கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைகளுக்கு நியாயமான அணுகல் இல்லாமல், இயற்கையின் ஆற்றல் பயன்படுத்தப்படாமல் போகலாம்.
இந்தியா இப்போது உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடாக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அதன் மக்கள் தொகை சுமார் 1.46 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய மக்கள் தொகை இந்தியாவிற்கு ஒரு வரமா அல்லது பிரச்சனையா?
தாமஸ் ராபர்ட் மால்தஸ் தனது 1798 கட்டுரையில் மக்கள் தொகையானது வடிவியல் ரீதியாக வளர்கிறது, அதாவது மிக வேகமாகவும். அதே நேரத்தில் வளங்கள், குறிப்பாக உணவானது எண்கணித ரீதியாக வளர்கிறது, அதாவது மெதுவாக வளர்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பொருத்தமின்மை தவிர்க்க முடியாமல் பஞ்சம், நோய் மற்றும் மோதல்கள் போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. இந்தப் பிரச்சினைகள் மக்கள்தொகை வளர்ச்சியை மெதுவாக்கும் தடைகளாக செயல்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, மக்கள்தொகையானது 1951-ல் 361 மில்லியனிலிருந்து 2025-ம் ஆண்டில் 1.4 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களின் மீது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பசுமைப் புரட்சி (Green Revolution) பஞ்சத்தைத் (famine) தவிர்க்க உதவியது. ஆனால் சுற்றுச்சூழல் சேதம், நிலத்தடி நீர் இழப்பு மற்றும் சில பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் இன்னும் நடக்கின்றன. இது மால்தசியன் அபாயத்தின் (Malthusian risk) அறிகுறியாகும். கருவுறுதல் விகிதங்கள் குறைந்துள்ளன. மொத்த கருவுறுதல் விகிதம் (total fertility rate (TFR)) இப்போது 2.0 ஆக உள்ளது. இது மாற்று அளவைவிட சற்று குறைவாக உள்ளது. இருப்பினும், பெரிய மக்கள்தொகையின் அளவு இன்னும் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை பாதிக்கிறது.
மால்தசியன் கோட்பாட்டின் படி, மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்படாவிட்டால் துயரத்தை ஏற்படுத்துகிறது. புதுமை மூலம் தகவமைப்பு செய்ய முடியாத மக்கள் தொகை ஒரு சுமையாக மாறும். வளங்களும் மக்களும் ஒரே விகிதத்தில் வளர்ந்தால், மக்கள்தொகை வளர்ச்சி ஒரு பிரச்சனையாக இருக்காது. இதை சார்லஸ் டார்வின் "இருப்புக்கான போராட்டம்" (Struggle for Existence) என்று மேலும் விளக்கியுள்ளார். பரிணாமம் காலப்போக்கில் மாறுபாடு, தகவமைப்பு மற்றும் சமமற்ற இனப்பெருக்க வெற்றி காரணமாக இயக்கப்படுகிறது. டார்வின் தானே மால்தஸின் தாக்கத்தைப் பெற்றவர், அவர் மக்கள்தொகை அழுத்தத்தால் உந்தப்பட்ட உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கான போராட்டத்தால் இனங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்று நம்பினார்.
ஒரு பெரிய இளம் பணியாளர்கள் நன்கு படித்தவர்களாகவும் வேலைகளைப் பெற்றவர்களாகவும் இருந்தால் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும். இது மக்கள்தொகை ஈவுத்தொகை (demographic dividend) என்று அழைக்கப்படுகிறது. இதற்கான போட்டி புதுமை, சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் கூட்டு தகவமைப்புக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைகளுக்கு மக்களுக்கு நியாயமான அணுகல் இல்லையென்றால், இந்த ஆற்றல் இழக்கப்படலாம்.
பல போராட்டங்கள்
"பரவலான செல்வத்தின் முரண்பாடு (Paradox of Plenty)" என்பது பொதுவாக எண்ணெய் மற்றும் கனிமங்கள் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த நாடுகளை விவரிக்கிறது. இந்த நாடுகள் பெரும்பாலும் மோசமான நிர்வாகம், வளர்ச்சியின்மை மற்றும் சமத்துவமின்மையை எதிர்கொள்கின்றன. இப்போது, இந்தியாவின் மனித மூலதனத்திற்கு இந்தக் கருத்தைப் பயன்படுத்துவது பற்றி சிந்தியுங்கள். இந்தியாவில் உலகிலேயே மிகப்பெரிய இளைஞர்களைக் கொண்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. ஆனால், அது இன்னும் அதிகளவில் வேலையின்மையால் போராடுகிறது. கற்றல் வறுமை மற்றும் இடைநிற்றல் போன்ற மோசமான கல்வியின் முடிவுகளையும் இது எதிர்கொள்கிறது. சுகாதார அணுகல் போதுமானதாக இல்லை. பிராந்தியம் மற்றும் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட வேறுபாடுகளும் உள்ளன. இந்த நிலைமை "Plenty" முரண்பாட்டின் மற்றொரு வடிவமாகும்.
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் வளர்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியாக மட்டுமல்லாமல், மக்களின் திறன்களை மேம்படுத்துவதாகவும், அவர்களை மதிக்கும் வாழ்க்கையை வாழ்வதற்கான அவர்களின் உண்மையான சுதந்திரங்களாகவும் மறுவரையறை செய்தார்.
எனவே, டார்வினிய ”தகுதியானது தக்கனபிழைத்துவாழும்” (survival-of-the-fittest) போராட்டத்தின் மூலம் தகவமைப்புக்கு கவனம் செலுத்துகிறது. இதற்கு நேர்மாறாக, சென்னின் அணுகுமுறை அனைவரும் வளரவும் வெற்றிபெறவும் உதவுவதை ஆதரிக்கிறது. யார் உயிர்வாழ்கிறார்கள் என்பது அல்ல, யார் செழிக்கிறார்கள், எவ்வளவு நியாயமாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இந்த கருத்துக்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் ஒன்றிணைகின்றன. இதற்கான மக்கள்தொகைக்கு ஆற்றல் உள்ளது. ஆனால் அது திறனாக வளர்க்கப்பட்டால் மட்டுமே.
சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் IITகள், IIMகள் மற்றும் AIIMs போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) கவனம் செலுத்தியுள்ளனர். இந்த நிறுவனங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இருப்பினும், தொடக்கக் கல்வி மிகவும் குறைவான கவனத்தைப் பெற்றுள்ளது. பல மாநிலங்களில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு இன்னும் குறைவாகவே உள்ளது. ASER அறிக்கைகளின்படி, 5-ஆம் வகுப்பு மாணவர்கள் பலரால் 2-ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களைப் படிக்கவோ அல்லது எளிய கணித சிக்கல்களைத் தீர்க்கவோ முடியவில்லை. சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan), RTE சட்டம் மற்றும் NIPUN பாரத் போன்ற அடிப்படைத் திட்டங்கள் தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போதும்கூட, அவற்றின் செயல்படுத்தல் சீரற்றதாகவே உள்ளது.
அடிப்படைக் கல்வியில் வலுவான அடித்தளம் இல்லாமல், உயர்கல்வி பலவீனமடைகிறது. இது பட்டதாரிகள் வேலைச் சந்தைக்குத் தயாராக இல்லாததற்கு வழிவகுக்கிறது. நாடு அடிப்படைத் திறன்களில் முதலீடு செய்யாவிட்டால், அது "பரவலான செல்வத்தின் முரண்பாட்டில்” (Paradox of Plenty) சிக்கித் தவிக்கக்கூடும். பல இளைஞர்களைக் கொண்டிருந்தாலும் திறமையான தொழிலாளர்கள் இல்லை.
எழுத்தாளர் டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஆர். அம்பேத்கர் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.