மாநிலத்தின் 'கீழ்-மேல்' அணுகுமுறையில், மாவட்ட அளவிலான கார்பன் நீக்க திட்டங்களும் (decarbonisation plans), நிகழ்நேரக் கண்காணிப்பும் உள்ளூர் மற்றும் துணை-உள்ளூர் மட்டங்களில் காலநிலை நடவடிக்கைகளை வடிவமைக்க உதவுகின்றன.
காலநிலை நடவடிக்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான தமிழ்நாட்டின் அணுகுமுறை, கொள்கைகள் செயல்படுத்தப்படும் இடத்தில், சமூகங்கள் பங்கேற்கும் மற்றும் முடிவுகளை அளவிடக்கூடிய இடத்தில் திறமையுள்ள தலைமை தொடங்கப்பட வேண்டும். இந்தக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவர, மாநிலம் அனைத்து காலநிலை தொடர்பான பணிகளையும் ஒருங்கிணைத்து கண்காணிக்க இந்தியாவின் முதல் பிரத்யேக அமைப்புகளில் ஒன்றை உருவாக்கியது. அதாவது, தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (Tamil Nadu Green Climate Company (TNGCC)) ஆகும். அவை நான்கு முக்கிய பணிகளானவை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (Tamil Nadu Climate Change Mission (TNCCM)), பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission (GTNM)), தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் (Tamil Nadu Wetlands Mission (TNWM)) மற்றும் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கம் (Tamil Nadu Coastal Restoration Mission (TN SHORE)) ஆகும். இந்தப் பணிகள் மூலம், உமிழ்வைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும், வாழ்வாதார மீள்தன்மையை வலுப்படுத்தவும் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) செயல்படுகிறது.
நிகர பூஜ்ஜிய இலக்கு, முன்னோடி மாவட்டங்கள்
2070-க்கு முன்னர் தமிழ்நாட்டை நிகர பூஜ்ஜிய இலக்காக மாற்றும் நோக்கத்துடன், 2005 முதல் 2019 வரை அனைத்து துறைகள் மற்றும் துணைத் துறைகளிலிருந்தும் வருடாந்திர உமிழ்வை உள்ளடக்கிய விரிவான பசுமை இல்ல வாயு (Greenhouse Gas (GHG)) பட்டியலை தமிழ்நாடு மாநிலம் வெளியிட்டுள்ளது. மேலும், மாநிலம் விரிவான நிகர பூஜ்ஜிய பாதையையும் உருவாக்கியுள்ளது.
பசுமை இல்ல வாயு சரக்கு பட்டியலின் கண்டுபிடிப்புகள் நேர்மறையான போக்குகளைக் காட்டுகின்றன. இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், 2019-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உமிழ்வில் 7% மட்டுமே தமிழ்நாடு பங்களித்தது. மேலும், 2005 மற்றும் 2019-க்கு இடையில், அதன் உமிழ்வு தீவிரத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 60% குறைத்தது.
இந்த முன்னேற்றம் பல முக்கிய துறைகளின் இலக்குக்கான தலையீடுகளை பிரதிபலிக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விரைவான வளர்ச்சி, மேம்பட்ட எரிசக்தி திறன், தொழில்துறை கார்பன் நீக்கம் மற்றும் அனைத்து பொது போக்குவரத்தையும் மின்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சிய மின்சார இயக்க திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இன்று, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தமிழ்நாட்டின் மொத்த நிறுவப்பட்ட மின் திறனில் சுமார் 60% ஆகும். இது மாநிலத்தின் மொத்த மின்சார உற்பத்தியில் 30% பங்களிக்கிறது.
2070-க்கு முன்னர் நிகர பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக, கீழிருந்து மேல் மட்டத்திற்கு காலநிலை நடவடிக்கை திட்டமிடலைத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் மாவட்ட அளவிலான கார்பன்நீக்கத் திட்டங்களையும், வாசுதா அறக்கட்டளையுடன் (Vasudha Foundation) இணைந்து உருவாக்கப்பட்ட நிகழ்நேர காலநிலை நடவடிக்கை கண்காணிப்பனையும் (Climate Action Tracker) மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது உள்ளூர் நிர்வாகத்தில் காலநிலை நடவடிக்கைகளை நேரடியாக இணைக்கிறது. நீலகிரி, கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு முன்னோடி மாவட்டங்களுக்கான கார்பன்நீக்கத் திட்டங்களைக் கொண்டுள்ளன. இந்த மாவட்டங்கள் 2050-ம் ஆண்டுக்குள் (நான்கு மாவட்டங்களில்) திட்டமிடப்பட்ட உமிழ்வுகளில் 92% வரை குறைக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. இதில், சுத்தமான எரிசக்தி தழுவல், சிறந்த இயக்க மாற்றம், மேம்பட்ட தொழில்துறை செயல்திறன் மற்றும் இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் குறைக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. 2050-ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடுக்கு சமமான கார்பன்-டை-ஆக்சைடை பிரித்தெடுக்கும் ஆற்றலும் அவற்றுக்கு உண்டு.
இந்த நான்கு மாவட்டங்களுக்கான காலநிலை செயல் திட்டங்கள் மற்றும் கார்பன் நீக்க இலக்கு பாதைகள், வரலாற்று மற்றும் தற்போதைய காலநிலை தரவுகளின் அடிப்படையில் விரிவான காலநிலை மாறுபாடு மதிப்பீடு மற்றும் நூற்றாண்டின் இறுதிவரை மதிப்பீடுகளை முன்னிறுத்தி விரிவான மாவட்ட அளவிலான பசுமை இல்ல வாயு உமிழ்வு சரக்குகளை உருவாக்குகின்றன. தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வு என்னவென்றால், பசுமை இல்ல வாயுக்கள் நான்கு மாவட்டங்களில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மற்றும் உலகளவில் தடையின்றி விடப்பட்டால், 2100-ம் ஆண்டுக்குள் வெப்பமான நாட்களின் எண்ணிக்கை சுமார் 95% கணிசமாக அதிகரிக்கும். மழைப்பொழிவும் கணிசமாக அதிகரிக்கும், இதனால் ஈரப்பதமான பருவமழை உருவாகும். இது குறிப்பாக பிராந்தியத்தை, பாதிக்கப்படக்கூடிய நீலகிரி மாவட்டத்தை பாதிக்கும்.
பொறுப்பான காரணிகள்
நீலகிரியில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் மிகப்பெரிய ஆதாரம் சாலைப் போக்குவரத்து ஆகும். அங்குள்ள மொத்த உமிழ்வில் இது சுமார் 43% பங்களிக்கிறது. கோயம்புத்தூரில், இது சுமார் 36% பங்களிக்கிறது. அதைத் தொடர்ந்து குடியிருப்பு எரிசக்தி பயன்பாடு அடுத்த முக்கிய ஆதாரமாகும். நீலகிரியில் 20% உமிழ்வும், கோயம்புத்தூரில் 12% உமிழ்வும் இது பங்களிக்கிறது. விருதுநகரில் சிமென்ட், சாலைப் போக்குவரத்து மற்றும் தொழில்துறை எரிசக்தி ஆகியவை அதிக பசுமை இல்ல வாயு வெளியேற்ற பங்களிப்பாளர்களாக உள்ளன. அவற்றின் பங்களிப்புகள் முறையே 37%, 20% மற்றும் 16% ஆகும். இராமநாதபுரத்தில், பொது மின்சார உற்பத்தி மற்றும் நெல் சாகுபடி (முறையே 28% மற்றும் 12%) ஆகியவை பங்களித்தன.
உமிழ்வுப் பாதைகளை அடிப்படையாகக் கொண்டு, திட்டங்கள் கார்பன் உமிழ்வின் முக்கிய இயக்கிகளை அடையாளம் காண்கின்றன. பின்னர் அவர்கள் 2025-ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் உடனடியாகத் தொடங்கத் தயாராக உள்ள திட்டங்களின் (shovel-ready projects) பட்டியலை முன்மொழிகின்றனர். இந்தத் திட்டங்கள் மின்சார இயக்கம் (electric mobility), கழிவு மேலாண்மை (waste management), வன மறுசீரமைப்பு (forest restorations) மற்றும் தொழில்துறை கார்பன்நீக்கம் (industrial decarbonisation) ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒவ்வொரு திட்டப் பட்டியலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், மிதமான சூழ்நிலையில்கூட நீலகிரி மாவட்டம் 2030-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைய முடியும். ராமநாதபுரம் ஒரு தீவிரமான சூழ்நிலையில் 2047-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைய முடியும், இதற்கு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவைப்படும். கோயம்புத்தூர் மற்றும் விருதுநகர் ஆகியவை அதிக தொழில்மயமாக்கப்பட்டவை என்பதால், 2055-ம் ஆண்டுக்குள் மட்டுமே நிகர பூஜ்ஜியத்தை அடைய முடியும்.
இந்த அணுகுமுறை காலநிலை மாற்றத்தை ஒரு வரம்பாகக் கருதாமல், இயற்கையையும் மக்களையும் பாதுகாக்கும் வளர்ச்சியைத் தொடர ஒரு வாய்ப்பாகக் கருதுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் இதே போன்ற திட்டங்கள் விரைவில் தயாரிக்கப்படும்.
காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு என்பது ஒரு எளிய முன்மாதிரியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் எதையாவது அளவிடும்போது, அதைச் செய்ய முடியும். இது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெளிப்படையான அமைப்பை உருவாக்குகிறது. இந்த அமைப்பு திட்டமிடல் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு உதவுகிறது. இது ஒவ்வொரு மாவட்டமும் அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் அதன் உத்திகளை மேம்படுத்தவும் உதவுகிறது. நான்கு முன்னோடி மாவட்டங்களில் திறம்பட செயல்படுத்துவதை ஆதரிப்பதற்காக ஒரு தனித்துவ திட்ட மேலாண்மை பிரிவு அமைக்கப்படுகிறது. செயல் கண்காணிப்பு மற்றும் செயல் திட்டங்களை https://tnclimatetracker.tn.gov.in எனும் இணையத்தளத்தில் அணுகலாம்.
பிற திட்டங்கள், சமூக கவனம்
தமிழ்நாடு பல முக்கிய முயற்சிகளைக் கொண்டுள்ளது. இதில் பெரிய அளவிலான காடு வளர்ப்பு, சதுப்புநில மறுசீரமைப்பு, சதுப்புநில மறுசீரமைப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். மாநிலத்தில் இப்போது ராம்சார் தளங்களாக நியமிக்கப்பட்ட 20 சதுப்புநிலங்கள் உள்ளன. இது அதன் மொத்த நிலப்பரப்பில் 30%-ஐயும் பாதுகாத்துள்ளது. அதன் 1,068 கிலோமீட்டர் கடற்கரையில், தமிழ்நாடு பெரிய சதுப்புநில மற்றும் கடல்சார் மறுசீரமைப்பு திட்டங்களில் பணியாற்றி வருகிறது. இந்த முயற்சிகள் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர வாழ்வாதாரங்களை ஆதரிக்கின்றன.
விவசாயம், கால்நடைகள் மற்றும் கழிவுகளை உள்ளடக்கிய எரிசக்தி மற்றும் தொழில்துறைக்கு அப்பால் கவனத்தை விரிவுபடுத்துவதன் மூலம், தமிழ்நாடு அதன் குறைந்த கார்பன் மாற்றத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துகிறது.
சமூகங்கள் இந்த மாற்றத்தின் முக்கியக் கட்டமாக வைக்கப்பட்டு, காலநிலை நடவடிக்கைகளை ஒரு பங்கேற்பு செயல்முறையாக மாற்றுகின்றன. உள்ளூர் மற்றும் துணை உள்ளூர் மட்டங்களில் இன்று மேற்கொள்ளப்படும் தேர்வுகள் மாநிலத்தின் பொருளாதாரம், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சமூகங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும். தமிழ்நாட்டின் அனுபவம், காலநிலை தலைமைத்துவம் என்பது இனி லட்சிய இலக்குகளை நிர்ணயிப்பது பற்றியது அல்ல, மாறாக முன்னேற்றத்தைக் காணக்கூடிய, சரிபார்க்கக்கூடிய மற்றும் பங்கேற்புடன் கூடிய அமைப்புகளை உருவாக்குவது பற்றியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியா அதன் நிகர-பூஜ்ஜிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறி வருகையில், தமிழ்நாட்டின் மாதிரியானது, உள்ளூர் கண்டுபிடிப்புகள் மற்றும் சான்றுகள் சார்ந்த நிர்வாகம் மூலம் தேசிய நோக்கத்தை எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதைக் காண்பிப்பதன் மூலம் ஒரு மதிப்புமிக்க திட்டத்தை இது வழங்குகிறது.
சுப்ரியா சாஹு, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆவார். ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசாமி, வசுதா அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் ஆவார்.