சமீபத்திய உலகளாவிய Global Burden of Disease மதிப்பீடுகளின்படி, இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, 2050ஆம் ஆண்டுக்குள் 30.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் மற்றும் 18.6 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்:
- 2023ஆம் ஆண்டில், சுமார் 18.5 மில்லியன் புதிய புற்றுநோய் நோயாளிகளும், 10.4 மில்லியன் புற்றுநோயால் இறப்புகளும் ஏற்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
- மறுபுறம், புற்றுநோய் நோயாளிகளின் விகிதம் உண்மையில் 1990ஆம் ஆண்டில் 100,000 பேருக்கு 220.6ஆக இருந்தது. 2023ஆம் ஆண்டில் 205.1ஆகக் குறைந்துள்ளது. மேலும், இது 2025ஆம் ஆண்டில் மேலும் குறையக்கூடும். இது புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்புகளும் அதிகரிப்பதற்கு அதிகரித்து வரும் வயதான மக்கள்தொகையே காரணம் என்பதைக் குறிக்கிறது.
- இந்த ஆய்வின்படி, பெரும்பாலான புற்றுநோய் வழக்குகளும் இறப்புகளும் இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்கின்றன. புதிய நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மற்றும் புற்றுநோய் இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு இந்த நாடுகளில் தான் உள்ளனர்.
- டெல்லியில் உள்ள AIIMS-மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணரும், இந்த ஆய்வின் ஒத்துழைப்பாளர்களில் ஒருவருமான டாக்டர் அபிஷேக் சங்கர் கூறுகையில், நாம் இப்போது பல முனைகளில் பணியாற்ற வேண்டும். முதலாவதாக, மக்கள் தவறான கருத்துக்களை நம்புவதைத் தடுக்கவும், ஆரம்பத்திலேயே மருத்துவ உதவி பெற ஊக்குவிக்கவும் தொடர்ச்சியான விழிப்புணர்வு திட்டங்கள் நமக்குத் தேவை.
- இரண்டாவதாக, அனைத்து பங்குதாரர்களும் இதில் ஈடுபட வேண்டும். புற்றுநோய்களுக்கான தலையீடுகள் பெரும்பாலும் புற்றுநோயியல் நிபுணர்களால் வழிநடத்தப்படுகின்றன. ஆனால், அது போதுமான நடவடிக்கையாக இருக்காது. மனித உடலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு வகையான புற்றுநோயைப் பெறலாம் மற்றும் விளக்கக்காட்சிகள் எதுவும் சீரானதாக இல்லை. புற்றுநோய்களை விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க அனைவரையும் ஈடுபடுத்த வேண்டும்.
- புற்றுநோய் இறப்புகளில் சுமார் 42 சதவிகிதம் புகையிலை மற்றும் ஆல்கஹால் பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயின் மோசமான கட்டுப்பாடு போன்ற மாற்றக்கூடிய ஆபத்து காரணிகளால் ஏற்படுகின்றன என்று ஆய்வு மதிப்பிடுகிறது. இதன் பொருள் நடத்தை மாற்றத்தின் மூலம் கணிசமான எண்ணிக்கையிலான புற்றுநோய் வழக்குகள் மற்றும் இறப்புகளைத் தடுக்க முடியும்.
- இந்த சாளரம் இந்தியாவிற்கு பெரியது. இந்தியாவில் 70 சதவீத புற்றுநோய்களுக்கு இந்த மாற்றக்கூடிய ஆபத்து காரணிகள் காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் ஷங்கர் கூறுகிறார்.
- நாட்டில் புற்றுநோயைக் குறைக்க, நீண்டகால நோய்களை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும், காற்றின் தரத்தை மேம்படுத்த வேண்டும், தொற்றுகளைத் தடுக்க பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், மேலும் HPV மற்றும் ஹெபடைடிஸ் B க்கு தடுப்பூசி திட்டங்களை நடத்த வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா?
- புகையிலை பயன்பாடு உலகின் மிகப்பெரிய சுகாதார ஆபத்துகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த இறப்புகளில் 7 மில்லியனுக்கும் அதிகமானவை புகையிலையை நேரடியாகப் பயன்படுத்துபவர்களால் ஏற்படுகின்றன என்று சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (Institute for Health Metrics and Evaluation (IHME)) ஆய்வு முடிவு தெரிகிறது.
- புகையிலை பயன்பாட்டை எதிர்த்துப் போராட நாடுகளுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்டமைப்பு மாநாடு (Framework Convention on Tobacco Control (WHO FCTC)) என்ற திட்டத்தைக் கொண்டுள்ளது. இதை ஆதரிக்கும் வகையில், புகையிலை கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்காக WHO MPOWER நடவடிக்கைகளை உருவாக்கியது.
- MPOWER நடவடிக்கைகள், WHO FCTCஇல் உள்ள புகையிலைக்கான தேவையைக் குறைப்பதற்கான பயனுள்ள தலையீடுகளை நாடு அளவில் செயல்படுத்துவதில் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. MPOWER அளவீடுகள் பின்பவருவனவற்றை குறிப்பிடுகிறது,
M – எத்தனை பேர் புகையிலை பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணித்து தடுப்பு முயற்சிகளைச் சரிபார்த்தல்.
P – புகையிலை புகையிலிருந்து மக்களைப் பாதுகாக்கத்தல்.
O – புகையிலையை விட்டு வெளியேற விரும்பும் மக்களுக்கு உதவி வழங்குதல்.
W – புகையிலையின் ஆபத்துகள் குறித்து அனைவருக்கும் எச்சரிக்கை செய்தல்.
E – புகையிலை விளம்பரங்களுக்கு தடைகளை அமல்படுத்துதல்.
R – புகையிலை பொருட்களின் விலையை அதிகரிக்க வரிகளை உயிர்த்துதல்.
- தொலைக்காட்சி, வானொலி, அச்சு மற்றும் டிஜிட்டல் தளங்கள் உட்பட அனைத்து வகையான ஊடகங்களிலும் புகையிலை விளம்பரம், ஊக்குவிப்பு மற்றும் உதவித்தொகை (tobacco advertising, promotion and sponsorship (TAPS)) ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இந்தியா கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.
— பொழுதுபோக்கு ஊடகங்களில் புகையிலை பயன்பாட்டை சித்தரிப்பதை கட்டுப்படுத்த, மையம் 2012ஆம் ஆண்டில் புகையிலை இல்லாத திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி விதிகளை அறிமுகப்படுத்தியது. இது சினிமா மற்றும் தொலைக்காட்சி போன்ற பாரம்பரிய தளங்களில் கவனம் செலுத்துகிறது.