அங்கன்வாடிகளில் உணவுப் பொருட்கள் முக அடையாள மென்பொருளை (Face Recognition Software) சார்ந்து இருக்கக் கூடாது.
அமெரிக்க நாவலாசிரியர் கர்ட் வொன்னெகட் எழுதிய Player Piano என்ற நாவலில், மனித உழைப்பு இயந்திரங்களால் இடம்பெயர்க்கப்படும் ஒரு சமுதாயத்தை ஆசிரியர் கற்பனை செய்கிறார். 1952ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த நாவல், உயர்மட்ட தானியங்கி இயந்திரங்கள் (automation) எவ்வாறு ஒரு மிகவும் துருவப்படுத்தப்பட்ட சமுதாயத்தை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறது. இந்த நாவலில், ஒரு சிறந்த பொறியியலாளரான Finnerty, இத்தகைய தானியங்கி முறை எவ்வாறு மனிதாபிமானமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து, ‘எப்போதும் இயந்திரங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருந்தால், பூமி ஒரு பொறியாளர்களின் சொர்க்கமாக இருந்திருக்கும்’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.
70 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் நலத்திட்ட சேவைகள் எவ்வாறு மென்பொருள் ‘பொறியாளர்களின் சொர்க்கமாக’ (engineer’s paradise) மாறி வருவதை நாம் காண்கிறோம். ஒருபுறம், ஒன்றிய அரசு டிஜிட்டல் கருவிகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது. மறுபுறம், தரைமட்ட ஊழியர்கள் இந்தக் கருவிகளைச் சார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. முன் களப்பணியாளர்கள் இப்போது முக அங்கீகார மென்பொருளை (Facial Recognition Software (FRS)) பயன்படுத்த வேண்டும்.
1975ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் (Integrated Child Development Scheme) ஒரு பகுதியாக குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்திசெய்ய அங்கன்வாடிகள் முதன்முறையாக நிறுவப்பட்டன. இந்தியாவில் சுமார் 14.02 லட்சம் அங்கன்வாடிகள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சம் ஒரு அங்கன்வாடி பணியாளர் (Anganwadi worker (AWW)) மற்றும் ஒரு அங்கன்வாடி உதவியாளர் இருக்க வேண்டும்.
அவர்கள் உள்ளூர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களாக இருக்க வேண்டும். பாலர் பள்ளி மற்றும் பிற சேவைகளுடன், ஒவ்வொரு அங்கன்வாடியும் மூன்று வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கும் சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்ட வீட்டுக்கு எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்களை (Take Home Rations (THR)) வழங்கும் பொறுப்பு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act), 2013-ன் கீழ் உள்ளது.
சரிபார்ப்பின் நோக்கம், தடைகள்
2021-ல், ஒன்றிய அரசு ஊட்டச்சத்து முயற்சிகளைக் கண்காணிக்க சத்துணவுப் கண்காணிப்பு கருவி (Poshan Tracker) என்ற மையப்படுத்தப்பட்ட பயன்பாட்டுத் தளத்தைத் தொடங்கியது. அங்கன்வாடி பணியாளர் தனது திறன் பேசியில் சத்துணவுக் கண்காணிப்பு கருவி செயலியை நிறுவி, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை அவ்வப்போது பதிவேற்ற வேண்டும். இந்த செயலிக்கு வழக்கமான புதுப்பிப்புகள் தேவைப்படுகின்றன.
இதற்கு பல அங்கன்வாடி பணியாளர்கள் தயாராக இல்லை. ஜூலை 1 முதல், கர்ப்பிணி/பாலூட்டும் பெண்கள் முக அடையாள மென்பொருள் (Facial Recognition Software (FRS)) மூலம் தங்கள் முகங்களை அங்கீகரிக்காத வரை அவர்களுக்கான வீட்டுக்கு எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்கள் (THR) வழங்கப்படாது. இது இப்போது இந்த செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை அடைய, முதலில் e-KYC செய்யப்பட வேண்டும்.
அங்கு பெண்ணின் ஆதார் மற்றும் உயிரியல் அளவுருக்கள் (biometric details) உள்ளிட்டு - ஒருமுறை கடவுச்சொல் குறியீடு (One-Time Password (OTP)) மூலம் சரிபார்க்கப்படுகிறது. குழந்தைகள் அல்லது பெண்கள் உணவு பெறுவதற்காக வேறொருவர் போல் நடிப்பதைத் தடுப்பதும், குழந்தையின் உணவை அங்கன்வாடி பணியாளர் அல்லது வேறு யாரும் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்வதும் இதன் இரண்டு முக்கிய நோக்கங்களாகத் தெரிகின்றன.
இதன் பொருள், குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படும் வரை நிரபராதிகள் என்று கருதப்படுவதற்குப் பதிலாக, எந்தவொரு ஆதாரமும் இல்லாத அளவுக்கு ஏதாவது தவறு செய்ததாகக் கருதப்படுகிறார்கள். இது இயற்கை நீதியின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது.
பல அங்கன்வாடி ஊழியர்கள் முக அங்கீகார மென்பொருளை (FRS) பயன்படுத்துவது நிறைய குழப்பங்களை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். பல தொலைபேசி எண்கள் மாறியுள்ளன. தொலைபேசி பொதுவாக பெண்களிடம் எப்போதும் இருப்பதில்லை. எனவே, OTP-யை பகிர்வதில் நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் உள்ளன.
e-KYC செய்யப்பட்ட பின்னரும், அங்கன்வாடி பணியாளர்களுக்குத் தெரியாத காரணங்களால் மென்பொருளில் பதிவு செய்யப்பட்ட முகங்களைப் பொருத்துவதில் பிழைகள் உள்ளன. மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் பயன்படுத்தும் தொலைபேசிகள் பெரும்பாலும் அதிக தரவைக் கையாளும் வகையில் இல்லாததால், சில சமயங்களில் அவை செயலிழந்துவிடும். மோசமான நெட்வொர்க் இணைப்புகள் நீண்ட தாமதங்களை ஏற்படுத்துகின்றன. முக அங்கீகாரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அவர்கள் பல முறை புகைப்படங்களை எடுக்க வேண்டியிருக்கும்.
இது அனைவருக்கும் பிரச்சனையை (annoyance) ஏற்படுத்துகிறது. பணியாளர் பெண்களையும் குழந்தைகளையும் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தாலும், அவர்களை நம்பினாலும், செயலி அவர்களின் முகங்களை அடையாளம் காணவில்லை என்றால், அவர்களால் அவர்களுக்கு உணவு கொடுக்க முடியாது. ஏனெனில் அவர்களால் அமைப்பைத் தவிர்க்க முடியாது. முன் களப் பணியாளர்கள் நேரடியாக மக்களுக்கு உதவுவதால், செயலியால் முகங்களை அடையாளம் காணத் தவறும் பெண்களின் கோபத்தை எதிர்கொள்கின்றனர்.
எந்தவொரு தலையீடும் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கவே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். வீட்டுக்கு எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்களின் சூழலில், குறைந்தபட்சம் ஐந்து முக்கிய பிரச்சினைகள் உள்ள. உணவுப் பொருட்களின் தரம் மோசமாக உள்ளது. வீட்டுக்கு எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்களின் ஒழுங்கற்றதாக உள்ளது.
ஒவ்வொரு குழந்தைக்கும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்களுக்கான (THR) பட்ஜெட் ஒரு நாளைக்கு ரூ.8 மட்டுமே உள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் இது அதிகரிக்கப்படவில்லை. ஒப்பந்தங்களை வழங்குவதில் ஊழல் மற்றும் 2004-ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும் பெரிய வணிக நிறுவனங்களால் விநியோகம், உற்பத்தி மற்றும் விநியோகம் பரவலாக்கப்பட்டு, முன்னுரிமையாக சுய உதவிக் குழுக்கள் மற்றும் மகிளா மண்டல்கள் மூலம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பெண்கள் கர்ப்பமாக இருப்பது போல் நடிப்பதோ அல்லது குழந்தைகள் உணவு பெறுவது போல் நடிப்பதோ இங்கு பெரிய பிரச்சனை இல்லை. இருப்பினும், முக அங்கீகார மென்பொருள் இந்தப் பிரச்சினையை சரிசெய்ய முயற்சிப்பதாகத் தெரிகிறது. நலத்திட்டங்களில் பயன்படுத்தப்படும் பிற தொழில்நுட்பங்களைப் போலவே, அங்கன்வாடி பணியாளர்களிடம் எந்த கருதும் கேட்காமலேயே முக அடையாள மென்பொருள் (Face Recognition Software) தொடங்கப்பட்டது. போலியான நபர்கள் சலுகைகளைப் பெறுவதற்கான ஆதாரம் அரசாங்கத்திடம் இருந்தால், அவர்கள் அதை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அங்கன்வாடிகளில் உள்ளவர்களைச் சரிபார்க்க எளிதானவழி, உள்ளூர் சமூக மக்களை கண்காணிப்பில் ஈடுபடுத்துவதாகும்.
முன்னோக்கிய வழி
முக அடையாள மென்பொருள் (Face Recognition Software (FRS)) போன்ற தொழில்நுட்பங்கள் பொதுவாக குற்றவியல் விசாரணைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய விசாரணைகளில் முக அடையாள மென்பொருளைப் பயன்படுத்துவதில் பல கவலைகள் இருந்தாலும், பாதிக்கப்படக்கூடிய சமுதாயங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அடையாளம் காண இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவர்களை குற்றவாளிகளாக நடத்துவதாகவும் குடிமக்களாக கருதாமல் இருப்பதாகவும் தோன்றுகிறது.
உண்மையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற நகரமான சான் பிரான்சிஸ்கோவில் கூட, முக அங்கீகார மென்பொருள் (FRS) தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு மென்பொருள் தாய்மார்களை சிறப்பாக அடையாளம் காணும்வரை ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு பணயக் கைதியாக hostage() வைக்க முடியாது. Vonnegut’s எச்சரிக்கையை விரிவுபடுத்தினால், பெண்களும் குழந்தைகளும் ‘பொறியாளரின் சொர்க்கத்தில்’ (engineer’s paradise) ஆய்வகங்களாக மாறக்கூடாது. இறுதியில், உண்மையான பிரச்சினை என்னவென்றால், அடையாளங்களைச் சரிபார்ப்பதற்கும் உண்மையான மக்களை மதிப்பதற்கும் இடையே, மக்களை இயந்திரங்களைப் போல அல்லது கருணையுடன் நடத்துவதற்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதா அல்லது ஒற்றுமையை ஏற்படுத்துவதா என்பதைத் தேர்ந்தெடுப்பதுதான்.
ராஜேந்திரன் நாராயணன் ஒரு சமூக விஞ்ஞானி ஆவார் மற்றும் லிப்டெக் இந்தியா, ஒரு ஒத்துழைப்பு ஆராய்ச்சி மற்றும் பரவல் மையம் (CORD) உடன் இணைந்தவர். தீபா சின்ஹா ஒரு சமூக விஞ்ஞானி ஆவார்.