சிறப்பு தீவிரத் திருத்தமுறை (SIR) செயல்படுத்தப்படுவதன் நோக்கம் என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள்: 


- 2002 - 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் இருந்து கண்டுபிடிக்க முடியாத அனைவரும், இறுதிப் பட்டியலில் தொடர்ந்து இருப்பதற்கான தகுதியை நிரூபிக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.


— தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த செயல்முறை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவுகள், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படவுள்ளது.  அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.


— இந்த செயல்முறையின் இரண்டாம் கட்டத்தில், வாக்காளர்கள் சமர்ப்பிக்கக்கூடிய 11 ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் 13-ஆக விரிவுபடுத்தியுள்ளது. அதில் ஆதார் மற்றும் பீகார் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியலின் ஒரு பகுதியைச் சேர்த்துள்ளனர். ஜூலை 1, 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அனைத்து நபரும் தங்களுக்கும் தங்கள் பெற்றோருக்குமான தகுதி ஆவணங்களை வழங்க வேண்டும். பீகார் சிறப்பு தீவிரத்திருத்த பதிவேட்டை பெற்றோரின் விவரங்களைக் காட்டப் பயன்படுத்தலாம். தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, அடையாளத்தை நிரூபிக்க ஆதாரைப் பயன்படுத்தலாம். ஆனால், அது குடியுரிமைக்கான சான்று அல்ல.


— பீகாரில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்ததால், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத்திருத்தத்தை வெளியிட ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது.


— சிறப்பு தீவிரத்திருத்ததின் இரண்டாம் கட்டத்திற்கு, கணக்கெடுப்பு காலம் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கும். 5.33 லட்சம் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (booth level officers (BLOs)) வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புகிறார்கள். டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும் வரைவுப் பட்டியலில், படிவங்கள் பெறப்பட்ட அனைவரும் இடம்பெறுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


UPSC Key: Special Intensive Revision, CJI successor, and PM-SHRI scheme



- 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அசாம் ஏன் இன்னும் சேர்க்கப்படவில்லை என்று கேட்டபோது, ​​தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் அசாம் மாநிலத்திற்கு சிறப்பு விதிகள் உள்ளன என்றார். அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) ஏறக்குறைய முடிந்துவிட்டது. அசாமில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தனியாக நடத்த உத்தரவிடப்படும் என்று ​​தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார்.


— மாநிலங்கள் எவ்வளவு தயாராக உள்ளன என்பதன் அடிப்படையில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறும் மூன்று மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியைக் கணக்கிடாமல், கடந்த வாரம் நடைபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் இரண்டு நாள் கூட்டத்தின் போது இந்த செயல்முறை சரிபார்க்கப்பட்டது.


- பல ஆண்டுகளாக, கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியல் துல்லியமாக இல்லை என்று புகார் கூறி வருகின்றன. இப்போது சிறப்பு தீவிரத்திருத்ததின் அவசியத்தை விளக்கினார்.


1951 முதல் 2004ஆம் ஆண்டு வரை எட்டு முறை சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) செய்யப்பட்டதாக அவர் கூறினார். கடைசி திருத்தத்திற்குப் பிறகு, மக்கள் அடிக்கடி இடம்பெயர்ந்ததாலும், சில வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டதாலும், இறந்த வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என்பதாலும், சில வெளிநாட்டினர் தவறாக சேர்க்கப்பட்டதாலும் வாக்காளர் பட்டியல் அதிக மாற்றங்கள் இருந்தன.

— பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களின் குடியுரிமையையும் சரிபார்க்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தையும், பீகாரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறையையும் கேள்விக்குட்படுத்தும் ஒரு தொகுதி மனுக்கள் மூலம் தேர்தல் ஆணையம் வழங்கிய ஜூன் 24 உத்தரவு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா:?


— அரசியலமைப்பின் பிரிவு 324(1) இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதையும், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதையும் மேற்பார்வையிடவும், வழிகாட்டவும், கட்டுப்படுத்தவும் அதிகாரம் அளிக்கிறது.



— 1950ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act) பிரிவு 21(3)இன் கீழ், தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் ஒரு தொகுதிக்கோ அல்லது தொகுதியில் உள்ள  ஒரு பகுதிக்கோ வாக்காளர் பட்டியலை சிறப்பு முறையில் புதுப்பிக்க உத்தரவிடலாம்.


— 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின்படி, தேர்தல் ஆணையத்தால் தீர்மானிக்கப்பட்டபடி, தீவிரமாகவோ அல்லது பகுதியளவு அல்லது சிறிய மாற்றங்களுடன், புதுப்பிக்க முடியும். ஒரு தீவிர திருத்தத்தில், வாக்காளர் பட்டியல் முழுமையாக மீண்டும் செய்யப்படுகிறது. சுருக்க திருத்தத்தில், ஏற்கனவே உள்ள பட்டியலில் புதுப்பிப்புகள் அல்லது மாற்றங்கள் மட்டுமே செய்யப்படுகின்றன.


Original article:

Share: