இந்திய தலைமை நீதிபதியை (CJI) நியமிக்கும் செயல்முறை என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள் : 


அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்ட பிறகு, நவம்பர் 23 அன்று தலைமை நீதிபதி கவாய் ஓய்வு பெறும்போது நீதிபதி சூர்யா காந்த் இந்தியாவின் 53 வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பார். நீதிபதி காந்த் அவர்கள் பிப்ரவரி 9, 2027 வரை தலைமை நீதிபதியாகப் பணியாற்றுவார். தலைமை நீதிபதி கவாய் ஏற்கனவே தனது பரிந்துரை கடிதத்தின் நகலை நீதிபதி சூர்யா காந்திடம் ஒப்படைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.


அக்டோபர் 23 அன்று, அரசானது தலைமை நீதிபதி கவாயிடம் தனது பரிந்துரை கடிதத்தை அனுப்புமாறு வலியுறுத்தியது. பதவி விலகும் இந்திய தலைமை நீதிபதி அடுத்த தலைமை நீதிபதியை அரசாங்கத்திற்கு பரிந்துரைப்பது நீண்டகாலமாக பின்பற்றப்படும் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும்.


நீதிபதி சூர்யா காந்த் பிப்ரவரி 23, 2007 அன்று தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (National Legal Services Authority) நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இரண்டு முறை தொடர்ச்சியாகப் பரிந்துரைக்கப்பட்டார். இந்த நிலையில், பிப்ரவரி 22, 2011 அன்று அவரது உறுப்பினர் பதவி முடிவடைந்தது. பின்னர், அவர் அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். மேலும், மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்டார்.


உங்களுக்குத் தெரியுமா? :


இந்திய அரசியலமைப்பின் பிரிவு 124 இன் பிரிவு (2) இன் கீழ் இந்திய தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். அரசியலைப்புப் பிரிவு 124 ஆனது, குடியரசுத் தலைவர் "தேவை என்று கருதினால்", உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் "கலந்துரையாடிய பிறகு" குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அரசியலமைப்புப் பிரிவு 217, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் செயல்முறையை விளக்குகிறது. குடியரசுத் தலைவர் இந்திய தலைமை நீதிபதி, மாநில ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோரை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும், ஒரு தலைமை நீதிபதியின் பதவிக்காலம் அவர்கள் 65 வயதை அடையும் வரை இருக்கும். அதே நேரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதில் ஓய்வு பெறுவார்கள்.


வழக்கமாக, தலைமை நீதிபதிக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்படுவார். இவர்கள் பணியாற்றிய ஆண்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மூத்த நீதிபதி பதவி தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த மரபை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒரு காலத்தில் புறக்கணித்தார். அவர் 1973-ம் ஆண்டு தனது ஆட்சிக்கு சாதகமான ஏ.என். ரேவை தலைமை நீதிபதியாக நியமித்தார்.


உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான அரசாங்கத்தின் நடைமுறை குறிப்பாணையின்படி (Memorandum of Procedure), பணி மூப்பு என்பது பொதுவாக விதிமுறையாக பின்பற்றப்பட வேண்டும். ஒன்றிய சட்டம், சட்டத்துறை அமைச்சர் பதவி விலகும் இந்திய தலைமை நீதிபதியின் பரிந்துரையை கோருகிறார் என்று அது கூறுகிறது.


கொலீஜியத்தின் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டு இந்தியத் தலைமை நீதிபதியால் அனுப்பப்பட்ட பிறகு, சட்ட அமைச்சர் அவற்றை பிரதமருக்கு அனுப்புகிறார். அவர் நியமனம் குறித்து குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.



Original article:

Share: