பண்ட வழித்தோன்றல்கள் என்றால் என்ன? -குஷ்பு குமாரி மற்றும் ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— டிஜிட்டல் தங்க திட்டங்கள் பெரும்பாலும் உண்மையான தங்கத்திற்கு  மாற்றான முதலீடுகளாக விளம்பரப்படுத்தப்படுவதாக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அவை ஒழுங்குபடுத்தப்படாதவையாகவே இருக்கின்றன. மேலும், எந்தவொரு சட்டப்பூர்வ ஒழுங்குமுறை வரம்பிற்கும் உட்பட்டவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிக ஆபத்துகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.


— டிஜிட்டல் தங்கம் என்பது விலைமதிப்பற்ற உலோகத்தை உண்மையில் உடமையில் கொள்ளாமல் தங்கத்தை வாங்குவதைக் குறிக்கிறது. டிஜிட்டல் தங்கத்தின் விலை உண்மையான தங்கத்தின் விலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தங்கம் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் (blockchain technology) பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் தங்கத்தை மின்னணு முறையில்  வாங்க, விற்க மற்றும் சேமிக்க அனுமதிக்கிறது.


— டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது எளிதானது மற்றும் அவசர காலங்களில் அதை விரைவாக விற்கவும் முடிகிறது. பெரிய முதலீடுகள் தேவைப்படும் பாரம்பரிய தங்கக் கொள்முதல்களைப் போலன்றி, டிஜிட்டல் தங்கம் அல்லது மின்னணு-தங்க திட்டங்கள் (e-gold products) முதலீட்டாளர்கள் சிறிய அளவுகளில் விலைமதிப்பற்ற உலோகத்தை சொந்தமாக வாங்கிக்கொள்ள அனுமதிக்கின்றன.


—இது சேமிப்பு பிரச்சனையை (storage hassle) நீக்குகிறது. மேலும், உண்மையான தங்கத்துடன் தொடர்புடைய மிகப்பெரிய சவாலாக  உள்ளது. டிஜிட்டல் தங்கம் முதலீட்டாளர்கள் தேவைப்படும்போது தங்கள் முதலீட்டை உண்மையான உலோகத் தங்கமாக மாற்ற அனுமதிக்கிறது. இதை தங்க நாணயங்கள், கட்டிகள் அல்லது நகைகளாக மாற்றிக் கொள்ளலாம். 


— சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI), பல டிஜிட்டல் மற்றும் இணைய தளங்கள் முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் தங்கம் அல்லது மின்னணு-தங்க திட்டங்களில் முதலீடு செய்யும் வசதியை வழங்குவதைக் கவனித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சலுகைகள் பெரும்பாலும் வசதியானதாகவும், உலோகத் தங்கத்தை வைத்திருப்பதற்கான மாற்று வழிகளாகவும் சந்தைப்படுத்தப்படுகின்றன.

— ஒழுங்குபடுத்தப்படும் தங்கம் தொடர்பான பொருட்களிலிருந்து டிஜிட்டல் தங்கப் பொருட்கள் வேறுபட்டவை என்று சந்தை ஒழுங்குமுறை ஆணையம்  கூறியுள்ளது. இந்தப் பொருட்கள் பத்திரங்களாகவோ அல்லது பண்ட வழித்தோன்றல்களாகவோ, ஒழுங்குபடுத்தப்படுவதாகவோ இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

—  சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் கூற்றுப்படி, டிஜிட்டல் தங்கம் முற்றிலும் ஒழுங்குமுறை வரம்பிற்கு வெளியே செயல்படுகிறது. இந்தப் தங்கப் பொருட்கள் முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துகளை விளைவிக்கக்கூடும் என்கின்றனர். மேலும், இது எதிர்தரப்பினரின் மற்றும் செயல்பாட்டு அபாயங்களுக்கு முதலீட்டாளர்களை ஆளாக்கக்கூடும் என்றும் அது கூறியுள்ளது.

— எந்தவொரு ஆபத்தையும் தவிர்க்க, முதலீட்டாளர்கள் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படும் தங்கப் பொருட்களில் மட்டும் முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

— பரிவர்த்தனை வர்த்தகப் பண்டக வழித்தோன்றல் ஒப்பந்தங்கள் (exchange traded commodity derivative contracts), பரஸ்பர நிதிகள் (mutual funds) வழங்கும் தங்க இ.டி.எஃப்-கள் (Gold ETFs), மற்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யக்கூடிய மின்னணுத் தங்கப் பற்றுச்சீட்டுகள் (Electronic Gold Receipts - EGRs) போன்ற பல்வேறு ஒழுங்குபடுத்தப்பட்ட தங்க திட்டங்கள் மூலம், சந்தை ஒழுங்குமுறை ஆணையமானது, தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த பொருட்களில் முதலீடுகளைச் சாத்தியமாக்கியுள்ளது.


— இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (Securities and Exchange Board of India (SEBI)) பதிவுசெய்யப்பட்ட இடைத்தரகர்கள் மூலம் இந்தத் தயாரிப்புகளில் முதலீடுகள் செய்யப்படலாம் மற்றும் இவை சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன.


— பன்முக பொருட்கள் பரிவர்த்தனை மையம் (Multi Commodity Exchange (MCX)) மற்றும் தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange (NSE)) போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட பரிவர்த்தனைகளில் வர்த்தகம் செய்யப்படும் பண்டங்களின் வழித்தோன்றல்கள் (Commodity derivatives), கடுமையான இடர் மேலாண்மை அமைப்புகள், வரம்பு கட்டமைப்புகள் (margin frameworks), மற்றும் தினசரி சந்தை விலை தீர்வுகளால் நிர்வகிக்கப்படுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


— சவரன் தங்கப் பத்திரங்கள் (Sovereign gold bond (SGBs)) என்பது அரசாங்கத்தின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கியால்  வழங்கப்படும் கடன் பத்திரங்கள் ஆகும். ஒவ்வொரு அலகும் ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கும். இந்தப் பத்திரங்கள் இரண்டாம் நிலை சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு மூலதன ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.


— இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI)) இந்திய அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் ஏப்ரல் 12-ஆம் தேதி, 1988-ஆம் ஆண்டு  சட்டபூர்வமற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டது. இது 1992-ஆம் ஆண்டில் சட்டபூர்வமான அமைப்பாக நிலைநாட்டப்பட்டது மற்றும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரிய சட்டம், 1992 (1992-ன் 15)-ன் விதிகள் ஜனவரி 30-ஆம் தேதி  1992-ஆம் ஆண்டு  நடைமுறைக்கு வந்தன.


— இந்தியாவில் பண்டப் பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்களை கடினப் பொருட்கள் (Hard Commodities) மற்றும் மென்மையானப் பொருட்கள் (Soft Commodities) என வகைப்படுத்தலாம். கடினப் பொருட்கள் என்பதில் உலோகங்கள் (metals) மற்றும் ஆற்றல் (energy) ஆகியவை அடங்கும். மென்மையானப் பொருட்கள் என்பவை வேளாண்மை மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.


Original article:

Share: