'துபாரே' தீர்ப்பு, மரண தண்டனை தொடர்பான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு பெரிய மாற்றமாகும். தண்டனை பாதுகாப்புகளை அடிப்படை உரிமைகளின் நிலைக்கு உயர்த்துவதன் மூலம், மரண தண்டனையை நிர்வாகம் சமத்துவம், நியாயம் மற்றும் உரிய செயல்முறையின் கடுமைகளிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியில் வசந்த சம்பத் துபாரே எதிர் இந்திய யூனியன் (Vasanta Sampat Dupare vs Union of India) வழக்கில் உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பின் மூலம் மரண தண்டனை நீதித்துறை கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மரண தண்டனை வழங்கும் நடைமுறைகளை பின்பற்றத் தவறுவது அடிப்படை உரிமைகளின் மீறலாகும் என்றும், இது மரண தண்டனையை ரத்து செய்ய வழிவகுக்கும் என்று நீதிமன்றம் அங்கீகரித்தது. மே 2009வழக்கில், சந்தோஷ் பரியார் எதிர் மகாராஷ்ட்ர அரசு (Santosh Bariyar vs State of Maharashtra) நீதிபதி எஸ்.பி. சின்ஹாவின் தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கிய இந்தத் தீர்ப்பு, சமத்துவம், நியாயம் மற்றும் உரிய செயல்முறை ஆகியவற்றின் அரசியலமைப்பு உத்தரவாதங்களுக்குள் மரண தண்டனை விதிக்கும் செயல்முறையை உறுதியாக நிலைநிறுத்துகிறது. இது சிறிய மாற்றமல்ல. மரண தண்டனை வழங்குவதற்கும் அரசியலமைப்பின் கீழ் நியாயம் மற்றும் நீதிக்கான தேவைக்கும் இடையிலான தொடர்பை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதை இது மாற்றுகிறது.
இந்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தை பாராட்ட, 1980ஆம் ஆண்டு பச்சன் சிங் எதிர் பஞ்சாப் அரசு (Bachan Singh vs State of Punjab) வழக்கில் நிறுவப்பட்ட தண்டனை சட்டத்தை நாம் மீண்டும் பார்க்க வேண்டும். மரண தண்டனையின் அரசியலமைப்பு செல்லுபடியை நிலைநிறுத்தும் போது, மரண தண்டனை வழக்குகள் குறிப்பிட்ட முறையில் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. 1973ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் (Criminal Procedure Code (CrPC)) நிறுவப்பட்ட சட்டத்தை தெளிவுபடுத்தி, மரண தண்டனை விதிக்க தேவையான ‘சிறப்பு காரணங்களை’ (special reasons) நீதிபதிகள் தீர்மானிக்கும்போது குற்றத்தின் சூழ்நிலைகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலான மரண தண்டனை தீர்ப்பளிப்பு, பச்சன் சிங் வழக்கில் விதிக்கப்பட்ட தீர்ப்பை பரவலாக பின்பற்றாத வரலாறாகும்.
பச்சன் சிங்கில் வழக்கில் நிறுவப்பட்ட நடைமுறைகளை கடைபிடிப்பதில் மரண தண்டனையின் செல்லுபடியாகும் நிபந்தனைகள் இருந்தபோதிலும், அனைத்து நிலைகளிலும் உள்ள நீதிமன்றங்கள் குற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தி, குற்றவாளியின் தனிப்பட்ட சூழ்நிலைகளை புறக்கணித்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் பல அமர்வுகள் இது போன்ற நவடிக்கைகளை விமர்சித்துள்ளன. ஆனால், பரியார் வழக்கில் நீதிபதி சின்ஹா, இந்த தோல்வியை அரசியலமைப்பு மீறலாக வடிவமைக்கும் முக்கிய நடவடிக்கையை எடுத்தார். இது வெறும் நீதித்துறை மேற்பார்வையின்மை அல்ல என்று கூறினார். மரண தண்டனை வழங்கும்போது, அரசியலமைப்பில் உள்ள விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் (constitutional prescriptions in full force) என்று நீதிபதி சின்ஹா கூறினார். ஆனால், இந்த விதிகளை மீறுவது எப்போதும் மரண தண்டனையை ரத்து செய்யும் என்று அவர் கூறவில்லை.
மரண தண்டனையை தக்க வைத்துக் கொண்ட பிற நாடுகளைப் போலவே, இந்தியாவில் மரண தண்டனை ஏழைகளுக்கும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது. தண்டனை வழங்குவதற்கு தேவையான தகவல்களை முன்வைக்க இத்தகைய குற்றவாளிகளின் இயலாமையை அங்கீகரித்து, நீதிபதிகள் அத்தகைய தகவல்களைத் தேட வேண்டும் என்ற அங்கீகாரம் அதிகரித்து வருகிறது. நீதிபதிகளின் இத்தகைய முன்னெடுப்பு பங்கு மனோஜ் எதிர் மத்திய பிரதேச அரசு (Manoj vs State of Madhya Pradesh) மே 2022ஆம் ஆண்டு வழக்கில் மூன்று நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. தண்டனை வழங்கும் போது நீதிபதிகளுக்கு குற்றவாளியைப் பற்றிய தகவல்கள் இருப்பதை உறுதிசெய்ய நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. சிறையில் நபரின் பின்னணி, மனநலம் மற்றும் நடத்தை பற்றிய அறிக்கைகளை அரசு வழங்க வேண்டும். இந்த அறிக்கைகள் ஒரு நன்னடத்தை அதிகாரி மற்றும் மருத்துவர்களிடமிருந்தும், பாதுகாப்பு குழுவின் எந்தவொரு அறிக்கைகளுடனும் வருகின்றன. பச்சன் சிங் மற்றும் பாரியாரில் வெளிப்படுத்தப்பட்ட இலட்சியங்களுக்கு தண்டனையை நெருக்கமாகக் கொண்டுவருவதாக மனோஜ் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு மூலம் நீதிமன்றங்கள் வழிகாட்டுதல்களை உருவாக்குவதாக உறுதியளித்தன.
இருப்பினும், மனோஜ் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு மூலம் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இந்தியாவின் விசாரணை நீதிமன்றங்களில் மரண தண்டனை வழங்கும் நிலையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டன என்பது வெளிப்படையாக தெரிகிறது. (The Square Circle Clinic) எங்கள் ஆராய்ச்சி, மனோஜ் வழிகாட்டுதல்கள் முன்மொழியப்பட்ட பிறகு விசாரணை நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட மரண தண்டனைகளில் 94 சதவீதம் இந்த வழிகாட்டுதல்களின் மொத்த மீறலில் இருப்பதை வெளிப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க நீதிபதிகளுக்கு மனோஜ் உதவுகிறார். ஆனால், இதில் விதிகள் மீறப்பட்டால் எந்த தண்டனையும் இல்லை. அதனால்தான் சமீபத்திய டுபாரே தீர்ப்பு மிகவும் முக்கியமானது.
முதல் முறையாக, தண்டனை நடைமுறை மற்றும் மனோஜ் வழிகாட்டுதல்களின் மீறல் முறைகேடு அல்ல, ஆனால் அது அடிப்படை உரிமைகளின் மீறல் என்று நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. மனோஜ் நெறிமுறையை புறக்கணிக்கும் தண்டனை வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது. ஏனெனில், அது அரசியலமைப்பின் பிரிவு 21இன் கீழ் குற்றவாளியின் வாழ்க்கான உரிமையை (right to life) பறிக்கிறது. இதன் பொருள், மனோஜ் விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், மரண தண்டனை ரத்து செய்யப்படும். மனோஜ் விதிகள் சட்டத்தில் ஒரு முக்கியமான மாற்றம் (substantial change in the law) என்பதால், அவை கடந்த கால வழக்குகளுக்கும் பொருந்தும். மனோஜுக்கு முன் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இந்த விதிகளைப் பின்பற்றும் புதிய விசாரணையைக் கோரலாம்.
இந்த தீர்ப்பு ஏழு மரண தண்டனை கைதிகளுக்கு விரைவான நிவாரணத்தை அளிக்கிறது. அதில் டுபரே வழக்கை கோரியவரும் அடங்கும். ஆனால், இது இன்னும் பலரை பாதிக்கிறது. இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 600 கைதிகள் பயனடையக்கூடும். ஏனெனில், தண்டனை விதிப்பதற்கான விதிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன. மனோஜ் விதிகள் இப்போது நியாயமான தண்டனை விசாரணையின் அவசியமான பகுதியாகும் என்று நீதிமன்றம் கூறியது. இது விதிகளை வெறும் ஆலோசனையிலிருந்து அரசியலமைப்பு வாக்குறுதியாக மாற்றுகிறது. மேலும் விதிகள் மீறப்பட்டால், மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
துபாரே தீர்ப்பு மரண தண்டனை தொடர்பான இந்தியாவின் அரசியலமைப்பு நீதித்துறை கொள்கையில் ஒரு முக்கிய மாற்றத்தை குறிக்கிறது. தண்டனை வழங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அடிப்படை உரிமைகளின் நிலைக்கு உயர்த்துவதன் மூலம், மரண தண்டனையின் நிர்வாகம் சமத்துவம், நியாயம் மற்றும் முறையான செயல்முறையின் கண்டிப்பான விதிகளிலிருந்து தப்ப முடியாது என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இது மரண தண்டனையைப் பயன்படுத்தக்கூடிய நிபந்தனைகளை கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு மரண தண்டனை முடிவும் அரசியலமைப்பு மதிப்புகளை முழுமையாக பிரதிபலிக்க வேண்டும் என்ற பாரியார் வழக்கில் நீதிபதி சின்ஹாவின் கருத்தை நீதிமன்றம் நிறைவேற்றியுள்ளது.
எழுத்தாளர் ஹைதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் The Square Circle Clinic (TSCC)) இயக்குநராக உள்ளார். TSCC (முன்னர் திட்டம் 39A) மே 2015 முதல் டுபாரை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது. மேலும், இந்த ரிட் மனுவில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனுக்கு விளக்கமளித்துள்ளது.