கப்பல் கட்டுமானத்திற்கான ஊக்கத்தொகைகள் நீண்டகால ஏற்றுமதி வாய்ப்புகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவின் கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ரூ.69,725 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும். இது 2015ஆம் ஆண்டு திட்டத்தை மாற்றும். கடந்த 10 ஆண்டுகளில், இலாபகரமான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் சில கப்பல் கட்டும் தளங்களை பரபரப்பாக வைத்திருந்தாலும், இந்தியா முழுவதும் ஆறு சிறிய வணிகக் கப்பல்கள் மட்டுமே கட்டப்பட்டன.
பெரிய வணிகக் கப்பல்களைக் கட்டும் இந்தியாவின் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது உள்ளது. புதிய தொகுப்பு இந்தத் திறனை 4.5 மில்லியன் மொத்த டன்னாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கப்பல் கட்டும் கூடங்களை அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கொள்கைகளுக்காக (management principles) மேம்படுத்துதல், கப்பல் கட்டுதல் உதிரிபாகங்களுக்கான (shipbuilding ancillaries) தொழிற்சாலைகளைக் கொண்ட தொகுப்புகளில் (clusters) புதிய கூடங்களை ஊக்குவித்தல் மற்றும் புதிய கப்பல் கட்டுமானத்திற்கான (newbuilds) நிதியுதவிக்காக கப்பல் உரிமையாளர்களை (shipowners) ஆதரித்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இருப்பினும், இதேபோன்ற முந்தைய திட்டம் பெரும்பாலும் தோல்வியடைந்ததால் அதன் வெற்றி குறித்து சந்தேகங்கள் உள்ளன.
உலக அளவில், கப்பல் கட்டுதல் ஒரு சிறந்த கலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரிய, ஜப்பானிய அல்லது சீன போன்ற நாடுகளில் கூட, பெரிய வணிகக் கப்பல்களின் பகுதிகள் வெளியே முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு, 1,000 டன் அளவு கொண்ட பெரிய கிரேன்களை கொண்டு நகர்த்தப்பட்டு, அங்கு அவை ஒன்றாக இணைக்கப்படுகின்றன. நவீன கப்பல் கட்டும் தளங்கள் சேர்க்கை வரிசைகளைப் (Assembly lines) போல வேலை செய்யும் அளவுக்குப் பெரியதாக உள்ளது. கடந்த காலத்தில், கப்பலின் தளத்தைத் தொடங்குவதிலிருந்து (keel-laying) தண்ணீரில் உள்ள கொண்டு செல்வது வரை அதிக நேரம் இருந்தது. இப்போது, இதற்கு 3 முதல் 4 மாதங்கள் மட்டுமே ஆகும். ஒரு பெரிய வணிகக் கப்பலுக்கான எஃகு முதன்முதலில் வெட்டப்பட்டதிலிருந்து கடலில் கப்பலைச் சோதிப்பது வரை சுமார் ஒரு வருடம் ஆகும். இந்தியாவில், பெரும்பாலான கப்பல் கட்டும் தளங்கள் போதுமான நீளமாக இல்லை, மேலும் அத்தகைய முன் தயாரிப்புக்குத் தேவையான கிரேன் திறன், இடம் மற்றும் தொழில்நுட்பம் இல்லை.துணைப் பொருட்கள் மற்றொரு தடையாகும்.
இந்தியாவில், ஒரு கப்பலைக் கட்டுவதற்கு பொதுவாக 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும். இந்தியா நீண்ட காலமாக இலாபம் ஈட்டாமல் சிக்கித் தவிக்கிறது. இதனால் தான் பல இந்திய கப்பல் உரிமையாளர்கள் புதிய கப்பல்களை வாங்குவதில்லை. கடந்த கால மானியங்கள் அதிக செலவுகளுக்கு உதவியிருந்தாலும் கூட அவர்கள் அதை செய்யவில்லை. கப்பல் கட்டும் தளத்தை மேம்படுத்துவது இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். உதாரணமாக, சீனா கப்பல் கட்டுதலை சிறப்பாகத் திட்டமிட்டு தொழிலாளர்களுக்கான பயிற்சி மையங்களை உருவாக்கியுள்ளது. இந்தக் கட்டத்தில், இந்தியா 500 மொத்த டன் அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய கப்பல்களைக் கட்டுவதன் மூலம் தொடங்க வேண்டும். பிரச்சனை என்னவென்றால், புதிய கப்பல் கட்டுமானத்தை உள்கட்டமைப்பாக வகைப்படுத்துவது மலிவான கடன்கள் மற்றும் நீண்ட திருப்பிச் செலுத்தும் காலங்கள் மூலம் நிதிச் செலவுகளைக் குறைத்திருந்தாலும், இந்த நன்மைகள் பெரிய கப்பல்களுக்கு மட்டுமே., சிறிய கப்பல்களுக்கு அல்ல.
கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிக்க, நீண்ட கால ஓப்பந்தங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் புதிய கப்பல்களில் முதலீடு செய்வதில் இந்திய கப்பல் உரிமையாளர்கள் நம்பிக்கையுடன் இல்லை. ஏனெனில், இங்கு தெளிவான நீண்டகால தேவை இல்லை மற்றும் தாமதங்கள் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, காக்கிநாடா மற்றும் கொச்சி போன்ற இடங்களில் இந்தியா பசுமை எரிபொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால், பசுமை கப்பல்களை உருவாக்கவோ அல்லது கொள்முதல் ஒப்பந்தங்களைப் பாதுகாக்கவோ இதைப் பயன்படுத்தவில்லை. அரசுக்கு சொந்தமான மின் நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கும், எண்ணெய் நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயுக்கும் நீண்டகால கப்பல் ஒப்பந்தங்கள் மற்றும் கால அட்டவணைகள் போன்றவை கப்பல் கட்டுமானத்தைத் மேம்படுத்த உதவும்.