முக்கிய அம்சங்கள்:
— உச்ச நீதிமன்றம் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களையும் (EVMs) புது தில்லியில் உள்ள அதன் வளாகத்திற்கு வரவழைத்து வாக்குகளை மீண்டும் எண்ணிய பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
— முந்தைய முடிவில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தை அணுகிய மோஹித் குமார், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்பஞ்ச் குல்தீப் சிங்கை 51 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
— 2022-ல் நவம்பரில் நடந்த தேர்தலின் ஆரம்ப முடிவை மோஹித் சவால் செய்தார். ஒரு வாக்குச் சாவடியில் ஒரு தலைமை அதிகாரி தனக்கும் குல்தீப்புக்கும் இடையில் வாக்குகளை மாற்றியதாகக் குற்றம் சாட்டினார்.
—உச்ச நீதிமன்றம் EVM இயந்திரத்தில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் முதல் நிகழ்வாக இந்த வழக்கு அமைந்ததாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
— நாடாளுமன்ற, சட்டமன்ற அல்லது மாநில கவுன்சில் தேர்தல்களின் முடிவுகளை, தேர்தல் நடத்தப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்குள் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்வதன் மூலம் சவால் செய்யலாம்.
— உள்ளாட்சித் தேர்தல்களுக்கு எதிரான தேர்தல் மனுக்கள் மாவட்ட அளவிலான சிவில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படவேண்டும். இந்த மனுவை, சம்பந்தப்பட்ட தேர்தலுடன் தொடர்புடைய வேட்பாளர் அல்லது வாக்காளர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மேலும், முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
— மனுவில், அனைத்து முக்கிய உண்மைகளின் தெளிவான அறிக்கையும் இருக்க வேண்டும். அது "ஊழல் நடைமுறைகள்" என்று கூறினால், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள், செயலின் தேதி மற்றும் இடம் போன்ற விவரங்களை அது வழங்க வேண்டும்.
—நீதிமன்றங்கள் கீழ்க்கண்ட காரணங்களுக்காக தேர்தலை ரத்து செய்யலாம். அவை:
• லஞ்சம் அல்லது தேவையற்ற செல்வாக்கு பயன்படுத்தப்படுதல், குற்றப் பதிவுகளை மறைத்தல் அல்லது சமூகக் குழுக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துதல்.
• வெற்றி பெற்ற வேட்பாளர் தகுதியற்றவராகவோ அல்லது தேர்தல் நாளில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவராகவோ இருத்தல்.
• ஒரு வேட்பாளரின் வேட்புமனு தவறாக நிராகரிக்கப்பட்டிருத்தல்.
• ஒரு வேட்புமனு தவறாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருத்தால், அல்லது வாக்குகள் தவறாக எண்ணப்பட்டிருந்தால் அல்லது நிராகரிக்கப்பட்டிருந்தால்.
• அரசியலமைப்பு அல்லது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் நடந்திருந்தால், அது வேட்பாளாரின் முடிவை தெளிவாக பாதித்திருந்தால்.
—வழக்கமாக, தேர்தல் நடந்த இடத்தில் வாக்குகளை மீண்டும் எண்ண நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. ஆனால், பானிபட் சர்பஞ்ச் தேர்தல் வழக்கில் (Panipat sarpanch election case), உச்சநீதிமன்றம் அதன் சொந்த வளாகத்தில் மீண்டும் எண்ணும் பணியைச் செய்தது.
—இது அரிதானது. ஆனால், சில நேரங்களில் நீதிமன்றங்கள் ஒரு தேர்தலை ரத்து செய்வது மட்டுமல்லாமல், மற்றொரு வேட்பாளரை வெற்றியாளராக அறிவிக்கவும் செய்கின்றன. இதற்காக, மனுதாரர் அல்லது மற்றொரு வேட்பாளர் பெரும்பான்மை செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்றதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா?:
—இந்தியாவில் உள்ளூர் மட்டத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்த சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் அவசியம். 1993ஆம் ஆண்டின் 73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் நகர்ப்புறங்கள் (நகராட்சிகள்) மற்றும் கிராமப்புறங்கள் (பஞ்சாயத்துக்கள்) இரண்டிலும் உள்ள உள்ளூர் சுய-அரசுகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கின. இந்த திருத்தங்கள், இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழக்கமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக மாநிலத் தேர்தல் ஆணையங்களை (SECs) நிறுவுவதற்கான விதிகளையும் அரசியலமைப்பில் உருவாக்கியது.
—எளிதில் சொன்னால், மாநில தேர்தல் ஆணையங்கள் (SECs) என்பது மூன்றாம் நிலை நிர்வாகத்திற்கான தேர்தல்களை நடத்தும் ஒரு அரசியலமைப்பு அதிகாரமாகும். இதில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் நகரங்களில் உள்ள நகராட்சிகள் அடங்கும்.
—73வது மற்றும் 74வது திருத்தங்கள் அரசியலமைப்பில் பகுதி IX மற்றும் பகுதி IXA-ஐச் சேர்த்தன. பகுதி IX (பிரிவுகள் 243 முதல் 243O வரை) பஞ்சாயத்துகளின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளைக் கையாள்கிறது. அதே நேரத்தில் பகுதி IXA (பிரிவுகள் 243P முதல் 243ZG வரை) நகராட்சிகளைக் கையாள்கிறது.
—பகுதி IX-ல் உள்ள பிரிவு 243K பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்களை வழங்குகிறது. பகுதி IXA-ல் உள்ள பிரிவு 243ZA நகராட்சிகளுக்கான தேர்தல்களை வழங்குகிறது.
—மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMகள்) வாக்களிப்பதையும் எண்ணுவதையும் எளிதாகவும் வேகமாகவும் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு EVM இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை, கட்டுப்பாட்டு அலகு (control unit) மற்றும் வாக்குப்பதிவு அலகு (balloting unit) ஆகும்.
—இந்த இரண்டு பகுதிகளும் ஒரு கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அலகு தலைமை அதிகாரி அல்லது வாக்குப்பதிவு அதிகாரியிடம் வைக்கப்படும். அதே நேரத்தில் வாக்குப்பதிவு அலகு வாக்காளர்கள் வாக்களிக்க வாக்களிக்கும் பெட்டியின் உள்ளே வைக்கப்படும். இந்த அமைப்பு வாக்குப்பதிவு அதிகாரி ஒவ்வொரு வாக்காளரின் அடையாளத்தையும் சரிபார்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.