தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் குறித்து . . . -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) மற்றும் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக "பாஜக செய்தித் தொடர்பாளர் போலப் பேசியதாக" குமார் மீது குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி, அவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்கான அறிவிப்பை தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை, எதிர்க்கட்சிகளிடமிருந்து அதிகரித்து வரும் கேள்விகளை எதிர்கொண்ட குமார், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (Lok Sabha Leader of Opposition) ராகுல் காந்தியிடம் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை (allegations of vote theft) பிரமாணப் பத்திரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் (apologise to the nation) என்று கேட்டுக் கொண்டார்.


அரசியலமைப்பின் பிரிவு 324(5)-ல் கூறப்பட்டுள்ளபடி, தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியைப் போலவே அதே வழியில் மற்றும் அதே அடிப்படையில் பதவியில் இருந்து நீக்கப்படலாம். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-ன் (Chief Election Commissioner and other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act) பிரிவு 11, இந்த செயல்முறையை விளக்குகிறது.


பிரிவு 324(5) உச்ச நீதிமன்ற நீதிபதியைப் போலவே தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியில் இருந்து நீக்கமுடியாது என்றும், ஆனால் அதே செயல்முறையின் அடிப்படையில் மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்றும் கூறுகிறது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையரின் பணி நிபந்தனைகள் அவர் நியமிக்கப்பட்ட பிறகு அவருக்கு பாதகமாக மாற்றப்படக்கூடாது" என்று கூறுகிறது.

மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் பரிந்துரைக்கும் வரை வேறு எந்த தேர்தல் ஆணையரையோ அல்லது பிராந்திய ஆணையரையோ பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் இது குறிப்பிடுகிறது.


தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை (EC) பதவி நீக்குவதற்கான காரணங்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-ன் பிரிவு 11-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. இது, CEC மற்றும் ECகளின் நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலத்தை குறிப்பிடுகிறது.


நீதிபதிகள் விசாரணைச் சட்டம், 1968, பிரிவு 3, "ஒரு குழுவால் ஒரு நீதிபதியின் தவறான நடத்தை அல்லது இயலாமை குறித்து விசாரணை செய்தல்" என்பதைக் கையாள்கிறது. ஒரு நீதிபதியை நீக்குவதற்காக குடியரசுத் தலைவரிடம் ஒரு உரையை முன்வைக்க ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்று அது கூறுகிறது. (அ) மக்களவையில் முன்மொழியப்பட்ட அறிவிப்பில் (மசோதா), குறைந்தது நூறு உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும். (ஆ) மாநிலங்களவையில் முன்வைக்கப்பட்ட அறிவிப்பில் குறைந்தது ஐம்பது உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும்.


இதைத் தொடர்ந்து, சபாநாயகர் அல்லது தலைவர் இரண்டு வழிகளில் செயல்படலாம் என்று சட்டம் மேலும் கூறுகிறது. அவர் முதலில் பொருத்தமானதாகக் கருதும் எந்தவொரு நபரையும் கலந்தாலோசிக்கலாம். அவருக்குக் கிடைக்கும் எந்தவொரு ஆவணங்களையும் அவர் ஆராயலாம். அவ்வாறு செய்த பிறகு, அவர் தீர்மானத்தை ஒப்புக்கொள்ளலாம் அல்லது அதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம்.


தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சபாநாயகர் அல்லது அவைத் தலைவர் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானத்தை நிலுவையில் வைத்து, பின்னர் இந்த தீர்மானத்தை ஆராய ஒரு குழுவை அமைப்பார்கள். இந்தக் குழு விரைவில் அமைக்கப்பட்டு இதில் மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள். நீதிபதியை நீக்கக் கோருவதற்கான காரணங்களை ஆராய்வதே இந்த குழுவின் முக்கிய நோக்கமாக இருக்கும்.


இந்த குழு உறுப்பினர்களில் ஒருவர் “உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்”. மற்றொரு உறுப்பினர் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். மூன்றாவது உறுப்பினர் சபாநாயகர் அல்லது அவை தலைவர் ஒரு புகழ்பெற்ற சட்ட வல்லுநராகக் கருதும் நபராக இருக்க வேண்டும்.


இந்தக் குழு “விசாரணை நடத்த முன்மொழியப்பட்ட நீதிபதிக்கு எதிராக திட்டவட்டமான குற்றச்சாட்டுகளை உருவாக்கும்” மற்றும் மேலும் அத்தகைய குற்றச்சாட்டுகள் “அத்தகைய ஒவ்வொரு குற்றச்சாட்டும் அடிப்படையாகக் கொண்ட காரணங்களின் அறிக்கையுடன் சேர்ந்து நீதிபதிக்குத் தெரிவிக்கப்படும். மேலும் இந்த குழுவால், இது தொடர்பாக குறிப்பிடப்படக்கூடிய நேரத்திற்குள் எழுத்துப்பூர்வ வாத அறிக்கையை முன்வைக்க அவருக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்படும்.”


ஒரு பதவி நீக்கத் தீர்மானம் வெற்றிபெற, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பேர் அதை ஆதரிக்க வேண்டும். கூடுதலாக, இதற்கு ஆதரவான வாக்குகள் ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் 50%-க்கும் அதிகமாக இருக்கவேண்டும். நாடாளுமன்றம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றினால், நீதிபதியை அல்லது இந்த வழக்கில், தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்கிறார்.


உங்களுக்குத் தெரியுமா? :


இந்திய அரசியலமைப்பின் பகுதி XV தேர்தல்களைப் பற்றி பேசுகிறது. தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரங்களை வழங்கவும், மற்றும் அதன் சாத்தியமான தன்மைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியதை குறிப்பிடவும், பிரிவுகள் 324 முதல் 329 வரை குறிப்பிடுகிறது.


பிரிவு 324 : ஒவ்வொரு மாநிலத்தின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கான அனைத்து தேர்தல்கள் மற்றும் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கான தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பது மற்றும் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்குகிறது.

பிரிவு 325 : மதம், இனம், சாதி, பாலினம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தின் அடிப்படையில் எந்தவொரு நபரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்க முடியாது என்று கூறுகிறது.


பிரிவு 326 : மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தேர்தல்கள் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் இருக்கும் என்று கூறுகிறது.


பிரிவு 327 : இந்த அரசியலமைப்பின் விதிகளின்படி, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அவ்வப்போது அத்தகைய சட்டங்களை இயற்றலாம்.


பிரிவு 328 : ஒரு மாநிலத்தின் சட்டமன்றமும் தேர்தல்கள் குறித்து சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இந்தச் சட்டங்கள் மாநில சட்டமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கையாள முடியும். மாநிலமும் அவ்வப்போது அத்தகைய சட்டங்களை இயற்றலாம்.


பிரிவு 329 : தேர்தல்கள் தொடர்பான விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று இந்தப் பிரிவு கூறுகிறது.


Original article:

Share: