


இந்த திட்டத்தின் முழக்கம் "My Account, Fortune Maker" என்பதாகும். ஏழை மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களை முறையான வங்கி முறைக்கு அணுகலை வழங்குவதன் மூலமும், அவர்களை இந்தியாவின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலமும் அவர்களை பொருளாதார நீரோட்டத்தில் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். 


ஜன் தன் கணக்குகள் மக்கள் எளிய ஆவணங்கள் மற்றும் எளிதான KYC/e-KYC மூலம் பூஜ்ஜிய இருப்பு, பூஜ்ஜிய கட்டணமில்லாத கணக்குகளைத் திறக்க அனுமதித்தன. இந்தக் கணக்குகள் ரூபே டெபிட் கார்டுகளுடன் ₹2 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் ₹10,000 வரை கடன் வசதியையும் வழங்கின.


PMJDY தொடங்கப்பட்டதிலிருந்து, பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 2014 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவின் கணக்கு உரிமை 26 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளதாக எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லியில் 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 


இது உலகின் மிகப்பெரிய நிதி உள்ளடக்க இயக்கமான PMJDY காரணமாகும். இந்த வளர்ச்சி உலகளாவிய சராசரியை விட (6.57) கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகவும், அதே காலகட்டத்தில் மற்ற வளரும் நாடுகளை விட (7.27) மூன்று மடங்கு அதிகமாகவும் இருந்தது.


ஆகஸ்ட் 8, 2025 நிலவரப்படி, 56 கோடிக்கும் அதிகமான ஜன் தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 67 சதவீதம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வங்கிக் கிளைகளில் உள்ளன. இந்தத் திட்டம் பாலின இடைவெளியைக் குறைக்கவும் உதவியுள்ளது. 


இத்திட்டத்தில் 31 கோடிக்கும் அதிகமான கணக்குகள் 55 சதவீதம் பெண்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சமூகப் பாதுகாப்பு சேர்க்கைகளில் ஜன் தன் கணக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)) ஆகியவற்றின் கீழ் பதிவுசெய்யப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு PMJDY உடன் இணைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெளிப்படைத்தன்மை மேம்படுத்தப்பட்டது


 இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இது பணம் செலுத்துதல்களை மேலும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் சேர உதவியுள்ளது. 

நேரடி நன்மை பரிமாற்றத்தை (DBT) ஆதரிப்பதன் மூலம், PMJDY வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. சமூக நலன் திட்டத்தின் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை குறைத்துள்ளது மற்றும் அரசாங்கத் திட்டங்களில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஆதார் மற்றும் மொபைல் இணைப்பு, ஜன் தன்-ஆதார்-மொபைல் (JAM) போன்றவை இந்தியா முழுவதும் டிஜிட்டல் பரிமாற்றங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளன.


ஜன் தன் கணக்குகளுக்கும் ஒருங்கிணைந்த பரிமாற்றம் இடைமுகத்திற்கும் (UPI) இடையிலான இணைப்பு, முறைசாரா துறையில் உள்ள சிறு மற்றும் குறு தொழில்முனைவோருக்கு அவர்களின் வணிகத் தேவைகளுக்கு முறையான நிதி அமைப்புகளை அணுக உதவுவதன் மூலம் உதவியுள்ளது.


 சமீபத்திய NPCI தரவுகளின்படி, கிட்டத்தட்ட அனைத்து UPI பரிவர்த்தனைகளிலும் பாதியானது, உணவு மற்றும் மளிகைப் பொருட்களுக்கானவையாக உள்ளது. இந்தத் துறைகள் நுண் தொழில்முனைவோரால் வழிநடத்தப்படுவதால், நிதி உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றகள் அடிமட்ட மட்டத்தில் தினசரி வர்த்தகத்தை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதைக் காட்டுகிறது.


இதன் தாக்கம் நிதி அணுகலைத் தாண்டி பரந்த நேர்மறையான விளைவுகளை உருவாக்கியுள்ளது. 'கிராமப்புற இந்தியாவில் வங்கிச் சேவை, சேமிப்பு மற்றும் நுகர்வு சீராக்கம்' என்ற 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், வங்கிச் சேவை அணுகல், சேமிப்பு தொடர்பான சிரமங்களைக் குறைப்பதன் மூலம் மக்கள் தங்கள் செலவினங்களை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது.  


2021ஆம் ஆண்டு SBI ஆராய்ச்சி அறிக்கை, அதிக PMJDY இருப்புக்கள் குறைந்த குற்ற விகிதங்களுடன் தொடர்புடையவை என்றும், அதிக கணக்கு வைத்திருப்பவர்களைக் கொண்ட மாநிலங்கள் மது மற்றும் புகையிலை பயன்பாட்டில் தெளிவான சரிவைக் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. 


முன்னால் உள்ள சவால்கள்     


வங்கி சேவைகள் இப்போது கிட்டத்தட்ட அனைவருக்கும் கிடைக்கப்பெறுவதால், அடுத்த சவால் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்துவதாகும். ரிசர்வ் வங்கியின் நிதி உள்ளடக்க குறியீடு இந்த பகுதியில் நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. இந்த குறியீடு நிதி உள்ளடக்கத்தை மூன்று பகுதிகளாக அளவிடுகிறது. 


அவை: அணுகல் (35%), பயன்பாடு (45%) மற்றும் தரம் (20%) ஆகும். 2021இல் தொடங்கப்பட்டதிலிருந்து, நிதி உள்ளடக்க குறியீடு  தொடர்ந்து மேம்பட்டு மார்ச் 2024இல் 67ஐ எட்டியுள்ளது. இந்த அளவில், 0 என்பது முழுமையான விலக்கு (exclusion) என்றும் 100 என்பது முழுமையான உள்ளடக்கம் (inclusion) என்றும் பொருள். இந்தியாவின் நிலையான உயர்வு, நிதி உள்ளடக்கம் நாடு முழுவதும் பரவி வலுவடைந்து வருவதைக் காட்டுகிறது.


வங்கிச் சேவை இல்லாத மக்களை நிதி அமைப்பிற்குள் கொண்டு வருவதில் பிரதமர் ஜன் தன் யோஜனாவின் வெற்றி ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வெற்றி அல்ல. இது ஆழமான நிதி உள்ளடக்கத்திற்கான தொடக்கப் புள்ளியாகும். இது வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் பகிரப்பட்ட ஆதரவை மேம்படுத்துவதன் மூலம் நீண்டகால நன்மைகளைக் கொண்டுவர முடியும்.


வி. ஆனந்த நாகேஸ்வரம் கட்டுரையாளர் மற்றும் நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆவார்.



Original article:

Share: