SCO உச்சி மாநாட்டில், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
விளைவுகளைவிட, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation (SCO)) உச்சிமாநாட்டிற்காக சீனாவுக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவு, அதன் வெளியுறவுக் கொள்கைக் கண்ணோட்டத்தில் (foreign policy outlook) மாற்றம் குறித்த அரசாங்கத்தின் தெளிவான முடிவாகும். பிரதமர் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு ஏழு வருடங்கள் இருந்தநிலையில், தற்போது, 2020-ம் ஆண்டு இராணுவ மோதலுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான அவரது சந்திப்பு இருநாட்டு தலைவர்களின் முதல் இருதரப்பு சந்திப்பாகும்.
SCO உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது. SCO என்பது மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பு என்று பெரும்பாலும் பார்க்கப்படும் ஒரு யூரேசிய குழுவாக (Eurasian grouping) உள்ளது. இதற்கிடையில், பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையேயான பரஸ்பர புகைப்படங்கள், செயலற்ற ரஷ்யா-இந்தியா-சீனா முத்தரப்பு (Russia-India-China (RIC) trilateral) பற்றிய நினைவுகளை எழுப்பின.
சீனாவுடனான இருதரப்பு சந்திப்பின்போது, இருநாட்டு தலைவர்களும் LAC-ல் இராணுவ வீரர்கள் விலக்கப்பட்ட பிறகு 2024 அக்டோபரில் தொடங்கிய இயல்பாக்க செயல்முறைக்கு (normalisation process) ஒப்புதல் அளித்தனர். மேலும், இருநாட்டு தரப்பினரும் தங்கள் சிறப்புப் பிரதிநிதிகளால் கையாளப்படும் எல்லைத் தீர்மான செயல்முறையை விரைவாகக் கண்காணிக்க ஒப்புக்கொண்டனர்.
"உலக வர்த்தகத்தை நிலைப்படுத்த" (stabilize world trade) உதவும் வகையில் நேரடி விமானங்கள், எளிதான விசா விதிகள் மற்றும் வலுவான பொருளாதார உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கும் அவர்கள் ஒப்புதல் அளித்தனர். "பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இருநாட்டு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு" பிரதமர் மோடி உறுதியளித்த நிலையில், "டிராகனும் (சீனா) யானையும் (இந்தியா) ஒன்றிணைய வேண்டும்" என்று அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார்.
இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான இத்தகைய நட்புறவு ஒரு வருடத்திற்கு முன்புகூட கற்பனை செய்ய முடியாதது. மேலும், இந்த மாற்றம் இந்தியா மீது வரிவிதிப்புகள் மற்றும் தடைகளை விதிக்க அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஓரளவுக்கு உந்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இது, டிரம்ப் நிர்வாகத்தின் நோக்கங்கள் குறித்து இந்தியாவுக்கு அதிகரித்து வரும் அவநம்பிக்கை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இது, பிரதமர் மோடி மற்றும் அவரது குழுவை, சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா கொண்டிருந்த சில கவலைகள், குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் மற்றும் NSG உறுப்பினர் பதவி மீதான இந்திய நடவடிக்கைகளைத் தடுத்தல் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளை நியமிப்பதைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதித்தது ஆகியவை இந்த சந்திப்பின்போது தற்காலிகமாக தவிர்க்க முடிந்தது.
தியான்ஜின் பிரகடனம் (Tianjin declaration) "பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய இயக்கத்திற்கு" (cross-border movement of terrorists) எதிரான வலுவான வார்த்தைகளைப் பயன்படுத்தியது முக்கியம். இருப்பினும், பஹல்காம் தாக்குதல் மற்றும் பலுசிஸ்தானில் பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை சம அளவில் கண்டனம் செய்தது.
காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களைக் கண்டனம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒட்டுமொத்த SCO உறுப்பினர்களும் பொதுவான நிலையை மேற்கொண்டனர். இருப்பினும், சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (Belt and Road Initiative) ஆதரிக்கும் உரையையும் இந்தியா தனது எதிர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது.
SCO மேம்பாட்டு வங்கிக்கான அதிபர் ஜி-யின் திட்டங்கள் மற்றும் SCO உறுப்பினர்களுக்கு இடையே "நாகரீக உரையாடலை" (Civilisational Dialogue) தொடங்குவதற்கான பிரதமர் மோடியின் பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சீனாவிற்கு "பயனுள்ள" பயணம் என்று பிரதமர் மோடி விவரித்ததற்கு முடிவுகள் மற்றும் பார்வைகள் வழிவகுத்தாலும், "SCO பிளஸ்" உச்சிமாநாட்டைத் தவிர்த்துவிட்டதால், இந்தியாவின் அண்டைநாடு மற்றும் உலகளாவிய தெற்கின் தலைவர்களுடன் நெருக்கமான ஈடுபாட்டிற்கான சில வாய்ப்புகளை அவரது பயணத் திட்டம் தவறவிட்டது.