வாக்காளர் பட்டியலில் கடுமையான முறைகேடுகளை முன்னிலைப்படுத்தும் புகாரை கவனமாக ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு கடமை உள்ளது.
சமீபத்திய வாரங்களில் நடைபெற்ற இரண்டு முக்கிய செய்தியாளர் சந்திப்புகள் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளன. முதலாவது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (LoP) ராகுல் காந்தி, ஆகஸ்ட் 7, 2025 அன்று புது தில்லியில் உரையாற்றியது. அங்கு 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பெங்களூர் மத்திய நாடாளுமன்றத் தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றப் பிரிவில் வாக்காளர் பட்டியலைக் கையாளும் குறிப்பிட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார். அதில் ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும், ‘தந்தையின் பெயர்’ அதில் ‘xyz’ என்றும், வீட்டு எண் ‘0’ என்றும் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) ஆவணங்களை ஆறு மாதங்களுக்கும் மேலாக, தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு அவரது குழுவினரால் இந்த உண்மைகள் கண்டறியப்பட்டன என்று ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த வெளிப்பாடுகள் இந்திய குடிமக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன. அவை உண்மையாக இருந்தால், முழு தேர்தல் முறையும் நம்பகத்தன்மையை இழந்துவிடும். மேலும், இந்தியாவின் ஜனநாயகம் இனி உண்மையானதாக இருக்காது.
ECI இன் நிலைப்பாடு அசாதாரணமானது
இரண்டாவது செய்தியாளர் சந்திப்பு, புது தில்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் அவரது மற்ற உறுப்பினர்களால் ஆகஸ்ட் 17, 2025 அன்று நிகழ்த்தப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (LoP) எழுப்பிய பிரச்சினைகளை தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தலைமைத் தேர்தல் ஆணையரின் சந்திப்பில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் புகார் குறித்து பல அடிப்படை கேள்விகள் புறக்கணிக்கப்பட்டதால், அவை குடிமக்களுக்கு தெளிவை அளிக்கவில்லை.
தேர்தல் ஆணையமானது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததுடன் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் தனது கூற்றுக்களின் விவரங்களை ஒரு பிரமாணப் பத்திரத்துடன் வழங்க வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது, தேர்தல் ஆணையத்தின் இந்த அசாதாரண நிலைப்பாடாகப் பார்க்கப்பட்டது. அதுவும் அரசியல் குழப்பத்தில் தன்னை இணைந்திருப்பதைக் காட்டுகிறது. இது நீண்ட காலமாக அரசியல் கட்சிகளை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தும் என்பதைக் காட்டுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் என்பது ஒரு உயர் அரசியலமைப்பு அமைப்பாகும். இது வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதை மேற்பார்வையிடுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்குத் தேர்தல்களை நடத்துவதற்கும் இது பொறுப்பாகும். அரசியலமைப்பின் பிரிவு 324 இந்த பணியை நிறைவேற்றுவதற்கு ECI க்கு மகத்தான அதிகாரங்களை வழங்குகிறது.
அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியான சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம், சட்டப்பிரிவு 324 என்பது தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக ECI பெறக்கூடிய அதிகாரங்களின் முக்கிய மையமாகும். இருப்பினும், அது அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு (LoP) இறுதி எச்சரிக்கை விடுப்பது பிரிவு 324 அல்லது தேர்தல் சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்படவில்லை. அரசியல் வாதங்களில் பங்கேற்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) கடமையும் அல்ல.
பெங்களூருவில் நடந்த சம்பவம், வாக்காளர் பட்டியல்களில் மோசடிகள் நடந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. 1950ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act) உருவாக்கிய நடைமுறைச் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ராகுல் காந்தியின் வெளிப்பாடுகள் பொருந்தவில்லை என்பது உண்மைதான்.
இந்தச் சட்டமும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளும், பல அடுக்கு ஆய்வு மற்றும் பொது ஆய்வு மற்றும் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான நியாயமான நடைமுறைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. மேலும், தேர்தல் சட்டங்கள் தேர்தலைப் பற்றி ஒரு இறுதி முடிவு இருப்பதாகக் கருதுகின்றன. எனவே, ராகுல் காந்தி எழுப்பிய பிரச்சினைகளை இந்தச் சட்டங்களால் கையாள முடியாது.
இருப்பினும், இந்த பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பதுதான் கேள்வி. அர்த்தமற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் சட்டப் பிரமாண வாக்குமூலங்களுக்கான கோரிக்கை மூலம் அதை எதிர்ப்பதற்கான முயற்சிகள் பயனற்றவை. சட்டப்பிரிவு 324 தேர்தல் ஆணையத்திற்கு மகத்தான அதிகாரங்களை வழங்குகிறது. இதனால், அது பட்டியல்களைத் தயாரித்து நியாயமான முறையில் தேர்தலை நடத்தும்.
சட்டப்பிரிவு 324, அந்த அதிகாரத்தை நியாயமாகப் பயன்படுத்துவதற்கான பொறுப்புகள் மற்றும் கடமைகளைக் குறிக்கிறது. எனவே, ஒரு குடிமகன், வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் கடுமையான முறைகேடுகளை முன்னிலைப்படுத்தி புகார் அல்லது வெளிப்படுத்தினால், அதை கவனமாக ஆராய்ந்து, இந்த தேர்தல் அமைப்பில் உள்ள தவறுகளை சரிசெய்வது தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு கடமையாகும்.
80 வாக்காளர்கள் ஒரே முகவரியில் எப்படிப் பதிவு செய்ய முடியும்? இருப்பினும், அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்ததால் அவர்கள் வாக்களித்தனர். இது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. ஒருவர் வழக்கமாக அந்தப் பகுதியில் வசிப்பவராக இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருக்க முடியும். இதன் பொருள் அந்த இடத்தில் நிரந்தரமாக தங்குவது என்பதாகும். இந்த 80 பேரும் நிரந்தரமாக ஒரே முகவரியில் வசிக்கிறார்களா?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கு ஒரு வழியினை வழங்குகிறது. இந்த பட்டியல்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் அல்லது ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் திருத்தப்படலாம் அல்லது ஒரு சில தொகுதிகள் அல்லது அதன் ஒரு பகுதிக்கான சிறப்புத் திருத்தம் ஆகியவற்றுக்கான காரணங்களை ECI பதிவு செய்ய வேண்டும் (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 21). வாக்காளர்கள் பதிவு விதிகள், 1960 இன் விதி 25, ஆண்டுதோறும் திருத்தங்கள் இரண்டு வகைகளாக இருக்கலாம்: அவை சாதரண திருத்தம் அல்லது தீவிர திருத்தம் என்பதாகும். சில நேரங்களில் அவை பகுதி சுருக்கமாகவும் பகுதி தீவிரமாகவும் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
பீகாரின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)
இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தில் (SIR) இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஈடுபட்டுள்ளது. உண்மையில், சட்டமோ அல்லது விதிகளோ "சிறப்பு தீவிர திருத்தம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. "தீவிர திருத்தம்" மற்றும் "சிறப்பு திருத்தம்" என்பதற்கு தனித்தனி விதிகள் உள்ளன.
எழுத்தாளரின் கூற்றுப்படி, SIR சில சட்ட சிக்கல்களைக் கொண்டுள்ளது. சில சிறப்புத் திருத்தம் எந்த நேரத்திலும் செய்யப்படலாம் அதேசமயம், தகுதித் தேதியான ஜனவரியில் மட்டுமே தீவிரத் திருத்தம் செய்ய முடியும். ஆனால், இது சில தொகுதிகள் அல்லது அதன் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பீகார் விஷயத்தில், SIR ஜூலை 1 ஐ தகுதித் தேதியாகப் பயன்படுத்துகிறது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 14(b) க்கு எதிரானது. ஜனவரி 1 தகுதித் தேதியாக இருக்கும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. தகுதித் தேதி என்பது வாக்காளர் பட்டியலைத் திருத்துதல் அல்லது தயாரித்தல் தொடங்கும் நாளாகும்.
பீகாரில் மேலும் 7 லட்சம் பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் மர்மம்
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) விளைவாக பீகாரில் நிலவும் குழப்பமான சூழல்கள் குறித்து பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு மாதத்திற்குள் தீவிர திருத்தம் செய்வது முரண்பாடானது. 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 25(2) தீவிர திருத்தம் என்றால் பட்டியலைப் புதிதாகத் தயாரிக்க வேண்டும் என்றும் விதி 8, வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புக்கும் சென்று பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறது.
பதிவு அலுவலர்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு குடியிருப்புக்கும் ஒரு மாத காலத்திற்குள் சென்று கணக்கெடுப்பு நடைமுறைகளை நடைமுறைக்கு ஏற்ப முடிக்க முடியுமா என்பது சந்தேகேமானதாக உள்ளது. இது மாநிலத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணக்கெடுப்பு பணி முடிந்துவிட்டதாகவும், 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறுகிறது. தேர்தல் ஆணையத்தின் விருப்பத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றம், இடைக்கால உத்தரவில், பெயர்கள் மற்றும் அவை நீக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிடுமாறு ECI க்கு உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அனைவரும் வரவேற்றுள்ளனர்.
பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் (SIR) பிறகு வாக்காளர் நீக்கம் : பல சிக்கலான கேள்விகள் எழுகின்றன
தற்போதைய வார்த்தைகள்
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சக்திவாய்ந்த அரசியலமைப்பு அதிகாரம் கொண்டதாகும். ஆனால், அதன் அதிகாரங்கள் வரம்பற்றவை அல்ல. அரசியலமைப்பு எந்தவொரு நபருக்கோ அல்லது அதிகாரத்திற்கோ முழுமையான அதிகாரங்களை வழங்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய அதிகாரங்களை உருவாக்கியது.
”A.C. ஜோஸ் vs சிவன் பிள்ளை மற்றும் பிறர்-1984” (A.C. Jose vs Sivan Pillai and Others) வழக்கில், நீதிபதி எஸ். முர்தாசா ஃபசல் அலி குறிப்பிட்டதாவது, தேர்தல் ஆணையத்திற்கு வரம்பற்ற மற்றும் தன்னிச்சையான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அதன் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பின்பற்றி, அவர்கள் அரசியல் சிக்கல்களையோ அல்லது அரசியலமைப்பு நெருக்கடியையோ ஏற்படுத்தக்கூடிய அசாதாரண வழிமுறைகளை வெளியிடக்கூடும் என்று கூறினார். இது அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது ஒரு அரசியலமைப்பு நெருக்கடியைக் கூட ஏற்படுத்தக்கூடும். இத்தகைய தவறான பயன்பாடு தேர்தல் செயல்முறையின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் சேதப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
பி.டி.டி. ஆச்சாரி மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.