மேக விதைப்புக்கு (cloud seeding) என்ன நிபந்தனைகள் தேவை?, அதற்கான முந்தைய திட்டங்கள் ஏன் விமர்சனங்களை எதிர்கொண்டன? என்பதைப் பற்றி கீழே குறிப்பிட்டுள்ளன.
அக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில், காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், செஸ்னா 206H (Cessna) எனப்படும் ஒரு சிறிய விமானம் டெல்லியில் மேக விதைப்பு சோதனையை நடத்தியது. இந்த விமானம் IIT-கான்பூரில் உள்ள ஒரு விமானப் பாதையில் இருந்து புறப்பட்டு மீரட்டில் தரையிறங்கியது. பின்னர், அது டெல்லியின் மீது பறந்து புராரி, மயூர் விஹார் மற்றும் வடக்கு கரோல் பாக் உள்ளிட்ட பகுதிகளை சோதனைக்காக உள்ளடக்கியது.
டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, X வலைதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொலியில், இந்த முறையில் "அறிவியல் ரீதியாக" மாசுபாட்டைக் குறைப்பதற்கான இந்தியாவில் முதல் பெரிய முயற்சி இதுவாக இருக்கலாம் என்று கூறினார். சோதனைக்குப் பிறகு நான்கு மணி நேரத்திற்குள் லேசான மழை பெய்யும் என்று அவர் கூறினார். சோதனை வெற்றியடைந்து வானிலை பொருத்தமானதாக இருந்தால், பிப்ரவரி வரை குளிர்காலம் முழுவதும் டெல்லி முழுவதும் இதேபோன்ற சோதனைகள் தொடரும்.
மேக விதைப்பு (cloud seeding) என்றால் என்ன?
புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (Indian Institute of Tropical Meteorology (IITM)) 2024-ம் ஆண்டு அறிக்கை, மழைப்பொழிவை அதிகரிக்க பொருத்தமான மேகங்களில் விதை துகள்களைச் சேர்க்கும் ஒரு முறையை விவரித்தது. இந்த நுட்பம் முதன்முதலில் 1940ஆம் ஆண்டுகளில் உலகளவில் சோதிக்கப்பட்டது.
பொதுவாக, நீராவி காற்றில் உள்ள சிறிய துகள்களைச் சுற்றி உறைந்து மேகத்தை உருவாக்கும் நீர்த்துளிகளை உருவாக்குகிறது. இந்த நீர்த்துளிகள் மோதி பெரிதாகின்றன. பின்பு, மேகம் நிறைவுற்றவுடன், மழை பெய்யத் தொடங்குகிறது.
மேக விதைப்பில், விதைத் துகள்கள் மேக நீராவி கருக்கள் (cloud condensation nuclei (CCN)), அவை நீராவி உறையும் துகள்கள்” அல்லது “நீர் உறையும் துகள்களான பனி கரு துகள்கள்” என்று அழைக்கப்படுவதாக 2024 ஆவணம் கூறுகிறது. மேக நீராவி கருக்கள் (CCN) முறையே மேகத் துளிகள் அல்லது பனித் துகள்களை உருவாக்க நீராவிக்கு ஒரு ஈர்ப்பைக் கொண்டுள்ளன. பனிக்கட்டி படிகங்கள் நீர் துளிகளை விட வேகமாக வளரும். அவை பெரிதாகும்போது, அவை கனமாகி மழைப்பொழிவாக விழுகின்றன.
மேக விதைப்பு (cloud seeding) எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
செயற்கையாக மழையைத் தூண்டுவதற்கு, மேகங்களுக்கு பொதுவாக வெள்ளி அயோடைடு (silver iodide), பொட்டாசியம் அயோடைடு (potassium iodide) அல்லது சோடியம் குளோரைடு (sodium chloride) போன்ற சில உப்புகள் செலுத்தப்படுகின்றன. இந்த உப்புகள் "விதை"யாக செயல்படுகின்றன. இந்த உப்புகள் கூடுதல் கருக்களை வழங்குவதன் மூலம் அதிக மேகத் துளிகளை உருவாக்க உதவுகின்றன. அதைச் சுற்றி அதிக மேகத் துளிகள் உருவாகலாம். அவை விமானங்களைப் பயன்படுத்தி அல்லது தரையில் உள்ள மின்னியற்றிகள் (Generators) மூலம் மேகத்திற்குள் சிதறடிக்கப்படுகின்றன.
ஏவூர்திகள் (rockets), ஆளில்லா விமானங்கள் (drones) அல்லது எரிப்புகளைப் (flares) பரவலுக்குப் பயன்படுத்தலாம் என்று இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM)) குறிப்பிட்டது. டெல்லியின் சோதனைக்கு, எரிப்புப் பொருட்கள் (flares) பயன்படுத்தப்பட்டன. அவை, எரிப்பு என்பது வானவேடிக்கை பொருள் (pyrotechnic material) மற்றும் எரியும் துகள்களைக் கொண்ட குழாய்களில் சுருக்கப்பட்டு, இவை ஒரு விமானத்தின் இறக்கைகளுடன் இணைக்கப்பட்டு விதைப்புப் பொருளை மேகங்களுக்குள் வெளியிடுகின்றன.
எட்டு எரிப்புப் பொருட்கள் (eight flares) பயன்படுத்தப்பட்டதாகவும், ஒவ்வொன்றும் சுமார் 2 முதல் 2.5 கிலோ எடையுள்ளதாகவும் சிர்சா தனது காணொலில் கூறினார். ஒவ்வொரு எரிப்பையும் 15 முதல் 20% ஈரப்பதம் கொண்ட மேகங்களில் விடுவதற்கு சுமார் இரண்டு முதல் இரண்டரை நிமிடங்கள் ஆனது.
மேக விதைப்புக்கு என்னென்ன நிபந்தனைகள் தேவை?
முதலாவதாக, மேக விதைப்புக்கு மேகமூட்டம் மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை மேகங்கள் அவசியம். புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எம்.ராஜீவன் முன்னதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் குறிப்பிட்டதாவது, “ஒரு குறிப்பிட்ட ஆழத்துடன் போதுமான மேகங்கள் இருக்கும்போது மட்டுமே மேக விதைப்பு சாத்தியமாகும் என்று விளக்கினார். இந்த மேகங்களுக்குள், போதுமான எண்ணிக்கையிலான நீர்த்துளிகள் இருக்க வேண்டும். மேக விதைப்பின் நோக்கமானது இந்த நீர்த்துளிகளின் அளவை அதிகரிப்பதாகும். நீர்த்துளிகள் பெரிதாகும்போது, ஈர்ப்பு விசையால் மழை பெய்யும். வானம் தெளிவாக இருக்கும்போது மேக விதைப்பு செய்ய முடியாது என்று ராஜீவன் மேலும் கூறினார்.”
குளிர்காலத்தில், மேற்கத்திய இடையூறுகள் டெல்லியின் மீது உருவாகின்றன. இந்த இடையூறுகள் காஸ்பியன் அல்லது மத்தியதரைக் கடலில் உருவாகும் புயல்கள் ஆகும். அவை, வடமேற்கு இந்தியாவிற்கு பருவமழை அல்லாத மழையைக் கொண்டு வருகின்றன.
இருப்பினும், அத்தகைய மேகங்கள் எப்போதும் மேக விதைப்புக்கு ஏற்றதாக இருக்காது. IIT கான்பூரின் பேராசிரியர் சச்சிதா நந்த் திரிபாதி, "விதைப்புக்குத் தேவையான மேகங்கள் பொதுவாக குளிர்காலத்தில் காணப்படுவதில்லை. மேற்கத்திய இடையூறுகள் மேகங்களை உருவாக்குகின்றன. ஆனால், அவற்றின் பண்புகளை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். விதைப்பதற்கு முன் விஞ்ஞானிகள் மேகங்களின் உயரம் என்ன, அவற்றின் திரவ நீர் உள்ளடக்கம் என்ன என்பதை சரிபார்க்க வேண்டும்" என்று அவர் விளக்கினார். மேகங்களின் ஈரப்பதம் உட்பட, அவற்றின் பண்புகளைப் புரிந்துகொள்ள பல கண்காணிப்பு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இறுதியாக, காற்றின் தரத்தை மேம்படுத்த மேக விதைப்பைப் பயன்படுத்துவதற்கான காரணம் என்ன?
இந்தியாவில், வறட்சி போன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க மேக விதைப்பு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த முயற்சிகளின் மாறுபட்ட முடிவுகளின் அடிப்படையில் உள்ளன. பல ஆண்டுகளாக இந்தியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து 100 கி.மீ.க்கு மேல் உள்நாட்டில் நடத்தப்பட்ட சோதனைகளை இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (Indian Institute of Tropical Meteorology (IITM)) ஆவணம் குறிப்பிட்டுள்ளது (மூர்த்தி மற்றும் பலர், 2000). சில சூழ்நிலைகளில், மழைப்பொழிவு 4% முக்கியத்துவ அளவில் 24% அதிகரித்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன.
பொதுவாக, மழையானது PM 2.5 மற்றும் PM 10 போன்ற சில மாசுபாடுகளை அகற்ற உதவுகிறது. மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (Massachusetts Institute of Technology (MIT)) முந்தைய ஆவணமானது இந்த செயல்முறையை இவ்வாறு விளக்கியது. இதில், "ஒரு மழைத்துளி வளிமண்டலத்தில் விழும்போது, அது தரையில் விழுவதற்கு முன்பு பல்லாயிரக்கணக்கான சிறிய பனிப்படலத் துகள்களை (aerosol particles) அதன் மேற்பரப்புக்கு ஈர்க்கும்." இது, உறைதல் (coagulation) என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை, நீர்த்துளிகள் மற்றும் பனிப்படலங்கள் ஒன்றிணைக்கும் ஒரு இயற்கையான வழியாகும். இது சூட், சல்பேட்டுகள் மற்றும் கரிம துகள்கள் போன்ற மாசுபடுத்திகளின் காற்றை அழிக்க உதவுகிறது.
அரசாங்கத்தின் காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (System of Air Quality and Weather Forecasting And Research (SAFAR)) நிறுவனர் திட்ட இயக்குனர் குஃப்ரான் பெய்க், முன்னதாக, “கணிசமான அளவு மழை பெய்ய வேண்டும். அதனால் அது மாசுபாடுகளை நீக்குகிறது. இந்த விளைவு தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்று அவர் விளக்கினார். இருப்பினும், இது வேலை செய்தால், அது மாசுபாடுகளின் அளவை குறைக்க உதவும்.
இந்த அணுகுமுறை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற சந்தேகங்களைத் தவிர, நிபுணர்கள் சில உத்தியையும் கேள்வி எழுப்பியுள்ளனர். காற்று மாசுபாட்டின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக அதன் விளைவுகளைக் கையாள்வதில் இது கவனம் செலுத்துகிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர். வாகன உமிழ்வு, தொழில்துறை மாசுபாடு மற்றும் தூசி ஆகியவை இந்தக் காரணங்களில் அடங்கும். குளிர்கால மாதங்களில், பயிர்க் கழிவுகளை எரித்தல், வானிலை நிலைமைகள் மற்றும் பட்டாசு வெடித்தல் ஆகியவை டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.