இந்த வரி விதிப்பு (levy) முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? நாட்டில் பருத்தி உற்பத்தி குறைந்து வருகிறதா?
தற்போதைய செய்தி: பருத்தி (Cotton) என்பது நெசவுத் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாகும். இது இந்தியாவில் ஏறக்குறைய 60 லட்சம் உழவர்களால் பயிரிடப்படுகிறது. உற்பத்தி குறைவின் காரணமாக, ஒன்றிய அரசு 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்திய 11% இறக்குமதி வரியை திரும்ப பெற்றுள்ளது. எனினும், கடந்த ஆண்டு வரி இருந்தபோதும் பருத்தி இறக்குமதியில் அதிகரிப்பு காணப்பட்டது. ஆகஸ்ட் 18 அன்று அரசு, தற்போதைய பருத்தி பருவம் முடியும் (செப்டம்பர் 30) வரை வரியை திரும்பப் பெறுவதாக அரசாங்கம் கூறியது.
வரி ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையில் இறக்குமதி வரி (import duty) அறிவிக்கப்பட்டது. அப்போது நாடு ஆண்டுக்கு 350 லட்சம் பருத்தி மூட்டைகள் (bales) பருத்தி உற்பத்தி செய்து கொண்டிருந்தது. தேவை 335 லட்சம் பருத்தி மூட்டைகளாக இருந்தது. நாடு பருத்தியை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நேரத்திலும் இறக்குமதிகளும் இருந்தன. இந்த வரி பருத்தி உழவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் விதிக்கப்பட்டது.
நெசவுத் தொழிலின் மூலப்பொருள் (பருத்தி) பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையாக, அரசு எல்லா வகையான பருத்தியையும் ஏப்ரல் 14, 2022ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 30, 2022ஆம் ஆண்டு வரை இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளித்தது. பின்னர், இந்த விலக்கை அக்டோபர் 31, 2022 வரை நீட்டித்தது. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சியின் (Global Trade Research Initiative) படி, பருத்தி இறக்குமதி 107.4% அதிகரித்து. 2023-2024நிதியாண்டில் $579.2 மில்லியன் இருந்த நிலையில் 2024-2025 நிதியாண்டில் $1.20 பில்லியன் ஆக உயர்ந்தது.
தற்போதைய நிலைமை என்ன?
ஒட்டுமொத்த உள்நாட்டு பருத்தி உற்பத்தி 294 லட்சம் பருத்தி மூட்டைகளாக குறைந்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைவானது. தேவை 318 லட்சம் பருத்தி மூட்டைகளாக உள்ளது. 2024-2025 பருத்தி பருவத்தில் (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) பருத்தி உற்பத்தி கடந்த பருத்தி பருவத்தை விட ஏறக்குறைய 20 லட்சம் பருத்தி மூட்டைகள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதிகளும் ஏறக்குறைய 40 லட்சம் பருத்தி மூட்டைகளுடன் அதிகபட்சமாக இருக்கக் கூடும்.
முக்கிய விநியோகம் ஆஸ்திரேலியா ($258.2 மில்லியன்), அமெரிக்கா ($234.1 மில்லியன்), பிரேசில் ($180.8 மில்லியன்) மற்றும் எகிப்து ($116.3 மில்லியன்) ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது. இந்திய பருத்தி கழகம் (Cotton Corporation of India) நடப்பு பருத்தி பருவத்தில் உழவர்களிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price (MSP)) ஏறக்குறைய 100 லட்சம் பருத்தியை ரூ.37,500 கோடி செலவில் வாங்கியுள்ளது.
மேலும், சந்தையில் 73 லட்சம் பருத்தி மூட்டைகளை விற்றுள்ளது. அக்டோபர் 1 அன்று தொடங்கும் 2025-2026 பருத்தி பருவத்திற்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை 8% அதிகரித்துள்ளது. வட மாநிலங்களின் உழவர்கள் அக்டோபரில் பருத்தியை சந்தைக்கு கொண்டு வரத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களின் உழவர்கள் தீபாவளிக்குப் பிறகு பருத்தியை வழங்கத் தொடங்குவார்கள்.
வரி நீக்கம் எதைக் குறிக்கிறது?
இறக்குமதி செய்யப்பட்ட பருத்தியில் சுமார் இரண்டு லட்சம் பருத்தி மூட்டைகள் (bales) மட்டுமே செப்டம்பர் 30-க்கு முன்பு வந்து சேரும் என்பதால், ஏற்கனவே வரவிருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட பருத்தி, வரி இல்லாமல் இந்தியாவிற்கு வரும். பல உலகளாவிய தர அடையாளங்கள் (brands) பருத்தி இறக்குமதியாளர்கள் மற்றும் ஆடை தயாரிப்பாளர்கள் சில அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர்களிடமிருந்து மட்டுமே பருத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றன.
முன்னதாக, சர்வதேச சந்தையில் ஆடை ஏற்றுமதியாளர்கள் போட்டியிடும்போது, வரி காரணமாக மூலப்பொருட்களின் விலை அதிகமாக இருந்தது. இதனால் அவர்களுக்கு வரி விதிப்பு இல்லாமல் அவர்களுக்கு சமமான வாய்ப்பு கிடைக்கும்.
இருப்பினும், பருத்தி உழவர்கள் இந்த பார்வைகளுடன் முழுமையாக உடன்படவில்லை. தமிழ்நாட்டின் திருவாரூரில் பருத்தி பயிரிடும் ரவிசந்திரன் கூறுகையில், வரி நீக்கம் உழவர்களை பருத்தி பயிரிடுவதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்கிறது என்றார். அரசிடமிருந்து எந்த ஆதரவும் பெறாத பருத்தி உழவர்களுக்கு இறக்குமதி வரி நீக்கம் உதவாது என்று ஒன்றுபட்ட உழவர்கள் முன்னணியின் (Samyukta Kisan Morcha) தென்னிந்திய அமைப்பாளர் குருபூர் சாந்தகுமார் கூறினார்.
நீண்டகால தீர்வு என்ன?
இந்தத் துறை அரசாங்கத்திடமிருந்து இரண்டு முக்கிய ஆதரவு நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறது. முதலாவதாக, மூலப்பொருள் கொள்முதலைத் திட்டமிடுவதற்கு உதவும் ஒரு நிலையான கொள்கையை அது விரும்புகிறது. இரண்டாவதாக, பருவம் இல்லாத காலத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வரியை நிறுத்தி வைக்க வேண்டும். ஏனெனில், பெரும்பாலான உழவர்கள் அந்த நேரத்தில் தங்கள் விளைபொருட்களை விற்றுவிடுவார்கள்.
நெசவு ஆலைகள் உச்ச பருவத்தில் பருத்தி வாங்க எடுக்கும் கடன்களுக்கு 5% வட்டி தள்ளுபடியை எதிர் பார்க்கின்றனர். ஆலைகள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME)) அலகுகள், போதுமான நிதியைப் பெற்றிருந்தால், தேவையான பருத்தியை அவர்களால் ஈடுகட்ட முடியும். அதனால் அரசாங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) நடவடிக்கைகளுக்கு தனியாக செலவிட வேண்டியதில்லை என்று தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.