ஈஸ்வர்சந்திரா வித்யாசாகரின் 205வது பிறந்தநாள். - குஷ்பு குமாரி

 தற்போதைய செய்தி?


செப்டம்பர் 26, 1820 அன்று, மிட்நாப்பூர் மாவட்டத்தின் பீர்சிங்கா கிராமத்தில், ஈஸ்வர்சந்த்ர பந்தோபாத்யாய் என்ற பெயரில் பிறந்தவர் பின்னர் ஈஸ்வர்சந்திரா வித்யாசாகர் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு ஏழ்மையான பிராமண குடும்பத்தில் பிறந்தார். 19ஆம் நூற்றாண்டின் பெங்காலி நாடகத்தின் முன்னோடியான மைக்கேல் மதுசூதன் தத்த் அவரை ‘பண்டைய முனிவரின் மேதைமையும் ஞானமும், ஆங்கிலேயரின் ஆற்றலும், பெங்காலித் தாயின் இதயமும் கொண்டவர்’ (“the genius and wisdom of an ancient sage, the energy of an Englishman and the heart of a Bengali mother”) என்று வர்ணித்தார்.


முக்கிய அம்சங்கள்:


1. ஈஸ்வர்சந்திரா சிறுவயதிலிருந்தே அறிவுத் தாகம் கொண்டவராக அறியப்படுகிறார். கல்கத்தாவில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சமஸ்கிருத இலக்கணம், இலக்கியம், வேதாந்த தத்துவம், தர்க்கம், வானியல் மற்றும் இந்து சட்டத்தைப் படித்தார். 21 வயதில் வித்யாசாகர்  புலமைப் பெருங்கடல்  (Ocean of Learning) என்ற பட்டத்தை பெற்றார்.


2. தனிப்பட்ட முறையில், ஈஸ்வர்சந்திரா ஆங்கில இலக்கியம் மற்றும் தத்துவத்தை கற்று அறிந்தார். ஜனவரி 22, 1851 அன்று சமஸ்கிருத கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். அவர் பெத்யூன் பள்ளியின் முதல் செயலாளராகவும் இருந்தார்.


3. கல்வித் துறையில் அவரது பங்களிப்பு மகத்தானது. பெங்காலி மொழியை சாமானிய மக்களுக்கு அணுகக்கூடியதாக்கினார். அவரது புகழ்பெற்ற புத்தகமான Borno Porichoy என்ற நூலில் பெங்காலி மொழியை எளிமைப்படுத்தினார். அவர் இறந்து 130 ஆண்டுகளுக்கு மேலான பிறகும், Borno Porichoy ஒவ்வொரு குழந்தைக்கும் மொழியைக் கற்றுக்கொள்வதற்கும் எழுதுவதற்கும் முக்கிய காரணியாக இருந்து வருகிறார்.


4. ஒரு ஆசிரியராகவும், உயர் சாதி இந்து சமூகத்தில் பழைய பழக்கவழக்கங்களை மாற்றியவராகவும் பணியாற்றியதே அவரது மிகப்பெரிய  பணியாகும். அவரது சீர்திருத்தத்தின் கவனம் பெண்களை  பற்றியே இருந்தது. குழந்தை திருமணத்தை நிறுத்தவும், விதவைகள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கவும் தனது வாழ்க்கை முழுவதும் முழுமூச்சாக போராடினார்.


5. 1850ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், வித்யாசாகர் 10 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடைய பெண்களை திருமணம் செய்யும் நடைமுறைக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்தினார். சமூக, நெறிமுறை மற்றும் சுகாதார பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இதை ஆதரித்த தர்ம சாஸ்திரங்களின் செல்லுபடியாகும் தன்மையை நிராகரித்தார். ராஜா ராம் மோகன் ராயைப் போலவே (1772 முதல் 1833 வரை), விதவை மறுமணத்தை (widow remarriage) ஆதரிக்க மத புத்தகங்களையும் பழைய எழுத்துக்களையும் ஈஸ்வர்சந்திரா பயன்படுத்தினார். விதவைகள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேதங்கள் தெளிவாக அனுமதிக்கின்றன என்று கூறினார்.


6. 1855ஆம் ஆண்டில், அவர் இந்து விதவைகளின் திருமணம் குறித்து தனது இரண்டு புகழ்பெற்ற கட்டுரைகளை எழுதினார். சூத்திரங்கள் மற்றும் சாஸ்திரங்களை உள்ளடக்கிய ‘ஸ்மிருதி’ இலக்கியத்தின் முழு தொகுப்பிலும் விதவைகள் மறுமணம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதைக் காட்ட அவர் பகுத்தறிவு மற்றும் தர்க்கத்தைப் பயன்படுத்தினார்.


7. விதவை மறுமணத்தை ஆதரிப்பதோடு, வித்யாசாகர் பலதார மணத்திற்கு (polygamy) எதிராக பிரச்சாரம் செய்தார். 1857ஆம் ஆண்டில், குலின் பிராமணர்களிடையே பலதார மணத்தை நிறுத்த 25,000 கையொப்பங்களுடன் ஒரு மனு அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் சிப்பாய் கிளர்ச்சி காரணமாக, நடவடிக்கை தாமதமானது. பின்னர், 1866ஆம் ஆண்டில், வித்யாசாகர் 21,000 கையொப்பங்களுடன் மற்றொரு மனுவைத் தயார் செய்ய உதவியாக இருந்தார்.


8. 1870ஆம் ஆண்டுகளில், வித்யாசாகர் ஒன்றுக்கு மேற்பட்ட பலதார முறைக்கு எதிராக இரண்டு சிறந்த விமர்சனங்களை எழுதினார். புனித நூல்களால் பலதார முறை அனுமதிக்கப்படாததால், சட்டத்தால் அதை அடக்குவதற்கு எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது என்று அரசாங்கத்திடம் வாதிட்டார்.


9. அக்டோபர் 14, 1855 அன்று, வித்யாசாகர் இந்திய அரசாங்கத்திடம் ஒரு மனு அளித்தார். இந்து விதவைகளின் திருமணத்திற்கான அனைத்து தடைகளையும் நீக்கவும், அத்தகைய திருமணங்களிலிருந்து பிறக்கும் குழந்தைகளை சட்டப்பூர்வமானதாக அறிவிக்கவும் ஒரு சட்டத்தை இயற்றுவதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.


10. ஜூலை 16, 1856 அன்று, சட்டம் XV என அழைக்கப்படும் இந்து விதவைகள் மறுமணச் சட்டம் (Hindu Widows’ Remarriage Act) இயற்றப்பட்டது. வித்யாசாகரால் ஈர்க்கப்பட்டு, பல இலக்கியவாதிகள் வங்கத்திலும் பிற இடங்களிலும், குறிப்பாக மகாராஷ்டிராவில், விதவைகளின் மறுமணத்தை ஆதரிக்கும் நாடகங்களைத் தயாரித்தனர்.


19ஆம் நூற்றாண்டின் முக்கிய சமூக சீர்திருத்தவாதிகள் பெண்களின் உரிமைகளுக்காக போராடினர்


1. இராஜா ராம்மோகன் ராய் (1772 முதல் 1833 வரை): ‘இந்திய மறுமலர்ச்சியின் தந்தை’ (father of the Indian Renaissance) என்று அழைக்கப்பட்ட இவர், கல்வியின் நவீனமயமாக்கலுக்காக, குறிப்பாக, மேற்கத்திய பாடத்திட்டத்தின் அறிமுகத்திற்காக பிரச்சாரம் செய்தார். பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். அவர் சதி நடைமுறையின் கடும் எதிர்ப்பாளராக இருந்தார், அவரது முயற்சிகளால் பெங்கால் சதி ஒழுங்குமுறை, 1829 (Bengal Sati Regulation, 1829) நிறைவேற்றப்பட்டது. இது சதி முறையை தடை செய்தது.


2. சாவித்ரிபாய் பூலே (1831 முதல் 1897 வரை): ஒரு சமூக சீர்திருத்தவாதி, தலித் மக்களின் அடையாளம், கல்வியாளர் மற்றும் கவிஞராக கருதப்படும் சாவித்ரிபாய பூலே புனேயில் உள்ள பிடேவாடாவில் முதல் பெண்கள் பள்ளியை 1848ஆம் ஆண்டு திறந்தார். தனது கணவர் ஜ்யோதிபா பூலேவுடன் சேர்ந்து, சாவித்ரிபாய் 18 பள்ளிகளை நிறுவினார். இதில் ஒதுக்கப்பட்ட சாதியினருக்கான பள்ளிகளும் அடங்கும். இந்த தம்பதியர் பால்ஹத்யா பிரதிபந்தக் க்ரிஹா சிசுக்கொலை தடுப்பு இல்லம் (Balhatya Pratibandhak Griha) என்ற மையத்தையும் திறந்தனர். கர்ப்பிணி விதவைகள் மற்றும் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களுக்கு பாதுகாப்பாக தங்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வசதி செய்தனர்.


3. தயானந்த சரஸ்வதி (1824 முதல் 1883 வரை): தயானந்த சரஸ்வதி ஆர்ய சமாஜை (Arya Samaj) நிறுவனர். பெண்கள் குறித்த அவரது கருத்துகள் அக்கால கட்டத்தின் மரபுவழி இந்து சிந்தனைக்கு எதிராவையாக இருந்தன. அவர் பெண்களின் கல்விக்காகவும், குழந்தைத் திருமணம் போன்ற 'பிற்போக்கு நடைமுறைகளுக்கு' (regressive practices) எதிராகவும் பிரச்சாரம் செய்தார். அவரது நம்பிக்கைகளில் உருவ வழிபாட்டையும், இந்து மதத்தின் அதிகப்படியான சடங்கு மரபுகளையும் நிராகரித்தல், பெண் கல்விக்கு ஆதரவு, குழந்தை திருமணத்திற்கு எதிராகப் பேசுதல் மற்றும் தீண்டாமையை எதிர்ப்பது ஆகியவை அடங்கும்.


4. பெஹ்ராம்ஜி மலபாரி (1853 முதல் 1912 வரை): சேவா சதன் சமூக சமூகத்தை (Seva Sadan society) நிறுவனர். பெஹ்ராம்ஜி மலபாரி, ஒரு பார்சி ஆர்வலர். விதவை மறுமணத்திற்கு ஆதரவளித்தார் மற்றும் பெண்களின் சட்டபூர்வ உரிமைகளை ஆதரித்தார். அவர் "The Indian Problem", "An Appeal from the Daughters of India", "Notes on Child Marriage and Widow Remarriage" உள்ளிட்ட கட்டுரைகளை எழுதினார். இவை அனைத்தும் 1891ஆம் ஆண்டு இந்திய நீதித்துறை "The Age of Consent Bill" மசோதாவை நிறைவேற்ற ஒரு உந்துசக்தியாக இருந்தது. இந்த மசோதா பெண்கள் சட்டப்பூர்வமாக திருமண வயதை 10 வயதிலிருந்து 12 வயதாக உயர்த்தியது.


Original article:

Share: