தற்போது, தவறாக வழக்குத் தொடரப்பட்ட, தண்டிக்கப்பட்ட அல்லது அதிகாரப்பூர்வ தவறுகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான எந்த சட்டப்பூர்வ திட்டமும் இந்தியாவில் இல்லை.
கடந்த வாரம், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அது பொதுமக்கள் மத்தியில் பெறும் கவனத்தைப் பெறவில்லை. ஆனால் சட்டப் பிழைகளின் தாக்கம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியது. நீதிபதி சஞ்சய்கரோல் தலைமையிலான நீதிமன்ற அமர்வு, 37 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட ஒரு இரயில்வே பயணச் சீட்டு பரிசோதகரின் (Travel Ticket Examiner (TTE)) பணிநீக்கத்தை ரத்து செய்தது. அவருக்கு எதிரான ஒழுங்கு விசாரணை நியாயமற்றது மற்றும் சரியான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் கண்டறிந்தது. இந்த பணியாளரின் நீண்டகால வழக்கின் காரணமாக தற்போது பணியாளர் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் அவருக்கு உரிமையுள்ள சலுகைகளைப் பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு குற்றவியல் வழக்குத் தொடரலைப் பற்றியது அல்ல என்றாலும், நீதித்துறையானது தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரு பரந்த பிரச்சினையை இது சுட்டிக்காட்டியது. சிறைத்தண்டனை, வழக்குத் தொடருதல் அல்லது பின்னர் ஆதாரமற்றதாகக் கண்டறியப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைமூலம் நபர் ஒருவர் சட்டத்தால் தவறாக தண்டிக்கப்படும்போது ஏற்படும் தீங்கை சரிசெய்ய அல்லது ஈடுசெய்ய இந்தியாவில் இன்னும் ஒரு சட்ட அமைப்பு இல்லை.
தற்போது, இந்தியாவில் தவறாக வழக்குத் தொடரப்பட்ட, தண்டிக்கப்பட்ட அல்லது அதிகாரப்பூர்வ தவறுகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான எந்த சட்டப்பூர்வ திட்டமும் இல்லை. அரசியலமைப்புப் பிரிவு 21 வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை (right to life and personal liberty) பாதுகாப்பதற்கான உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், அது மீறப்படும்போது அரசு அந்த உரிமையை எவ்வாறு மீட்டெடுக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடவில்லை. சில நேரங்களில், அரசியலமைப்பு நீதிமன்றங்கள் பிரிவுகள் 32 மற்றும் 226-ன் கீழ் இழப்பீடு வழங்கியுள்ளன. அவை, அடிப்படை உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வதற்கான பொதுச் சட்ட தீர்வுகளின் (public law remedies) ஒரு பகுதியாகக் கருதுகின்றன. இருப்பினும், இது நீதித்துறை விருப்புரிமையைப் பொறுத்து, பாதிக்கப்பட்ட நபர் உயர் நீதிமன்றங்களை அணுக முடியுமா என்பதையும் இது சார்ந்துள்ளது.
தனியார் சட்டத் தீர்வுகள் (Private law remedies) சிறிய ஆறுதலை அளிக்கின்றன. தவறாக தொடரப்பட்ட வழக்கு அல்லது பொய்யான சிறைத்தண்டனைக்கு வழக்குத் தாக்கல் செய்யலாம். ஆனால், இத்தகைய வழக்குகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும், அதிக செலவுடையது மற்றும் மேலும் நிச்சயமற்ற விளைவுகளை ஏற்படுத்தும். பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா-2023-ன் (Bharatiya Nagarik Suraksha Sanhita) பிரிவு 399 (முன்னர் CrPC இன் பிரிவு 358) போன்ற விதிகள், ஆதாரமின்றி கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ரூ.1000 வரை பெயரளவு இழப்பீடு வழங்க அனுமதிக்கின்றன. மேலும், இந்தத் தொகை கூட புகார்தாரரால் செலுத்தப்படுகிறது, அரசால் அல்ல. இந்த விதிகள் தவறான கைது அல்லது வழக்குத் தொடரப்பட்ட சில வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், அரசு நியாயமின்றி செயல்படும்போது ஏற்படும் பெரிய தீங்கை - சுதந்திரம், நற்பெயர், வாழ்வாதாரம் மற்றும் கண்ணியம் இழப்பு - அரசு அங்கீகரிக்கவில்லை.
தற்போதைய கட்டமைப்பு இழப்பீட்டை சட்டப்பூர்வ உரிமையாக அல்ல, நீதித்துறை தீர்வாகக் கருதுகிறது. இந்த வேறுபாடு முக்கியமானது. ஒரு தீர்வு நீதிமன்றத்தின் விருப்புரிமையைப் பொறுத்தது. அதேநேரத்தில், ஒரு உரிமை தனிநபருக்கு உரிமை கோரும் அதிகாரத்தை அளிக்கிறது. சட்டப்பூர்வ உரிமை இல்லாமல், தவறான செயலுக்கு இழப்பீடு பெறுவது தற்செயலான வாய்ப்பைப் பொறுத்தது. இந்த வழக்கு அரசியலமைப்பு நீதிமன்றத்தை அடைகிறதா மற்றும் அந்த நீதிமன்றம் அதன் விருப்புரிமையைப் பயன்படுத்தத் தேர்வுசெய்கிறதா என்பதைப் பொறுத்தது. இழப்பீட்டுக்கான உரிமையை அங்கீகரிப்பது இதை நிவாரணச் செயலிலிருந்து சட்டப்பூர்வ கடமையாக மாற்றும்.
தற்போதைய சட்ட இடைவெளியின் தாக்கம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானி டாக்டர் நம்பி நாராயணனின் வழக்கில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அவர் 1994-ல் உளவு பார்த்ததாக பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரது கதை பின்னர் ”ராக்கெட்ரி: நம்பி விளைவு” (Rocketry: The Nambi Effect) திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டது. மத்திய புலனாய்வுப் பணியகம் (Central Bureau of Investigation) பின்னர் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று முடிவு செய்தது. ஆனால், கேரள அரசு மறு விசாரணைக்கு உத்தரவிட்டு, இழுத்தடிப்பை நீட்டித்தது. உச்சநீதிமன்றம் பின்னர் இந்த விசாரணை நம்பிநாராயணனின் கண்ணியத்தையும் அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அவரது வாழ்க்கை உரிமையையும் மீறுவதாக தீர்ப்பளித்தது. அது அவருக்கு ₹50 லட்சம் இழப்பீடு வழங்கியது மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடத்தையை ஆராய ஒரு குழுவை அமைத்தது.
அரசாங்கத்தின் தவறுகள் நிதி இழப்பை மட்டுமல்ல, ஒரு நபரின் நற்பெயருக்கும் மன ஆரோக்கியத்திற்கும் நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அவரது வழக்கு காட்டுகிறது. அவருக்கு வரையறுக்கப்பட்ட நீதிகூட கிடைக்க பல சுற்று நீதிமன்றப் போராட்டங்களும், உச்சநீதிமன்றத்தின் நேரடி தலையீடும் தேவைப்பட்டது. இதேபோன்ற, சூழ்நிலையில் உள்ள பெரும்பாலான நபர்களுக்கு, அத்தகைய நிவாரணம் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
தவறான வழக்கு அல்லது சிறைவாசம் என்பது எப்போதும் நீதிமன்ற தோல்வியின் விளைவாக இருக்காது. சில சந்தர்ப்பங்களில், அது தனிப்பட்ட தவறான நடத்தை அல்லது பாரபட்சமான விசாரணைகள் காரணமாக நிகழ்கிறது. எனவே, ஒரு விரிவான சட்ட கட்டமைப்பு இழப்பீடு மற்றும் பொறுப்புணர்வு இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் அதற்கு வழிவகுத்த செயல்களுக்கான விளைவுகளை எதிர்கொள்வதையும் இது உறுதி செய்ய வேண்டும். தெளிவான சட்டரீதியான தரநிலைகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர் இழப்பீடு பெறாமல் போய்விடுகிறார். மேலும், அதிகாரிகள் எந்த பொறுப்புணர்வையும் எதிர்கொள்ளவில்லை.
இத்தகைய கட்டமைப்பின் தேவை பல ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில், இந்திய சட்ட ஆணையம் (Law Commission of India), அதன் 277 வது அறிக்கையில், தவறான வழக்குத் தொடரலின் கூற்றுக்களைக் கையாள ஒரு சட்ட அமைப்பை உருவாக்க பரிந்துரைத்தது. தவறு செய்த அதிகாரிகளிடமிருந்து தொகையை வசூலிக்கும் விருப்பத்துடன், இழப்பீட்டிற்கான முதன்மைப் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும் என்றும், மதிப்பீட்டில் நிதி மற்றும் நிதி அல்லாத நிவாரணங்கள் ஆலோசனை, சுகாதாரம், தொழில் பயிற்சி மற்றும் சமூகத்தில் மறு ஒருங்கிணைப்புக்கான ஆதரவு ஆகியவை அடங்கும் என்றும் அது முன்மொழிந்தது. இருப்பினும், இந்த பரிந்துரைகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
சர்வதேச அளவில், தவறான தண்டனை காரணமாக தண்டிக்கப்பட்ட தனிநபர்களுக்கு இழப்பீடு வழங்குவதை கட்டாயமாக்கும் சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் இந்தக் விதி வெளிப்படையாக உள்ளது. இருப்பினும், இந்தியா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடாக இருந்தபோதிலும், இந்தக் கடமையைச் செயல்படுத்த இந்தியா எந்தச் சட்டத்தையும் இயற்றவில்லை.
இழப்பீடு பெறும் உரிமையை அங்கீகரிப்பது என்பது வெறும் இழப்பீடுகளை வழங்குவது மட்டுமல்ல, அது அதன் நிறுவனங்கள் தவறு செய்யும் போது அரசின் கடமையை உறுதிப்படுத்துவதாகும். அத்தகைய சட்டம், பிரிவு 21-ன் கண்ணியத்திற்கான உத்தரவாதத்திற்கு உறுதியான விளைவை அளிக்கும். அனைவருக்கும் நீதி மற்றும் தீர்வுகளுக்கான சமமான அணுகல் இருப்பதையும் இது உறுதி செய்யும். பொறுப்புணர்வை ஊக்குவிப்பதன்மூலம், புலனாய்வாளர்கள் அல்லது வழக்குரைஞர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை இது தடுக்கும். பல வருடங்களாக மரண தண்டனை விதிக்கப்பட்ட காலகட்டத்தை அனுபவித்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்களின் மனுக்களை உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இழப்பீடு குறித்த தெளிவான சட்டத்தின் தேவைக்கு புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
எழுத்தாளர் விதி சட்டக் கொள்கை மையத்தில் உள்ள அரசியலமைப்புச் சட்ட மையமான சர்க்காவை வழிநடத்துகிறார்.