இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செயல்முறை: வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், 12 பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 543 மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்தியாவில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செயல்முறை: நாட்டின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) வாக்களித்தனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
ஜக்தீப் தன்கர் தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் தொடக்க நாளில் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து தேர்தல் நடைபெற்றுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் அலுவலகம்
அரசியலமைப்பின் 63-வது பிரிவு ‘ஒரு இந்திய குடியரசு துணைத் தலைவர் இருப்பார்’ (there shall be a Vice-President of India) என்று கூறுகிறது. பிரிவு 64-இன் படி, குடியரசு துணைத் தலைவர் தானாகவே மாநிலங்களவையின் (Council of States) தலைவராக இருப்பார்.
மரணம், ராஜினாமா, பதவி நீக்கம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் குடியரசு துணைத் தலைவரின் பதவி காலியாகிவிட்டால், புதியவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியைத் தொடங்கும் வரை துணைத் தலைவர் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று பிரிவு 65 கூறுகிறது.
குடியரசுத்தலைவர் ‘நோய் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால்’ பணியை செய்ய இயலாதபோது, குடியரசுத் தலைவரின் பணிகளையும் துணைக் குடியரசுத் தலைவர் நிறைவேற்றுவார்.
மேலும், இந்த காலகட்டத்தில், குடியரசு துணைத் தலைவருக்கு குடியரசுத்தலைவரின் அனைத்து அதிகாரங்கள், பாதுகாப்புகள், சம்பளம் மற்றும் சலுகைகள் இருக்கும். இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவி, குடியரசுத் தலைவருக்குப் பிறகு இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியாகும். மேலும், முன்னுரிமை வரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
பிரிவு 66 குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான (process of the election) செயல்முறையைக் கூறுகிறது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு உறுப்பினர்களையும் கொண்ட வாக்காளர்களால் குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று இந்தப் பிரிவு கூறுகிறது. அவர்கள் விகிதாசார பிரதிநிதித்துவம் (proportional representation) எனப்படும் ஒரு சிறப்பு முறையைப் பயன்படுத்தி ஒற்றை மாற்றத்தக்க வாக்கு (single transferable vote) மூலம் வாக்களிக்கின்றனர். மேலும், வாக்களிப்பு ரகசியமாக செய்யப்படுகிறது.
ராஜ்ய சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்கள் (தற்போது ஐந்து இடங்கள் காலியாக உள்ளன), ராஜ்ய சபையில் பரிந்துரைக்கப்பட்ட 12 உறுப்பினர்கள், மற்றும் லோக் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 உறுப்பினர்கள் (தற்போது ஒரு இடம் காலியாக உள்ளது) ஆகியவற்றைக் கொண்டது, மொத்தம் 788 உறுப்பினர்கள் (தற்போது 782 உறுப்பினர்கள்). ஒற்றை பரிமாற்ற வாக்கு முறையில் விகிதாசார பிரதிநிதித்துவ அமைப்பில், வாக்காளர் வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிராக முன்னுரிமைகளைக் குறிக்க வேண்டும்.
இந்திய எண்களின் சர்வதேச வடிவிலோ, ரோமன் வடிவிலோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளிலோ விருப்பத்தேர்வுகளை குறிக்கலாம். வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல விருப்பங்களை வாக்காளர் குறிப்பிடலாம். வாக்குச் சீட்டு செல்லுபடியாகும் வகையில் முதல் விருப்பத்தேர்வைக் குறிப்பது கட்டாயம் மற்ற விருப்பத்தேர்வுகள் என ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின்படி, குடியரசு துணைத்தலைவர் நாடாளுமன்றத்திலோ அல்லது எந்த மாநில சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருக்க முடியாது. இந்த அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருக்கும்போது ஒருவர் குடியரசு துணைத் தலைவராகவோ தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்கும் நாளில் தானாகவே அந்த இடத்தை இழப்பார்.
தகுதி மற்றும் பதவிக்காலம்
பிரிவு 66(3)-ன் படி, பிரிவு 66(3)-ன் படி, (அ) ஒருவர் இந்திய குடிமகனாக இருந்து, (ஆ) 35 வயது பூர்த்தியடைந்து, (இ) மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே அவர் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடியும்..
பிரிவு 66(4)-ன் படி, "ஒன்றிய அல்லது மாநில அரசாங்கத்தின் கீழ் அல்லது இந்த அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்படும் எந்தவொரு உள்ளூர் அல்லது பிற அதிகாரத்தின் கீழ் ஊதியம் பெறும் அரசு வேலையில் பணிபுரிந்தால், ஒருவர் குடியரசு துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
பிரிவு 67-ன் படி, குடியரசு துணைத்தலைவராக பதவியேற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். இருப்பினும், ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகும், அடுத்த நபர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கும் வரை குடியரசு துணைத் தலைவர் அந்தப் பதவியில் தொடர்வார்.
குடியரசு துணைத் தலைவர் தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவியை விட்டு விலகி குடியரசுத்தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கலாம் அல்லது மாநிலங்களவை அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் 'ஆம்' என்று வாக்களித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால், மக்களவை அதற்கு ஒப்புதல் அளித்தால் அவர் நீக்கப்படலாம்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சர்ச்சை ஏற்பட்டால் என்ன செய்வது?
அரசியலமைப்பின் 71-வது பிரிவு, குடியரசுத்தலைவர் அல்லது குடியரசு துணைத்தலைவர் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது. இந்தத் தேர்தல்கள் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது சர்ச்சைகள் உச்சநீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்றும், அதன் முடிவு இறுதியானது என்றும் அது கூறுகிறது.
குடியரசுத் தலைவர் அல்லது குடியரசு துணைத் தலைவரின் தேர்தல் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தால், தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவியின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைச் செயல்படுத்துதல் மற்றும் செயல்பாட்டில் அவர் செய்த செயல்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் தேதி அல்லது அதற்குமுன் அந்த அறிவிப்பின் காரணமாக செல்லாது.
மேலும், குடியரசுத் தலைவர் அல்லது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பான அல்லது அதனுடன் தொடர்புடைய எந்தவொரு விவகாரமும் நாடாளுமன்ற சட்டத்தால் ஒழுங்குபடுத்தலாம்.
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவரின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள்
2018ஆம் ஆண்டில், குடியரசு துணைத் தலைவரின் சம்பளம், 1.25 லட்சத்தில் இருந்து, 4 லட்சமாகவும், குடியரசு தலைவரின் சம்பளம், 1.5 லட்சத்தில் இருந்து, 5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. இந்தத் திருத்தத்திற்கு முன், இந்த மூத்த அரசியலமைப்புப் பதவிகளின் சம்பளம் உயர் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை சேவைத் தலைவர்களைவிட குறைவாக இருந்தது.
குடியரசு துணைத் தலைவருக்கான விதிகள், 1997-ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவரின் ஓய்வூதியச் சட்டத்தில் (Vice-President’s Pension Act) பட்டியலிடப்பட்டுள்ளன. சட்டத்தின் கீழ், குடியரசு துணைத் தலைவராக பதவியில் இருப்பதை நிறுத்தும் ஒவ்வொரு நபருக்கும், அவரது பதவிக் காலம் முடிவடைவதன் மூலமோ அல்லது அவரது பதவியை ராஜினாமா செய்வதன் மூலமோ, ஓய்வூதியம் (மாதத்திற்கு ஐம்பது சதவீதம் என்ற விகிதத்தில்) வழங்கப்படும். அவரது வாழ்நாள் முழுவதும், அவர்களின் மரணத்திற்குப் பிறகும், அவரது மனைவிக்கு மாத ஓய்வூதியத் தொகையில் பாதி உரிமை உண்டு.
ஒருவர் ஒருமுறை குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், வாடகை செலுத்தாமல் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அலங்கார வீடுகளில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வாழலாம். அவர்களுக்கு மருத்துவ பராமரிப்பு, பயணச் செலவுகள், செயலாளர்கள் மற்றும் இரண்டு உதவியாளர்கள் உட்பட ஒரு சிறிய ஆதரவுக் குழுவும் கிடைக்கும். அலுவலகச் செலவுகள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை ஈடுகட்டப்படும்.