மண்டல் ஆணையம், அதன் பரிந்துரைகள் மற்றும் இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றியம் (1992) வழக்கில் முக்கிய தீர்ப்பு பற்றி . . . -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


இடஒதுக்கீட்டிற்கு தகுதியான வேட்பாளர்களிடையே நியாயத்தையும், சீரான தன்மையையும் உறுதி செய்வதற்கும், ஆட்சேர்ப்பு மற்றும் சேவை நிலைமைகள் குறித்த கொள்கையை உருவாக்கும் ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Union government’s Department of Personnel and Training (DoPT)) பல ஆண்டுகளாக வெளியிட்ட சுற்றறிக்கைகளில் இருந்து எழுந்த சில முரண்பாடுகளை நீக்குவதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றியம்-1992 (Indra Sawhney vs Union of India) வழக்கில் அதன் முக்கியத் தீர்ப்பில், மண்டல் ஆணையம் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்புகளில் உள்ள வசதியான பிரிவுகள், "கிரீமி லேயர்" (creamy layer) என்று அழைக்கப்படுபவை, வேலை ஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட வேண்டும் நீதிமன்றம் என்று கூறியது.


இதற்குப் பிறகு, செப்டம்பர் 8, 1993 அன்று, OBC இடஒதுக்கீட்டிற்கு தகுதியற்றதாக இருக்கும் கிரீமி லேயரை அடையாளம் காணும் ஒரு சுற்றறிக்கையை DoPT வெளியிட்டது. இந்தப் பட்டியலில், உயர் அரசியலமைப்புச் சட்ட அதிகாரிகளின் மகன்கள் மற்றும் மகள்கள், அரசு, பொதுத்துறை மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள், தொழில்முறை வர்க்கம், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் ஆகியோருடன் சேர்த்து இதில் அடங்குவர். கூடுதலாக, "வருமானம்/செல்வத் தேர்வு" (income/wealth test) அறிமுகப்படுத்தப்பட்டது.


குறிப்பாக, பெற்றோரில் ஒருவர் குரூப் A அல்லது வகுப்பு I அரசுப் பணிக்கு நேரடியாகச் சேர்க்கப்பட்டிருந்தால், ஒரு தனிநபர் OBC ஒதுக்கீட்டிற்குத் தகுதியற்றவர். 40 வயதிற்கு முன்னர் ஒரு பெற்றோர் குரூப் A-க்கு பதவி உயர்வு பெற்றிருந்தால் அதே விதி பொருந்தும்.


பெற்றோர் இருவரும் குரூப் B வேலைகளுக்கு நேரடியாகச் சேர்க்கப்பட்டிருந்தால், ஒரு தனிநபர் கிரீமி லேயரின் ஒரு பகுதியாகக் கருதப்படுவார். ஆயுதப்படை அதிகாரிகளின் குழந்தைகளுக்கு, லெப்டினன்ட் கர்னல் பதவி வரை மட்டுமே ஒதுக்கீடு கிடைத்தது.


அரசுத் துறைக்கு வெளியே உள்ளவர்களுக்கு, வருமான உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், 2017 முதல் உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உள்ளது. இருப்பினும், சம்பளம் மற்றும் விவசாய வருமானத்திலிருந்து கிடைக்கும் வருமானம் இந்த வரம்பில் கணக்கிடப்படவில்லை.


மேலே, உள்ள அளவுகோல்கள் முழுமையானவை அல்ல. குறிப்பாக அரசுத் துறைக்கு வெளியே உள்ள வேலைகளைப் பொறுத்தவரை இது அடங்கும். எனவே, அக்டோபர் 14, 2004 அன்று, DoPT விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இவை “OBC-களிடையே கிரீமி லேயர் தொடர்பான தெளிவுபடுத்தல்கள்” என்று அழைக்கப்பட்டன.


2014-ம் ஆண்டின் பிற்பகுதியில், 2004 “சரிபார்ப்புடன்” (clarification) அவர்களின் இணக்கத்தை தீர்மானிக்க பல்வேறு அதிகாரிகளால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்களை DoPT ஆய்வு செய்யத் தொடங்கியது.


2016-24-ஆம் ஆண்டு தொகுதிகளை உள்ளடக்கிய 2015 மற்றும் 2023-ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வுகளுக்கு (Civil Services Examinations (CSE)) இடையில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DoPT)) 100-க்கும் மேற்பட்ட வெற்றிபெற்ற வேட்பாளர்களின் சாதிச் சான்றிதழ்களை நிராகரித்தது. இந்த வேட்பாளர்கள் செப்டம்பர் 1993 அளவுகோல்களின் கீழ் OBC ஆகக் கருதப்பட்டிருப்பார்கள். இருப்பினும், புதிய அளவுகோல்களின் கீழ் அவர்கள் கிரீமி லேயரின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்டனர். இருப்பினும், இதே நபர்களில் பலர் பிற போட்டித் தேர்வுகளில் தோன்றினர். அந்தத் தேர்வுகளில், அதே சாதிச் சான்றிதழின் அடிப்படையில் அவர்கள் OBC ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.


DoPT-ஆல் கிரீமி லேயரில் இருப்பதாகக் கண்டறியப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் தீர்க்கப்படாத வழக்கு, பல்வேறு பங்குதாரர் அமைச்சகங்களிடையே ஆலோசனைகளுக்கு வழிவகுத்தது. பல்வேறு மத்திய பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை 'சமநிலை' (equivalence) நிறுவப்பட்டிருந்தாலும், மற்றவற்றுக்கு இந்த செயல்முறை நிலுவையில் உள்ளது. மேலும், 2004-ல் வெளியிடப்பட்ட "சர்பார்த்தலுக்கு" பரந்த அளவிலான பணியாளர்களின் மகன்கள்/மகள்கள் அவர்களின் வருமானத்தின் அடிப்படையில் கிரீமி லேயரில் சேர்க்கப்படுகிறார்கள்.


உங்களுக்குத் தெரியுமா?


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (NCBC) ஆரம்பத்தில் மத்திய அரசால் 1993-ம் ஆண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டது. இந்தச் சட்டம் 2018-ம் ஆண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (ரத்து செய்தல்) சட்டத்தின் (National Commission for Backward Classes (Repeal) Act) மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

NCBC "அரசியலமைப்பு (நூற்று இரண்டாவது திருத்தம்) சட்டம், 2018" (Constitution (One Hundred and Second Amendment) Act) மூலம் அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரிவு 338-B சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின்கீழ், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்று அழைக்கப்படும் ஒரு ஆணையத்தை உருவாக்குகிறது.


ஆணையத்தில் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உறுப்பினர்கள் இந்திய அரசின் செயலாளர் பதவி மற்றும் ஊதியத்தை வகிக்கின்றனர். அவர்களின் சேவை நிலைமைகள் மற்றும் பதவிக்காலம் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.



Original article:
Share: