BioE3 கொள்கை மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் -ரோஷ்னி யாதவ்

 BioE3 கொள்கையின் கீழ், அரசாங்கம் இந்தியா முழுவதும் 16 உயிரியல் உற்பத்தி மையங்களை (biomanufacturing hubs) அமைக்க திட்டமிட்டுள்ளது. இது இறக்குமதி சார்பை குறைத்து நாட்டிற்குள் உற்பத்தியை அதிகரிக்கும். ஒரு வருடம் நிறைவு செய்த கொள்கை என்ன?


தற்போதைய செய்தி?


முக்கிய மருந்துகளை தயாரிப்பதற்கான செயல்படும் மருந்து முகவர்களிலிருந்து (active pharmaceutical agents) உயிரியல் எரிபொருள் உற்பத்திக்கு தேவையான நொதிகளும் (enzymes), உயிரியல் உர உற்பத்திக்கு தேவையான வினைப்பொருட்கள் (reagents) வரை, அரசாங்கம் தனது BioE3 கொள்கையின் கீழ் நாடு முழுவதும் சுமார் 16 உயிரியல் உற்பத்தி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இது இறக்குமதியை நம்புவதற்குப் பதிலாக இந்தியா இந்த பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய உதவும். இந்தச் சூழலில், சமீபத்தில் 1 வருடத்தை நிறைவு செய்த BioE3 கொள்கையைப் பற்றி அறிந்துகொள்வோம். மேலும், பொருளாதார வளர்ச்சிக்கு உயிரி தொழில்நுட்பத்தை (biotechnology) எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. ஒன்றிய அரசு கடந்த ஆண்டு 'உயர் செயல்திறன் உயிரியல் உற்பத்தியை வளர்ப்பதற்காக' தனது பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரியல் தொழில்நுட்ப (Biotechnology for Economy, Environment and Employment (BioE3)) கொள்கையை அறிமுகப்படுத்தியது. இந்த கொள்கை உயிரியல் தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலமும்,  இயற்கையான உயிரியல் அமைப்புகளில் காணப்படும் செயல்முறைகளை மீண்டும் உருவாக்கும் அல்லது பிரதிபலிக்கும் புதிய உற்பத்தி முறைகளை உருவாக்குவதன் மூலம் இதை அடைய முயல்கிறது.


2. BioE3 கொள்கை இந்தியா முழுவதும் பல உயிரியல் உற்பத்தி மையங்களை அமைப்பதை கருத்தில் கொள்கிறது. இந்த மையங்களில், தொழில்துறை கூட்டாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் (start-ups) சிறப்பு இரசாயனங்கள், நுண்ணறிவு புரதங்கள் (smart proteins), நொதிகள், செயல்பாட்டு உணவுகள் (functional foods) மற்றும் பிற உயிர்-பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதற்கான வசதிகளை நிறுவ முடியும்.


3. இந்தத் திட்டத்தின் கீழ் உயிரி உற்பத்தி மையங்கள் அமைக்கப்படுவதால், மருந்துகளுக்கான முக்கியமான பொருட்கள், உயிரி எரிபொருள்கள், உயிரி புரதங்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகளுக்குத் தேவையான வினையாக்கிகள் மற்றும் இந்தியா இறக்குமதியைச் சார்ந்திருக்கும் பிற இரசாயனங்கள் நாட்டிற்குள்ளேயே தயாரிக்கப்படும்.


4. உயிர் அடிப்படையிலான இரசாயனங்கள் மற்றும் என்சைம்கள், செயல்பாட்டு உணவுகள் மற்றும் நுண்ணறிவு புரதங்கள், துல்லிய உயிர் சிகிச்சை மருந்துகள் [precision biotherapeutics], காலநிலை எதிர்ப்பு விவசாயம், கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு [carbon capture and utilisation], மற்றும் எதிர்கால கடல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற ஆறு பகுதிகளில் இந்த மையங்கள் கவனம் செலுத்தும்.


5. தொடக்க நிலை நிறுவனங்கள் (start-ups) மற்றும் தனியார் நிறுவனங்கள் நாட்டிற்குள் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளை உருவாக்கக்கூடிய 1,000 தயாரிப்புகளின் பட்டியலை இறுதி செய்வதற்காக உயிரி தொழில்நுட்பத் துறை ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது.


6. உயிரியல் உற்பத்தி மையங்கள் ஆராய்ச்சி நிறுவனங்களில் அமைக்கப்படும். ஒரு குறிப்பிட்டவகை உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற தனியார் நிறுவனங்கள் அல்லது குறிப்பிட்ட தொழில்களுக்கான தற்போதைய அறிவு மையங்களுக்கு அருகில் அமைக்கப்படும்.


7. இந்த வசதிகளை அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி மையங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொடக்க நிலை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் பயன்படுத்தலாம். தனியார் நிறுவனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். முக்கியமாக நுகர்வு பொருட்கள், மனித வளம் மற்றும் பிற மேல்நிலை செலவுகளின் செலவை ஈடுகட்டுவதற்காக அவை பயன்படுத்தலாம்.


8. அதன் கொள்கையின்படி, தொடக்க நிலை நிறுவனங்களுக்கு உண்மையான செலவுகளில் அதிகபட்சம் 5% வசூலிக்கப்படும். அதே நேரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு செலவில் 15% வரை வசூலிக்கப்படலாம். இந்த வசதி எந்த அறிவுசார் சொத்துரிமையும் (intellectual property rights) கோராது என்றும் கொள்கை கூறுகிறது.


உயிரி தொழில்நுட்பத்தின் நன்மைகள்


1. உயிரி தொழில்நுட்பம் என்பது உயிரினங்களையும் அவற்றின் செயல்முறைகளையும் மாற்றி பயனுள்ள பொருட்கள் அல்லது தீர்வுகளை உருவாக்கும் அறிவியலாகும். இது மிகப் பெரிய மற்றும் மாறுபட்ட துறையாகும். இது மரபணுவியல், மரபணு பொறியியல், செயற்கை உயிரியல், உயிர் தகவலியல், மரபணு சிகிச்சை போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.


2. இந்தப் பகுதிகளில் உள்ள அறிவு மரபணு கோளாறுகளுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு அல்லது எடுத்துக்காட்டாக, சிறப்பு விரும்பத்தக்க பண்புகளைக் கொண்ட தாவரங்களின் புதிய வகைகளை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. இதுவரை, உயிரியல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் பெரும்பாலும் மருத்துவ அறிவியல் மற்றும் விவசாயத் துறைகளில் பயன்படுத்தப்பட்டன.


3. இருப்பினும், மரபணு திருத்த தொழில்நுட்பங்கள், புரத தொகுப்பு அல்லது மரபணு மாற்றப்பட்ட நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நொதிகளை வளர்க்கும் திறன் ஆகியவற்றில் சமீபத்திய முன்னேற்றங்கள், அதிகரித்த தரவு செயலாக்க திறன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு ஆகியவற்றுடன் இணைந்து, உயிரி தொழில்நுட்பத்திற்கான புதிய சாத்தியங்களைத் திறந்துவிட்டன.


4. செயற்கை ஆடைகள், நெகிழி, இறைச்சி அல்லது பால் மற்றும் எரிபொருள் போன்ற பாரம்பரிய பொருட்கள் நவீன உயிரியலைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சுற்றுச்சூழல் நட்பு மாற்றுகளைக் கொண்டிருக்க முடியும். அதேபோல், தொழில்துறையில் உள்ள பல இரசாயன செயல்முறைகள் இயற்கையான மற்றும் குறைந்த மாசுபடுத்தும் உயிரியல் செயல்முறைகளால் மாற்றப்படலாம்.


5. பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயன முறையில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெகிழிகள், பாலிலாக்டிக் அமிலம் (polylactic acid) போன்ற பலவிதமான உயிர் பிளாஸ்டிக்குகளால் (bioplastics) மாற்றப்படலாம். இவை மக்கும் தன்மை கொண்டவை. இந்த உயிர் நெகிழிகளுக்குள் சோள மாவு அல்லது கரும்பு போன்ற புதுப்பிக்கத்தக்க மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய உயிரியல் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரிய நெகிழிகளுக்கான மூலமான ஹைட்ரோகார்பன்களிலிருந்து தயாரிக்கப்படவில்லை.


6. சில வகையான பாக்டீரியா மற்றும் பாசி போன்ற நுண்ணுயிரிகளையும் (micro-organisms) வளிமண்டலத்திலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை பிடிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம். காலநிலை மாற்றத்தின் காலத்தில் இது ஒரு முக்கிய உயிர் செயல்முறையாகும்.


7. செயற்கை உயிரியல் துறையில், குறிப்பிட்ட பண்புகள் அல்லது புரதங்கள் மற்றும் நொதிகள் போன்ற உயிர் இரசாயனங்களைக் கொண்ட புதுமையான உயிரினங்களை விரும்பிய செயல்பாடுகளைச் செய்வதற்காக புதிதாக வடிவமைக்க முடியும். உடல் உறுப்புகளை உருவாக்கும் செயல்முறை (organogenesis) அல்லது உறுப்பு பொறியியல் (organ engineering) எனப்படும் ஒரு செயல்முறையைப் பயன்படுத்தி, ஆய்வகங்களில் உறுப்புகளை வளர்க்கலாம். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு நன்கொடையாளர்களைச் சார்ந்திருப்பதை நீக்கும்.


8. உயிரியல் தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறு இப்போதுதான் வெளிப்படத் தொடங்குகிறது. விலங்குகளில் இருந்து பெறப்படாத பால் (animal-free milk) போன்ற சில மாற்றுப் பொருட்கள் ஏற்கனவே சில இடங்களில் விற்கப்படுகின்றன. ஆனால், இந்தப் புதிய தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில், அவை பொருளாதாரத்தையும் முக்கிய விவகாரங்களையும் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதையும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அறிவியல் நீரோட்டம் (Vigyan Dhara)


1. கடந்த வருடம், ஒன்றிய அமைச்சரவையினால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (Department of Science and Technology (DST)) நடத்திய பல அறிவியல் வளர்ச்சி திட்டங்கள் ஒன்றாக இணைத்து அறிவியல் நீரோட்டம் (Vigyan Dhara) என்ற புதிய முயற்சியாக உருவாக்கப்பட்டது.


2. விஞ்ஞான நதி, ஒரு ஒன்றிய துறைத்திட்டமாகும். அறிவியல் ஆராய்ச்சிக்கு இளைய திறமையை ஈர்க்க வேலை செய்யும் INSPIRE திட்டம் உள்ளிட்ட பல தற்போதைய தொழில்நுட்பத் துறை திட்டங்களை இணைக்கிறது.


3. மனித மற்றும் நிறுவன திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயன்பாடு அறிவியல் நீரோட்டம் போன்ற மூன்று பரந்த கூறுகளைக் கொண்டுள்ளது.


4. உயிரி தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, புதிய முயற்சி ஆறு கருப்பொருள் பகுதிகளில் புதுமை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


(i) திட்டத்தின் முதலாவது பகுதி, உயிரி-வேதியியல், உயிரி-நொதிகள் மற்றும் உயிரி-பாலிமர்களில் கவனம் செலுத்தும். இவை முக்கியமாக தொழில்துறை, நுகர்வோர் மற்றும் அறிவியல் பயன்பாடுகளைக் கொண்டிருக்கும்.


(ii) திட்டத்தின் இரண்டாம் பகுதி, வழக்கமான விவசாயத்தை ஆதரிக்கும் சிறப்பு உணவுகளை உருவாக்குவதாகும். இது உணவு உற்பத்திக்காக நிலத்தின் அதிகப்படியான பயன்பாட்டைக் குறைக்க உதவும்.


(iii) திட்டத்தின் மூன்றாவது பகுதி, உயிரியல் சிகிச்சை முறைகளில் (Bio-therapeutics) கவனம் செலுத்தும்.


(iv) திட்டத்தின் நான்காவது பகுதி, விவசாயத்தில் கவனம் செலுத்தி, உயிர்-உரங்கள் மற்றும் உயிர்-பூச்சிக்கொல்லிகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.


(v) திட்டத்தின் ஐந்தாவது பகுதி, உயிர்-எரிபொருள்கள் மற்றும் உயிர்-இரசாயனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும். குறிப்பாக, கைப்பற்றப்பட்ட கார்பன் உமிழ்வுகளிலிருந்து உருவாக்கப்படும்.


(vi) திட்டத்தின் இறுதிப் பகுதி கடல் மற்றும் விண்வெளி பயன்பாடு ஆகும். இது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளிலிருந்து பொருட்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.



Original article:

Share: