ஒன்றிய அரசின் ஊதியக் குழு என்பது என்ன? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:



— நீதிபதி தேசாயைத் தவிர, இந்தக் குழுவில் பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் புலக் கோஷ் அவர்கள் பகுதிநேர உறுப்பினராக இருப்பார். பெட்ரோலியத் துறை செயலர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர் மற்றும் செயலாளராக (Member-Secretary) நியமிக்கப்பட்டார்.


—ஒன்றிய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க இந்த ஆண்டு ஜனவரியில் 8-வது ஒன்றிய அரசின் ஊதியக் குழுவை அமைப்பதாக அரசாங்கம் அறிவித்தது. பல்வேறு அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் கூட்டு ஆலோசனை இயந்திரத்தின் ஊழியர் தரப்புடன் கலந்தாலோசித்த பிறகு, பணிக்கால விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.


—ஒன்றிய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பு, ஓய்வூதியப் பலன்கள் மற்றும் பிற சேவை நிலைமைகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து, அதில் தேவையான மாற்றங்கள் குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒன்றிய அரசு சார்பாக ஊதியக் குழுக்கள் அவ்வப்போது அமைக்கப்படுகின்றன. வழக்கமாக, ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை செயல்படுத்தப்படும். இது போன்ற காரணிகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், 8-வது ஊதியக் குழுவின் மாற்றங்கள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


— இதன் அடிப்படையில், ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகள் ஜனவரி 1, 2026 முதல் பின்னோக்கிச் செயல்படுத்தப்படும் என்றும், பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்போது நிலுவைத் தொகைகள் வழங்கப்படும் என்று பொருள்படும். இருப்பினும், பணபலன்கள் எதிர்காலத்திற்கு ஏற்ப திருத்தப்படும் வாய்ப்பு உள்ளது; கடந்த காலத்துக்கு இந்த திருத்தும் பொருந்தாது.


—2025-26-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் ஊதியக் குழு, ஓய்வூதியம் மற்றும் ஊதியங்களுக்காக ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் மொத்த செலவினத்தில்  18% ஆகும்.


— முந்தைய ஒன்றிய அரசின் ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமல்படுத்தப்படவுள்ளன. ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பிந்தைய காலத்திற்கும் (retrospective effect) பொருந்தும் வகையில் இது இருக்கும்.


— குழு தனது பரிந்துரைகளை வழங்கும்போது, குழு நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் நிதி விவேகத்தின் தேவை, வளர்ச்சி செலவுகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு போதுமான வளங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான தேவை மற்றும் பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதியில்லாத செலவு (non-contributory pension schemes) ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.


—மாநில அரசுகள் வழக்கமாக சில மாற்றங்களைச் செய்வதால், அதன் பரிந்துரைகள் மாநில அரசின் நிதியை எவ்வாறு பாதிக்கலாம் என்பதையும் குழு பரிசீலிக்கும். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்களின் தற்போதைய ஊதியம், சலுகைகள் மற்றும் பணி நிலைமைகளையும் இந்த குழு கவனத்தில் கொள்ளும்.


—ஒன்றிய அரசின் 7-வது ஊதியக் குழு, ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களில் 23.55% உயர்வை பரிந்துரைத்தது. இதனால், ஒன்றிய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 1.02 லட்சம் கோடி கூடுதலாகச் செலவாகும்.









இந்தியாவில் அமைக்கப்பட்ட பல்வேறு ஊதிய ஆணையங்கள் மற்றும் பரிந்துரைகள்:



ஒன்றிய ஊதியக் குழு

அமைக்கப்பட்ட ஆண்டு

நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு

முக்கிய பரிந்துரை

முதலாவது

ஊதியக் குழு

1946

1947

சுதந்திரத்திற்குப் பிறகு ஊதிய வரிசைகளை திருத்தியது.

இரண்டாவது

ஊதியக் குழு


1957

1959

அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் திருத்தமும் செய்யப்பட்டது.

மூன்றாவது

ஊதியக் குழு

1970

1973

திருத்தப்பட்ட சம்பள விகிதங்களுடன் கூடிய பணபலன்கள் அறிமுகப்படுத்ப்பட்டது.

நான்காவது

ஊதியக் குழு

1983

1986

ஊதியம் மற்றும் பணபலன்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பட்டது.

ஐந்தாவது ஊதியக் குழு

1994

1996

திருத்தப்பட்ட ஊதிய அமைப்பு மற்றும் படிகள்; மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியங்கள் செய்யப்பட்டது.

ஆறாவது ஊதியக் குழு

2006

2008

சம்பளப் பட்டைகள் (Pay Bands) மற்றும் தர ஊதிய முறையை அறிமுகப்படுத்தியது.

ஏழாவது ஊதியக் குழு

2013

2016

ஊதிய அட்டவணை (Pay Matrix) அறிமுகம் செய்யப்பட்டது; ஊதியம், ஓய்வூதியம் மற்றும் கூடுதல்  தொகைகளில் மொத்தம் 23.55% உயர்த்தப்பட்டது.

எட்டாவது ஊதியக் குழு

2025

01.01.2026 முதல் நடைமுறைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது

பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளன.



Original article:

Share: