நிதி மசோதாவிலிருந்து வரிவிதிப்பு வரை, ரயில்வே மற்றும் விளையாட்டு நிர்வாகத்தில் திருத்தங்கள் வரை, 2024–25ஆம் ஆண்டில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடிக்கடி போராட்டங்கள், கில்லட்டின் பட்ஜெட்டுகள் (Guillotined Budget) மற்றும் நாடாளுமன்றத்தில் குறைந்த விவாதங்களால் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21, 2025 அன்று முடிவடைந்தது. இரு அவைகளும் வரலாற்றில் குறைவான விவாதங்களே நடைபெற்றன. இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதங்களைத் தவிர, ஜூலை 21, 2025-ல் தொடங்கிய பின்னர் அந்தக் கூட்டத்தொடர் ஆரம்பத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்திற்கான எதிர்க்கட்சி கோரிக்கை மற்றும் பின்னர் பிஹாரில் சிறப்பு தீவிர மறுஆய்வு பயிற்சி (Special Intensive Revision exercise) பற்றிய விவாதத்திற்கான கோரிக்கைகளால் தொடர்ச்சியான இடையூறுகள் மற்றும் ஒத்திவைப்புகளால் குறைந்த அளவிலான விவாதங்கள் நடைபெற்றன.
இருப்பினும், 18-வது மக்களவையில் சட்டங்களை விவாதிப்பதற்கு செலவிடப்படும் நேரம் குறைவாகவே உள்ளது.
2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாடாளுமன்றத்தின் விவாதங்களை குறைத்து தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் விவரங்கள் இங்கே
2024ஆம் ஆண்டு ஆரம்பம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர்
2024ஆம் ஆண்டு நிதி மசோதா (எண். 2) - இந்த மசோதா ஜூலை 23, 2024 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 7, 2025 அன்று நிறைவேற்றப்பட்டது. மசோதா குரல் வாக்கெடுப்பால் (voice vote) நிறைவேற்றப்பட்டது. நிதி மசோதாவில் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டில் 18% சரக்கு மற்றும்ச சேவையை நீக்குவது குறித்த ஒரு முக்கியமான மாற்றத்தை விவாதிக்க அரசாங்கம் மறுத்ததால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 10 ஆண்டுகளில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 67% எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதாக P.R.S-யின் சட்டபூர்வமான அறிக்கை காட்டுகிறது. இந்த செயல்முறை குல்லட்டினிங் என்று அழைக்கப்படுகிறது.
மக்களவையில் பொதுப் பட்ஜெட் விவாதம் 27 மணி நேரம் நடைபெற்றது. நான்கு அமைச்சகங்களுக்கான மானியக் கோரிக்கைகள் 30 மணி நேரத்திற்கும் மேலாக விவாதத்தைக் கண்டன.
2024ஆம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர்
பாரதீய வாயுயான் விதேயக் மசோதா (Bharatiya Vayuyan Vidheyak Bill) மற்றும் ஒதுக்கீட்டு (எண். 3) மசோதா - 2024ஆம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரின் போது இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தக் கூட்டத்தொடரின் பகுப்பாய்வு மக்களவை அதன் திட்டமிட்ட நேரத்தில் 52% மட்டுமே செயல்பட்டதையும் மக்களவையில் மாநிலங்களவை அதேபோல் 39% மட்டுமே செயல்பட்டதையும் காட்டியது.
அதேபோல், கேள்வி நேரம் (Question Hour) மாநிலங்களவையில் ஒதுக்கப்பட்ட 19 நாட்களில் நான்கு நாட்களுக்கு மட்டுமே செயல்பட்டது மற்றும் மக்களவையில் ஒதுக்கப்பட்ட 20 நாட்களில் 12 நாட்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே கேள்வி நேரம் செயல்பட்டது.
2025ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர்
2025ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் மசோதா (Immigration and Foreigners Bill), - மக்களவையில் 2025 பட்ஜெட் கூட்டத்தொடரின்போது 27, 2025 மார்ச் அன்று இந்த மசோதாவை நிறைவேற்றியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த பல திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு மசோதா குரல் வாக்கெடுப்பால் நிறைவேற்றப்பட்டது. மசோதா ஏப்ரல் 2, 2025 அன்று மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பால் நிறைவேற்றப்பட்டது. மக்களவை மசோதாவை விவாதிக்க 4 மணி நேரம் 15 நிமிடங்கள் செலவிட்டது. மாநிலங்களவை 4 மணி நேரம் 30 நிமிடங்கள் செலவிட்டது.
2024-ஆம் ஆண்டு ரயில்வே திருத்த மசோதா (Railways (Amendment) Bill) - இந்த மசோதா எதிர்ப்புகளுக்கு மத்தியில் குளிர்கால கூட்டத்தொடரின் போது டிசம்பர் 11, 2024 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பிப்ரவரி 15, 2025 அன்று நடந்த புதுதில்லி நெரிசல் தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் பதிலால் கோபமடைந்த பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைத்த திருத்தங்களை நிராகரித்த பின் மார்ச் 10, 2025 அன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குறித்து மக்களவையில் 6 மணி நேரம் 53 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் 4 மணி நேரம் 26 நிமிடங்கள் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக்கொண்டது.
2024ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா (Disaster Management (Amendment) Bill) - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த பல திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டபின், மக்களவை இந்த மசோதாவை டிசம்பர் 12, 2024 அன்று குரல் வாக்கெடுப்பால் நிறைவேற்றியது. மாநிலங்களவை மார்ச் 25, 2025 அன்று குரல் வாக்கெடுப்பால் மசோதாவை நிறைவேற்றியது. ரயில்வே மசோதாவைப் போலவே, மக்களவை பேரிடர் மேலாண்மை மசோதாவை 7 மணி நேரம் 28 நிமிடங்கள் விவாதித்தது. மாநிலங்களவை 4 மணி நேரம் 36 நிமிடங்கள் விவாதித்தது.
2024ஆம் ஆண்டு பாயிலர்கள் மசோதா (Boilers Bill) - இந்த மசோதா ராஜ்யசபாவில் தொடங்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்த அனைத்து திருத்தங்களும் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட பின் டிசம்பர் 4, 2024 அன்று நிறைவேற்றப்பட்டது. மசோதா மார்ச் 25, 2025 அன்று லோக் சபாவால் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா லோக் சபாவில் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது, ராஜ்யசபா 2 மணி நேரம் 45 நிமிடங்கள் விவாதித்தது.
2025ஆம் ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எவ்வாறு செயல்பட்டது என்பதை PRS சட்ட ஆராய்ச்சி ஆய்வு செய்தது. மக்களவையில் திட்டமிடப்பட்ட நேரத்தில் 78% நேரமும், மாநிலங்களவையில் 83% நேரமும் கேள்வி நேரம் நடந்ததாகக் தெரிவித்தது. மூன்று அமைச்சகங்களின் செலவினங்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 905 அமைச்சகங்கள் எந்த விவாதமும் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
2025ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர்
2025ஆம் ஆண்டு வருமான வரி மசோதா, வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 2025 - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி மசோதா மற்றும் வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா இரண்டையும் ஆகஸ்ட் 11, 2025 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை. பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பிஹார் தேர்தல் பட்டியல்களின் மறு ஆய்வுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும்போது தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் உறுப்பினர்கள் அவைக்கு திரும்பி வந்தபிறகும், அவர்கள் சபைக்குள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இரண்டு மசோதாக்களும் 4 நிமிட விவாதத்திற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
ஆகஸ்ட் 12, 2025 அன்று, பிஹாரில் வாக்காளர் பட்டியலின் SIR பற்றிய விவாதத்தை கோரி மேலவையில் இருந்து எதிர்க்கட்சி முன்பே வெளிநடப்பு செய்த நிலையில், 1 மணி நேரம் 10 நிமிட விவாதத்திற்குப் பின் குரல் வாக்கெடுப்பால் ராஜ்யசபா மசோதாக்களை திருப்பி அனுப்பியது.
2025ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மற்றும் 2025ஆம் ஆண்டு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா போன்ற இரண்டு விளையாட்டு மசோதாக்களும் ஆகஸ்ட் 11, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, பிஹாரில் SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 34 நிமிட குறைவான விவாதத்துடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இரு மசோதாக்களும் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கு தேர்தல் பட்டியல்களின் SIR எதிராக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் விவாதங்களில் பங்கேற்காமல் 2 மணி நேரம் 8 நிமிடங்களுக்குள் குரல் வாக்கெடுப்பால் நிறைவேற்றப்பட்டன.
2025ஆம் ஆண்டு - சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா எதிர்க்கட்சி SIR நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தொடர்ச்சியான ஒத்திவைப்புகள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 12, 2025 அன்று மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா 30 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் குரல் வாக்கெடுப்பால் நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட் 19, 2025 அன்று மாநிலங்களவையில், துணைத் தலைவர் கனஷ்யாம் திவாரி, ஒன்றிய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியை ஒரு மசோதாவை முன்வைக்க கோரிக்கை வைத்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துப் பேச விரும்பினார். அந்தப் பிரச்சினை மசோதாவுடன் தொடர்புடையது அல்ல என்று திவாரி கூறினார். எனவே எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தது. அதன் பிறகு, 2 மணி நேரம் 34 நிமிட விவாதத்திற்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.
2025ஆம் ஆண்டு இந்திய துறைமுகங்கள் மசோதா (Indian Ports Bill) - மக்களவையில் மசோதா 24 நிமிடங்கள் நீடித்த விவாதத்திற்குப் பின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுடன் சேர்ந்து நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில், முன்பே வெளிநடப்பு செய்திருந்த காரணத்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் 2 மணி நேரம் 3 நிமிட விவாதத்திற்குப் பின் ஆகஸ்ட் 18, 2025 அன்று குரல் வாக்கெடுப்பால் நிறைவேற்றப்பட்டது.
2025ஆம் ஆண்டு இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (திருத்த) மசோதா (Indian Institutes of Management (Amendment))-சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (Special Intensive Revision (SIR)) எதிராக எதிர்ப்பு தெரிவிக்க அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் இந்த மசோதா ஆகஸ்ட் 19, 2025 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. SIR பயிற்சி பற்றிய விவாதத்தைக் கோரி விவாதத்தை புறக்கணித்த பின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் மாநிலங்களவை ஆகஸ்ட் 20, 2025 அன்று மசோதாவை நிறைவேற்றியது. மக்களவை 7 நிமிடங்கள் மட்டுமே செலவழித்த நிலையில் இரு அவைகளும் மொத்தம் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் விவாதத்தில் செலவழித்தன.
2025ஆம் ஆண்டு இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா (Promotion and Regulation of Online Gaming Bill) - சிறப்பு தீவிர திருத்த பயிற்சி பற்றிய விவாதத்தைக் கோரிய எதிர்க்கட்சியின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகஸ்ட் 20 அன்று இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். மசோதா 6 நிமிட விவாதத்திற்குப் பின் மக்களவையில் குரல் வாக்கெடுப்பால் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில், மசோதா ஆகஸ்ட் 21, 2025 அன்று தாக்கல் செய்யப்பட்டது. 'வாக்கு-திருட்டு' (vote-theft) குற்றச்சாட்டுகள்மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கண்டனங்களை எழுப்பிய நிலையில் மசோதா அவையால் பிரிவு வாரியாக (clause-by-clause) நிறைவேற்றப்பட்டது. மசோதா 22 நிமிடங்கள் விவாதத்தில் இருந்தது.
2024ஆம் ஆண்டு கடல்வழி சரக்கு போக்குவரத்து மசோதா (Carriage of Goods by Sea Bill), கடற்கரை கப்பல் போக்குவரத்து மசோதா (Coastal Shipping Bill) - போன்ற இரண்டு மசோதாக்களும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது முறையே மார்ச் 28, 2025 மற்றும் ஏப்ரல் 3, 2025 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. கடல்வழி சரக்கு போக்குவரத்து மசோதா 1 மணி நேரம் 38 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது. கடற்கரை கப்பல் போக்குவரத்து மசோதா 3 மணி நேரம் 50 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது.
இரு மசோதாக்களும் மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எடுத்துக்கொள்ளப்பட்டன. பிஹாரில் தேர்தல் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு (Special Intensive Revision (SIR)) எதிராக எதிர்க்கட்சிகளின் ஒரு மித்த எதிர்ப்புகள் தொடர்ந்த நிலையில் 2025ஆம் ஆண்டு கடல்வழி சரக்கு போக்குவரத்து மசோதா ஆகஸ்ட் 6, 2025 அன்று நிறைவேற்றப்பட்டது. மசோதா மீதான விவாதம் 36 நிமிடங்கள் நீடித்தது. சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை பற்றிய விவாதத்தைக் கோரிய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடற்கரை கப்பல் போக்குவரத்து மசோதா ஆகஸ்ட் 7, 2025 அன்று நிறைவேற்றப்பட்டது. அவையின் எட்டு உறுப்பினர்கள் 26 நிமிடங்கள் நீடித்த விவாதத்தில் பங்கேற்றனர்.
2024ஆம் ஆண்டு வணிகக் கப்பல் மசோதா (Merchant Shipping Bill), 20 நிமிட விவாதத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 6, 2025 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. SIR நடைமுறையைப் பற்றி விவாதிக்க விரும்பியதால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தன. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த போதிலும், 20 நிமிட விவாதம் மற்றும் குரல் வாக்கெடுப்புக்குப் பிறகு, ஆகஸ்ட் 11, 2025 அன்று மாநிலங்களவை மசோதாவை நிறைவேற்றியது.
2024ஆம் ஆண்டு கோவாவில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா என்பது ஆகஸ்ட் 5, 2025 அன்று மழைக்கால கூட்டத்தொடரின்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா ஆகும். வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த பயிற்சி காரணமாக எதிர்க்கட்சி இடையூறுகளை ஏற்படுத்திய போதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இது நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 11, 2025 அன்று மாநிலங்களவை இந்த மசோதாவை நிறைவேற்றியது. மக்களவை இந்த மசோதா குறித்து 2 மணி நேரம் விவாதித்தது. அதேநேரத்தில் மாநிலங்களவை 23 நிமிடங்கள் இதற்காகச் செலவிட்டது.
மணிப்பூர் தொடர்பான இரண்டு மசோதாக்களான சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா மற்றும் ஒதுக்கீட்டு (எண் 2) மசோதா ஆகஸ்ட் 7, 2025 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும். சரக்கு மற்றும் சேவை வரி மசோதா 9 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஒதுக்கீட்டு மசோதா 13 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது. 40 நிமிட விவாதத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 11, 2025 அன்று இரண்டு பண மசோதாக்களையும் மாநிலங்களவை திருப்பி அனுப்பியது. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு வெளியே எதிர்ப்பு தெரிவித்ததால் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இல்லை.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர் 21 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பல இடையூறுகள் ஏற்பட்டன. அவை மூன்றில் இரண்டு பங்கு நேரத்தை எடுத்துக் கொண்டன. இதன் காரணமாக, மக்களவை நிர்ணயிக்கப்பட்ட மணிநேரத்தில் 29% மட்டுமே செயல்பட்டது. மாநிலங்களவை 34% மட்டுமே செயல்பட்டது. 18-வது மக்களவையில் இதுவரை நடந்த மிகக் குறைந்த விவாதம் நடைபெற்ற கூட்டத் தொடராக இது இருந்தது.