வெப்பமண்டலப் புயல்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடாக இந்தியா இருப்பதற்கான காரணம் என்ன? -அபினவ் ராய்

 இந்திய துணைக்கண்டம் ஏன் அடிக்கடி வெப்பமண்டல புயல்களை  எதிர்கொள்கிறது? காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு இந்தியாவின் புயல் பாதிப்பை எவ்வாறு அதிகரிக்கிறது? சமீபத்திய ஆண்டுகளில், மேம்படுத்தப்பட்ட முன்னறிவிப்பு மற்றும் முன்னேற்பாடுகள், புயல் தொடர்பான உயிரிழப்புகளைக் குறைத்துள்ளதா?


கடந்த மாதம் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் மோந்தா புயல் மணிக்கு சுமார் 100 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்ததது. புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பயிர்கள், மின்சாரம், சாலைகள் மற்றும் போக்குவரத்து கடுமையாகச் சேதமடைந்தன.


ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் 87,000 ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்தன.  மேலும், ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த சேதம் 6,384 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒன்றிய அரசிடம் இருந்து உடனடி நிவாரணமாக 901.4 கோடி ரூபாயைக் கோரியுள்ளது.


தீவிர வானிலை நிகழ்வுகள் (வெப்ப அலைகள், குளிர் அலைகள், வெப்பமண்டல புயல்கள், வெள்ளம், மின்னல், கனமழை போன்றவை) குறித்த ஆய்வின்படி, 1970–2019 ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் வெப்பமண்டல புயல்கள் மட்டுமே 28.6 சதவிகிதத்திற்குக் காரணமாக இருந்துள்ளன. 'இந்தியாவில் தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் நீண்டகால மாற்றங்கள் குறித்த ஒரு மதிப்பீடு: 1970-2019 என்ற தலைப்பிலான 50 ஆண்டுகால தரவுகளின் ஆய்வு, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department (IMD)) தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.


புயல் என்றால் என்ன, அதன் பல்வேறு வகைகள், உருவாக்கம் மற்றும் வெப்பமண்டல புயல்களுக்கு இந்தியா ஏன் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்வோம்.


புயல்களும் அவற்றின் வகைகளும்


புயல்கள் என்பவை ஒருவித வளிமண்டல இடையூறுகள் ஆகும். இது குறைந்த காற்று அழுத்த மையத்தைச் சுற்றிச் சுழல்கிறது. வெப்பமண்டலப் புயல்கள் உருவாவதற்கும், அவற்றின் தீவிரம் அதிகரிப்பதற்கும் தேவையான ஆற்றலின் ஆதாரம், வெப்பமான கடல் நீரால் உருவாகும் வெப்பமும் ஈரப்பதமும் ஆகும்.


வட கோளத்தில் (Northern Hemisphere), காற்றின் சுழற்சி திசை எதிர் கடிகார திசையில் இருக்கும், அதேசமயம் தென் கோளத்தில் (Southern Hemisphere), அது கடிகார திசையில் சுழல்கிறது. அவற்றின் இருப்பிடத்தின் அடிப்படையில், புயல்கள் வெப்பமண்டலப் புயல்கள் என்றும் (வெப்பமான வெப்பமண்டலக் கடலில் உருவாகுபவை), வெப்பமண்டலத்திற்கு அப்பாற்பட்ட புயல்கள் என்றும் (மிதவெப்ப மண்டலம் மற்றும் உயர்-அட்சரேகைப் பகுதிகளில் ஏற்படுபவை) வகைப்படுத்தப்படுகின்றன.


வெப்பமண்டலப் புயல்கள் உலகெங்கிலும் வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகின்றன. அட்லாண்டிக்கில் சூறாவளிகள் (Hurricanes), சீனாவில் டைஃபூன்கள் (Typhoons), மற்றும் ஆஸ்திரேலியாவில் வில்லி-வில்லிஸ் (Willy-willies) என்று அழைக்கப்படுகின்றன. இந்திய நிலப்பரப்பின் பெரும்பகுதி மற்றும் சுற்றியுள்ள வட இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கோடுக்கும் (equator) கடக ரேகைக்கும் (tropic of cancer) இடையில் அமைந்துள்ளதால் மிகவும் பேரழிவு தரும் வெப்பமண்டலப் புயல்களுக்கு ஆளாகிறது.


வெப்பமண்டல புயல் எவ்வாறு உருவாகிறது?


வெப்பமண்டலப் புயல்களானது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள (5°-20° வடக்கு மற்றும் தெற்கு அட்சரேகைகள்) வெப்பமான கடல்களில் உருவாகின்றன. இவை உருவாகப்  பின்வரும் நிபந்தனைகள் தேவைப்படுகின்றன:


1. கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature (SST)) சுமார் 27℃ அல்லது அதற்கு மேல் (60–70 மீட்டர் ஆழம் வரை) இருத்தல்.


2. வெப்பமான மற்றும் ஈரப்பதமான காற்றின் போதுமான விநியோகம்.


3. கோரியோலிஸ் விசை (Coriolis force) (வடக்கு அரைக்கோளத்தில் குறைந்த அழுத்த அமைப்புகளில் காற்றின் எதிரெதிர் கடிகார திசைக்கு இதுவே காரணமாகும்).


4. ஏற்கனவே இருக்கும் பலவீனமான குறைந்த அழுத்தப் பகுதி.


மேற்பரப்பு தொந்தரவுக்கு மேலே 9-15 கி.மீ உயரத்தில் எதிர்ச் சுழல் ஓட்டம் (anticyclonic circulation) இருக்கும்போது இந்தப் புயல்கள் மேலும் தீவிரமடைகின்றன. இது காற்றின் மேல்நோக்கிய இயக்கத்தை விரைவுபடுத்துகிறது. மேலும், குறைந்த அழுத்த அமைப்பை ஆழப்படுத்துகிறது.


புயலின் ‘கண்’ என்றால் என்ன?


புயலின் மையம் மிகக் குறைந்த அழுத்தம், அமைதியான மற்றும் கீழ்நோக்கி இறங்கும் காற்று ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த பகுதி புயலின் ‘கண்’  என்றும் அழைக்கப்படுகிறது. இதைச் சுற்றி 'கண் சுவர்' (eye wall) உள்ளது. அங்கு வெப்பமான சுழல் காற்று மேல்நோக்கி நகர்ந்து, வளிமண்டல அடுக்கின் உச்சத்தை (tropopause) அடைகிறது.


புயல்கள் கடல்களின் மீது தோன்றி, பொதுவாக கடற்கரையை அடையும்போது, அது ‘கரையிறங்குதல்’ (landfall) என்று குறிப்பிடப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கரையிறங்குதல் என்பது, நீர்நிலைக்கு மேலே இருந்த வெப்பமண்டல புயல் நிலப்பரப்புக்கு வருவது ஆகும்.


கடல்களின் மீது, இந்தப் புயல்கள் தொடர்ச்சியான ஈரப்பதம் கிடைப்பதால், அதிக வீரியம் பெற்று, மிக அதிவேகத்துடன் மணிக்கு 180-400 கிமீ வேகத்தில்  நகர்கின்றன. இருப்பினும், நிலப்பகுதிக்கு வந்த பிறகு, ஈரப்பதம் விநியோகம் துண்டிக்கப்படுவதால், அவை உள்நாட்டுப் பகுதிகளுக்குள் நகரும்போது படிப்படியாகச் சிதறி மறைகின்றன. இதனால்தான் பெரும்பாலான பேரழிவு தரும் விளைவுகள் பெரும்பாலும் கடலோரப் பகுதிகளில் ஏற்படுகின்றன.


இந்தப் புயல்களின் சராசரி விட்டம் 600 முதல் 1200 கி.மீ. வரை இருக்கும். இந்தப் புயல்கள் தங்கள் வலிமைக்கு ஏற்ப மாறுபட்ட வேகங்களில் முன்னேறுகின்றன. பலவீனமான புயல்கள் சுமார் 32 கி.மீ/மணி வேகத்தில் நகர்கின்றன, அதேசமயம் புயல்கள் 180 கி.மீ/மணி அல்லது அதற்கு மேல் வேகத்தை அடையலாம். தொடர்ச்சியான காற்றின் வேகம் 34 நாட்ஸ் (62 கி.மீ/மணி) அல்லது அதற்கு மேல் இருக்கும்போது, அந்தச் புயலுக்கு ஒரு தனித்துவமான பெயர் வழங்கப்படும்.


வெப்பமண்டல புயல்களின் தாக்கம்


இந்த வளிமண்டலக் குழப்பங்கள் வெவ்வேறு அட்சரேகை மண்டலங்களுக்கு இடையில் வெப்பம், ஈரப்பதம் மற்றும் மழையின் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இந்தியாவில், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து உருவாகும் சூறாவளிகள் பெரும்பாலும் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் வானிலை நிலைகளை பாதிக்கின்றன.


அவை அதிவேகமான காற்று, மிக அதிக கனமழை மற்றும் கடலில் ஏற்படும் புயல் அலைகள் (கடல் அலைகள்) மூலம் கடுமையான மற்றும் பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தலாம். இந்தச் புயல்கள் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தலாம், மேலும் கட்டிடங்கள், போக்குவரத்து அமைப்புகள், நீர் மற்றும் மின்சாரம் வழங்கல் உட்பட அடிப்படை வசதிகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது.


இந்தக் கடல்-வளிமண்டல இடைவினைகள் இருவழிச் செயல்முறைகளாகும். வெப்பமான கடல்கள் புயல்கள் தோன்றுவதற்கும், தீவிரமாவதற்கும் சாதகமான சூழ்நிலையை வழங்குகின்றன. இந்தச் புயல்கள் பின்னர் ஆழமான அடுக்குகளிலிருந்து குளிர்ச்சியான மற்றும் அதிக உவர்ப்புள்ள நீரை கடலின் மேற்பரப்புக்கு இழுத்து வருகின்றன. புயல்களால் தூண்டப்படும் இந்த குளிர்ச்சியடைதல் புயலின் வேகம், காற்றின் சக்தி, கடல் அடுக்குகளின் அமைப்பு மற்றும் அடித்தள நிலைமைகளைப் பொறுத்து அமைகின்றது.


பெருங்கடல்களுக்கும் வளிமண்டலத்துக்கும் இடையிலான இந்தத் தொடர்பு, சூறாவளிகள் கடல்வாழ் உற்பத்தித்திறனையும் கார்பன் சுழற்சியையும் பாதிப்பதால், கடலில் இருந்து உயிரியல் ரீதியான பதிலாக பெரிய குளோரோபில் பூக்கும் (chlorophyll blooms)  நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது.


குளோரோபில் பூக்கும் நிகழ்வு (chlorophyll blooms) என்பது கடல் நீரில் பைட்டோபிளாங்டன் எனப்படும் நுண்ணிய தாவர உயிரிகள் திடீரென மிக அதிக அளவில் பெருகுவதாகும். இதனால் கடல் நீரின் நிறம் பச்சையாகவோ அல்லது வேறு நிறங்களிலோ (சிவப்பு, பழுப்பு) தெரியும். இதை விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் படங்களிலும் காணலாம்.


இந்தியாவின் அதிகரித்து வரும் பாதிப்புகள்


இந்தியா ஒரு நீண்ட கடற்கரை, ஆழமற்ற கண்டத் திட்டு (continental shelf), அதிக மக்கள் தொகை அடர்த்தி மற்றும் சமதள கடலோரப் பகுதி ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், இது வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் வெப்பமண்டலப் புயல்களுக்கு ஆளாகிறது. வடக்கு இந்தியப் பெருங்கடல், வெப்பமண்டலச் புயல்களால் பெரும்பாலும் உருவாகும் உலகின் ஆறு முக்கியப் பகுதிகளில் ஒன்றாகும்.


இந்தியாவின் புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 8 சதவீதமும், அதில் உள்ள 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஆண்டுதோறும் கடுமையான வெப்பமண்டலப் புயல்களால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்மட்ட உயர்வு காரணமாக, கடலோர மக்களுக்குப் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. 


வரலாற்று ரீதியாக, இந்தப் புயல்கள், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதிப்பதுடன், சொத்துக்களுக்குக் கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சமீபத்திய வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பேரழிவுகளில் ஒன்று, 1999-ஆம் ஆண்டில்  அக்டோபர் 28-29-ஆம் தேதிகளில் ஒடிசா மாநிலத்தை தாக்கிய  ‘சூப்பர்’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு ஆகும். இந்தப் புயல் 10,000 உயிர்களைப் பலிகொண்டது. 2,75,000 வீடுகளைச் சேதப்படுத்தியது, 1.67 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வீடற்றவர்களாக ஆக்கியதுடன், அவர்களின் வாழ்வாதாரங்களாக இருந்த கால்நடைகளையும் பலிகொண்டது.


உலகளாவிய வெப்பமண்டலப் புயல்களில், சுமார் 6-7 சதவீதம் வடக்கு இந்தியப் பெருங்கடலில் ஆண்டுதோறும் ஏற்படுகின்றன. அவற்றில் சில புயல்கள்  மிகவும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது, அரபிக் கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் 1.2–1.4°C அதிகரிப்பை ஆய்வுகள் குறிக்கின்றன. இந்த வெப்பநிலை உயர்வு சூறாவளிகள் விரைவாகத் தீவிரமடைவதற்குச் சாதகமாக உள்ளது. இந்தத் தீவிரத்தினால், பெரும்பாலும் கரையில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கும் பேரிடர் மேலாண்மைக் குழுவுக்குப்  போதுமான காலஅவாகசம் கிடைப்பதில்லை.


தயார்நிலை மற்றும் தணிப்பு உத்திகள்


2005-ஆம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) நிறுவப்படுவதற்கு முன்பே 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘சூப்பர்’ புயலின் பாதிப்புக்குப் பிறகு, ஒடிசா மாநிலம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை நிறுவியது குறிப்பிடத்தக்கது. கடலோர மக்களின் பாதிப்பைக் குறைக்கும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) 2011-ஆம் ஆண்டு தேசிய புயல் அபாயக் குறைப்புத் திட்டம் (National Cyclone Risk Mitigation Project (NCRMP)) தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேம்பட்ட காலநிலை முன்னறிவிப்பு மற்றும் சிறந்த தயார்நிலை நடவடிக்கைகள் ஆகியவை அண்மைக் காலங்களில் நிகழந்ததைப் போல, உயிரிழப்புகளை திறம்பட குறைக்க உதவியுள்ளன. புயல் பாதை மற்றும் கரையைக் கடக்கும் இடங்களுக்கான முன்னறிவிப்பு திறன்களும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளன. இருப்பினும், புயல்கள் தீவிரமடைவதைத் துல்லியமாக முன்னறிவிப்பது, குறிப்பாக அது தீவிரமாக இருக்கும்போது, போதுமான கால அவகாசத்துடன் முன்னறிவிப்பது இன்னமும் சவாலாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் முதன்மையாகக் கடலில் நேரடியாக மேற்கொள்ளப்படும் (in-situ) கண்காணிப்புகளில் உள்ள இடைவெளிகளே ஆகும் என்கின்றனர். 


தயார்நிலை மற்றும் தணிப்பு உத்திகளை மேலும் மேம்படுத்த, வெளியேற்றத்தை மையமாகக் கொண்ட பதிலளிப்புகளில் இருந்து, தாங்கும் திறனை  நோக்கிய அமைப்புகளுக்கு விரைவான மாற்றம் தேவைப்படுகிறது. பேரிடர் காலங்களில் சமூகங்களே முதல் பதிலளிப்பாளர்களாக இருப்பதால், அவர்களுக்கான திறன் மேம்பாடும் மிக முக்கியமாகிறது. முன்கூட்டிய எச்சரிக்கை பரவல் அமைப்பு (Early Warning Dissemination System (EWDS)) மற்றும் சமூக அடிப்படையிலான பேரிடர் ஆபத்து மேலாண்மை (Community Based Disaster Risk Management (CBDRM)) நடைமுறைகளை ஊக்குவிக்கும் கொள்கைகள் புயல் கரையை கடப்பதற்கு முன்பு சரியான நேரத்தில் வெளியேற்றத்திற்கு மேலும் உதவும் என்று கூறப்படுகிறது.


புயல் அபாய குறைப்பு உள்கட்டமைப்பானது (Cyclone Risk Mitigation Infrastructure (CRMI)), பல்நோக்கு புயல் தங்குமிடங்கள் (multi-purpose cyclone shelters (MPCS)), சாலைகள், பாலங்கள், நிலத்தடி மின்சார கேபிள் பதித்தல் மற்றும் உப்புக் காற்றைத் தடுக்கும் தடுப்பணைகள் (saline embankments) ஆகியவற்றைக் கட்டுவதற்கான முதலீடுகள் மூலம் கடலோர சமூகங்களின் தயார் நிலையையும் பாதிப்பைக் குறைக்கும் தன்மையையும் மேம்படுத்துகிறது. ஒரு முழுமையான புயல் பேரிடர் மேலாண்மை அணுகுமுறை, பேரிடர் தயார்நிலை மற்றும் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் முன்முயற்சியுடன் செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 



Original article:

Share: