இந்தியாவுக்கு ஒரு திட்டம் தேவை -சச்சிதானந்த் சுக்லா

 உலக வர்த்தக அமைப்பில் ‘சிறப்பு மற்றும் வேறுபட்ட அணுகுமுறையை’ (Special and Differential Treatment (SDT)) நாடப்போவதில்லை என்று சீனா கூறியுள்ளது. இது இந்தியாவிற்க்கு என்ன அர்த்தம்?


உலகளாவிய வர்த்தகத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையில், எதிர்காலத்தில் உலக வர்த்தக அமைப்பு  பேச்சுவார்த்தைகளில் இனி சிறப்பு மற்றும் வேறுபட்ட முறையை  நாடப்போவதில்லை என்று ஐ.நா பொதுச் சபை நிகழ்வின் போது சீனா அறிவித்தது.  சீனா தன்னை வளர்ந்து வரும் நாடாக அழைப்பதை இந்த சலுகை  பாதுகாக்கும். அதே வேளையில், குறைவான மானிய வரம்புகள் மற்றும் ஒப்பந்தங்களை படிப்படியாகச் செயல்படுத்துதல் போன்ற அனைத்து சலுகைகளையும் பாதுகாக்கும் நிலையில், அதிகரித்து வரும் அமெரிக்க வரிவிதிப்பு அழுத்தங்கள் மற்றும் நடைமுறைக்கு நீண்டகால அமெரிக்க எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு இராஜதந்திர ரீதியின் பின்வாங்கலாகும். உலக வர்த்தக அமைப்பு  இதை சீர்திருத்தத்திற்கான திருப்புமுனை என்று குறிப்பிட்டாலும், இதை விமர்சிப்பவர்கள் அதை குறியீடாகவே பார்க்கிறார்கள். இது, சீனாவின் விவசாய மற்றும் தொழில்துறைக்கான பலன்களை அகற்றாமல் விமர்சனங்களைத் திசைதிருப்ப அனுமதிக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.


இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த வளர்ச்சி தீவிரமான ஆய்வின் ஒரு முன்னோடியாகும். அதிபர் டொனால்ட் டிரம்ப், பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்களுக்கு (branded and patented pharmaceutical products) 100 சதவீத வரிவிதிப்புகளை புதியதாக அறிவித்துள்ளார். மேலும் மரச்சாமான்கள், சமையலறை பெட்டிகள் மற்றும் டிரக்குகள் மீதான அதிகளவிலான வரிவிதிப்புகளையும் அறிவித்துள்ளார். இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகும். இந்தியா தனது ’வளரும் நாடு’ என்கிற தரநிலையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வளரும்போது, ​​இந்த அழுத்தம் அதிகரிக்கும்.


உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் உயர்வு, 1995-ல் உலக வர்த்தக நிறுவனத்தில் இணைந்ததிலிருந்து ஒரு முக்கிய மூலக்கல்லாக இருக்கும் சிறப்பு மற்றும் வேறுபட்ட நடைமுறை (Special and Differential Treatment (SDT)) மீதான அதன் நம்பிக்கையுடன் மோதுகிறது. சிறப்பு மற்றும் வேறுபட்ட நடைமுறை GATT அமைப்பிலிருந்து வருகிறது. இது அதிக வரிவிதிப்புகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட இணக்க காலங்கள் போன்ற நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது. உலகில் தனிநபர் வருமானம் 136 வது இடத்தில் உள்ள ஒரு நாட்டில் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கு இவை மிக முக்கியமானவை.


Amber Box :  அம்பர் பெட்டிகள் என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பொருட்களை மற்ற நாடுகளின் பொருட்களுடன் ஒப்பிடும்போது மலிவானதாக மாற்றுவதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை சிதைக்கக்கூடிய மானியங்களைக் குறிக்கும். அம்பர் மானியங்களுக்கு எடுத்துக்காட்டுகள், மின்சாரம், விதைகள், உரங்கள், நீர்ப்பாசனம், குறைந்தபட்ச ஆதரவு விலைகள் போன்றவை ஆகும்.


இந்த விவாதத்திற்கு விவசாயம் முக்கியமானதாக உள்ளது. இது இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் பாதிப் பேரை வேலைக்கு அமர்த்துகிறது மற்றும் 1.4 பில்லியன் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்தத்தின் (Agreement on Agriculture (AoA)) கீழ், மானியங்கள் குறைவாக உள்ளன. வர்த்தகத்தை சிதைக்கும் அம்பர் பெட்டியானது (Amber Box) வளரும் நாடுகளுக்கான உற்பத்தி மதிப்பில் 10 சதவிகிதம், வளர்ந்த நாடுகளுக்கு 5 சதவிகிதம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியா குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியங்களுக்கு பிரிவு 6.2 என்ற நிலையில் விலக்குகளைப் பயன்படுத்துகிறது. அரிசி மற்றும் கோதுமை போன்ற பிரதான பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகள்  போன்ற வழிமுறைகள் மூலம் ஆண்டுதோறும் $40 பில்லியனுக்கும் அதிகமாக நிதியளிக்கிறது. இந்த திட்டங்கள் 800 மில்லியன் மக்களுக்கு மானிய விலையில் தானியங்களை வழங்கும் பொது விநியோக முறையை ஆதரிக்கின்றன. இருப்பினும், 1986-88 குறிப்பு விலைகள், இந்தியாவின் அறிக்கையிடப்பட்ட மொத்த ஆதரவு அளவீட்டை (Aggregate Measurement of Support (AMS)) உயர்த்துவதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இது பெரும்பாலும் 10 சதவீத வரம்பை மீறுகிறது. அமெரிக்காவும் கெய்ர்ன்ஸ் குழுமமும் இதை விமர்சித்து, இது சந்தையை சிதைப்பதாகக் கூறுகின்றன.

                                                                                                                                                                                                                                                               

OECD மதிப்பீடுகளின்படி, வளர்ந்த நாடுகள் 2023-ம் ஆண்டில் உலகளாவிய வேளாண் மானியங்களில் $850 பில்லியனை வழங்கின. இருப்பினும், அவர்கள் இந்தியாவின் திட்டங்களை கடுமையாக விமர்சிக்கின்றனர். வளர்ந்த நாடுகள் 2005 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் வாக்குறுதி அளித்ததால், அவர்கள் ஏற்றுமதி உதவிகளை நிறுத்த வேண்டும் என்று கோரப்படுகிறது. இது விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் உதவிகளை (உதாரணமாக, உரம் வாங்க பணம் நேரடியாக வழங்குதல்) மாற்றி, ஆராய்ச்சி, ஆலோசனைச் சேவைகள் மற்றும் காலநிலைக்கு தாங்கும் பயிர்கள் வளர்ப்பு போன்ற பாதுகாப்பான உதவிகளாக மாற்ற வேண்டும் என்று கூறுகிறது..


இந்தியா வளர்ச்சி நிலையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதன் தாக்கங்கள் மிகவும் மோசமானவையாக இருக்கலாம். உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்தத்தின் (Agreement on Agriculture (AoA)) காலக்கெடுவின்படி, ஒரு பத்தாண்டுகாலத்தில் 20-30 சதவிகிதம் மானியங்களைக் குறைக்கலாம். ஊட்டச்சத்து குறைபாடு, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35 சதவீதத்தை பாதிக்கிறது. இது தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். 2023 சர்க்கரை மானியக் குழு போன்ற சமீபத்திய WTO பிரச்சனைகள் இந்த நிலைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்தியா SDT மூலம் அபராதங்களைத் தவிர்த்தது, ஆனால் எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள் பரஸ்பரத்தை கோரக்கூடும்.


இந்தியாவின் சேவைகள் துறை ஆதிக்கம் செலுத்துகிறது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 சதவீதத்தை உருவாக்குகிறது. இது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை அளிக்கிறது. உள்நாட்டில், 90 சதவீத உர மானியங்களை உள்ளடக்கிய நேரடி பலன் பரிமாற்றம்  போன்ற சீர்திருத்தங்களும் உதவக்கூடும். குறிப்பாக, பின்வரும் படிநிலைகள் இந்தியா தனது முன்னுரிமைகளை சமநிலைப்படுத்த உதவும். அவை நடைமுறை மற்றும் பயனுள்ள முக்கியத்துவத்தை உறுதிசெய்யவும் உதவும்.


முதலாவது, விவசாயம். 2013 பாலி அமைச்சர்களின்  பொது பங்கு வைத்திருப்பு மீதான  இடைக்கால இடைக்கால "சமாதான விதியை" 2023 க்கு அப்பால் நீட்டிக்க G33 கூட்டணியை வழிநடத்த இந்தியா பாடுபட வேண்டும், இது குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் பொது விநியோக முறையை (PDS) WTO தகராறுகளிலிருந்து 2030 வரை பாதுகாக்கிறது. 2005 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் உறுதியளித்தபடி, வளர்ந்த நாடுகள் ஏற்றுமதி மானியங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இது இணைக்கப்படலாம். உரங்கள் போன்ற உள்ளீட்டு மானியங்களை கிரீன் பாக்ஸ் நடவடிக்கைகளுக்கு இந்தியா மாற்றலாம். எடுத்துக்காட்டுகளில் ஆராய்ச்சி, நீட்டிப்பு சேவைகள் மற்றும் காலநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள் ஆகியவை அடங்கும். கிரீன் பாக்ஸ் மானியங்கள் WTO விதிகளைப் பின்பற்றுகின்றன. மேலும், வரம்புகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. இந்தியாவின் 2040 நிகர-பூஜ்ஜிய இலக்குகளை ஆதரிக்கின்றன. தற்போதைய சந்தைகளைப் பிரதிபலிக்கும் வகையில் உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்தத்தின் விலைகளைப் புதுப்பிக்க இந்தியா மேலும் அழுத்தம் கொடுக்கலாம், இது மொத்த ஆதரவு அளவீட்டு  மீறல்களைக் குறைக்கும். 2024-ம் ஆண்டு ICRIER ஆய்வு, இது இந்தியாவின் அறிவிக்கப்பட்ட மானிய சிதைவுகளை பாதியாகக் குறைக்கக்கூடும் என்று கூறுகிறது.


இரண்டாவது, மின்-வணிகம், இந்தியா பன்முக மின்-வணிகம் தொடர்பான பேச்சுக்களில் இணைய வேண்டும். தேசிய பாதுகாப்பிற்கான விதிவிலக்குகளை வைத்திருக்கும் அதே வேளையில், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் எல்லை தாண்டிய தரவுகளில் இது உறுதிமொழிகளை வழங்க முடியும். பதிலுக்கு, வளர்ந்த சந்தைகளுக்கு இந்தியா கட்டணமில்லா அணுகலைப் பெறலாம். உள்நாட்டில், இந்தியா திறனை வலுப்படுத்தி டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பை (ONDC) விரிவுபடுத்த வேண்டும். இது MSMEகள் உலகளாவிய மின் வணிகத்தில் பங்கேற்கவும், சிறப்பு மற்றும் வேறுபட்ட நடைமுறை  கட்டணப் பாதுகாப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உதவும். தரவு உள்ளூர்மயமாக்கலில் நெகிழ்வுத்தன்மையையும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். WTO பேச்சுவார்த்தைகளில், அது வரிசைப்படுத்தப்பட்ட தரவுக்கான விதிமுறைகளை முன்மொழியலாம். இது வளரும் நாடுகளுக்கு உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்தியாவின் தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் நீண்ட மாற்ற காலங்களை வழங்கும்.


மூன்றாவது, முக்கியமற்ற துறைகளில் அத்தியாவசியமற்றசிறப்பு மற்றும் வேறுபட்ட நடைமுறையை இந்தியா படிப்படியாக அகற்ற வேண்டும். ஒரு பத்தாண்டுகாலத்தில் படிப்படியாக கட்டணப் பாதுகாப்புகளைக் குறைக்க வேண்டும். இது புவியியல் முழுவதும் சந்தை அணுகலைப் பெற இந்தியாவுக்கு உதவும். இந்திய ஏற்றுமதிகள் வரிகளை எதிர்கொள்ளும் பகுதிகளிலும் இது உதவும். பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு சிறப்பு மற்றும் வேறுபட்ட நடைமுறை  விலக்குகளைப் பெற இந்தியா வேண்டும். செயலாக்கம் மற்றும் குளிர்பதன சேமிப்பை மேம்படுத்த கிரீன் பாக்ஸ் நிதிகளைப் பயன்படுத்த வேண்டும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்கும். இவை அனைத்தும் WTO வரம்புகளை மீறாமல் செய்யப்பட வேண்டும்.


நான்கு, அறிவுசார் சொத்து. அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் (Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)) பிரிவு 31 இன் கீழ் இந்தியா கட்டாய உரிமம் மற்றும் காப்புரிமை எதிர்ப்பு விதிகளை வைத்திருக்க வேண்டும். 1.4 பில்லியன் மக்களுக்கான பொது சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது முக்கியம். 2001 தோஹா பிரகடனம் இந்த அணுகுமுறையை ஆதரிக்கிறது. இந்தியா படிப்படியாக முக்கியமான துறைகளில் கடுமையான அறிவுசார் சொத்துரிமை விதிகளுடன் (IP rules) இணங்க வேண்டும். இது இந்தியா வலுவாக உள்ள பகுதிகளில் சலுகைகளைப் பெற உதவும். அதே நேரத்தில், உயிரி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கான   கிரீன் பாக்ஸ் மாதிரி நிதியை இந்தியா அதிகரிக்க வேண்டும். இது பொதுவான ஏற்றுமதிகளை நம்பியிருப்பதைக் குறைக்கும். இது குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மருந்துகளுக்கான அணுகலை உறுதி செய்யும். 


இறுதியாக, இந்தியா ஒரு அடுக்கு சிறப்பு மற்றும் வேறுபட்ட நடைமுறைக்கான  கட்டமைப்பை முன்மொழிய வேண்டும். இந்த கட்டமைப்பு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது துறைசார் போட்டித்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. இது இந்தியா விவசாயப் பாதுகாப்புகளை வைத்திருக்க அனுமதிக்கும்.



Original article:

Share: