இந்தியா தனது நுகர்வோர் விலைக் குறியீட்டை அவசரமாகத் திருத்த வேண்டும்.
அக்டோபர் மாதத்திற்கான சில்லறை பணவீக்கத் தரவு, நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index(CPI)) புதுப்பிப்பு போதுமான அளவு வேகமாக நடக்காது என்பதை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் வெறும் 0.25% ஆகக் குறைந்துள்ளது. இது ஜனவரி 2012-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவு என்பதை தரவு காட்டுகிறது. முதலில், இது ஒரு செய்தியாகத் தெரிகிறது. ஆனால் இதை கவனமாகப் பார்த்தால், இந்த கடுமையான வீழ்ச்சி விலை நிலைகளில் உண்மையான வீழ்ச்சிக்கு பதிலாக ஒரு புள்ளிவிவர முரண்பாடு என்பதை வெளிப்படுத்துகிறது. உணவு மற்றும் பானங்கள் பிரிவில் அக்டோபரில் விலைகள் 3.7% குறைந்துள்ளன. இது நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) தற்போதைய தொடரின் வரலாற்றில் இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இருப்பினும், இது குறைந்ததற்கு முக்கியக் காரணம் உணவு விலைகள் மலிவாக மாறியதால் விலைகள் குறையவில்லை, மாறாக கடந்த ஆண்டு அக்டோபரில் உணவுப் பணவீக்கம் 9.7%-ஆக இருந்தது. இந்த உயர் அடிப்படை, சந்தைகளில் காய்கறி விலைகள் சமீபத்தில் அதிகரித்து வந்தாலும், அக்டோபர் 2025-ல் உணவுப் பணவீக்கம் எதிர்மறையாக இருப்பதை உறுதி செய்தது. உணவு மற்றும் பானங்கள் பிரிவு ஒட்டுமொத்த நுகர்வோர் விலை குறியீட்டில் கிட்டத்தட்ட 46% தன்மையை கொண்டுள்ள நிலையில், உணவு பணவீக்கத்தில் ஏற்பட்ட இந்த புள்ளிவிவர முரண்பாடு முழுக் குறியீட்டையும் கீழே இழுத்ததற்கு காரணமாக அமைந்தது. உண்மையில், எரிபொருள் மற்றும் மின்பொருட்கள், வீட்டுவசதி, புகையிலை மற்றும் இதர பிரிவுகள் என கிட்டத்தட்ட அனைத்து முக்கிய துணைப் பிரிவுகளிலும் பணவீக்கம் கடந்த ஆண்டைவிட இந்த அக்டோபரில் அதிகமாக இருந்தது. ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளின் தாக்கம் இதுவரை ஆடை மற்றும் காலணி பிரிவில் மட்டுமே காணப்பட்டது. உணவுப் பொருட்களைத் தவிர பணவீக்கம் கடந்த ஆண்டைவிடக் குறைவாக இருந்த ஒரே பிரிவு இதுதான். இவை அனைத்தும் பணவீக்க அளவீடு எவ்வளவு சாய்வாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது 2012-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டிருப்பதால் பழமையானது மட்டுமல்ல, மதிப்பீடுகள் இப்போது சரியானவை இல்லை; அவை தெளிவுபடுத்துவதைவிட அடிக்கடி குழப்பம் தருகின்றன. CPI மற்றும் உண்மை வாழ்க்கை இடையிலான இந்த விலகலை, செப்டம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி (RBI) நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்கள் கணிப்பு பணவீக்க விகிதம் 7.4% என்று கூறியிருந்தது என்பதன் மூலம் இது CPI அறிக்கையிடும் அளவை விட மிகவும் வேறுபட்டது என சிறப்பாகப் புரிந்துகொள்ளலாம்.
இந்த அவசர புதுப்பிப்புக்குப் பிறகு, அளவிடப்பட்ட பணவீக்கத்திற்கும் மக்கள் என்ன உணர்கிறார்கள் என்பதற்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியால் மட்டுமல்ல, வட்டி விகிதங்களை என்ன செய்வது என்று தீர்மானிக்கும்போது இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee) நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI) அதன் அளவுகோலாகப் பயன்படுத்துவதாலும் இது அமைகிறது. விகிதங்களை அப்படியே வைத்திருக்க வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய இந்தக் குழு டிசம்பரில் கூடும். ஜிஎஸ்டி விகிதக் குறைப்பால் ஏற்பட்ட தற்காலிகத் தேவை அதிகரிப்பால் தெளிவற்ற வளர்ச்சித் தரவுகளுடன் இது போராட வேண்டியிருக்கும். புள்ளிவிவர முரண்பாடுகளால் சூழப்பட்ட பணவீக்கத் தரவுகளையும் பகுப்பாய்வு செய்வது துல்லியமான கொள்கை வகுப்பை மிகவும் கடினமாக்கும். நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) புதிய தொடர் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் தயாராக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. அது எவ்வளவு விரைவில் நடக்கிறதோ அவ்வளவு சிறந்தது.