பீகாரின் வளர்ச்சி இந்தியாவின் பிற பகுதிகளுடனான இடைவெளியைக் குறைத்துள்ளதா? -உதித் மிஸ்ரா

 பீகாரின் உற்பத்தி வளர்ச்சி மற்றும் வளர்ச்சி விகித பகுப்பாய்வு : பீகாரின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகள் அடிப்படையில் சிறியது. இதன் வளர்ச்சி விகிதங்கள், சுவாரஸ்யத்தைக் காட்டி ஏமாற்றத்தை அளிக்கலாம். தேர்தல்கள் நெருங்கி வருவதால், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நாம் பீகார் மாநிலத்தின் செயல்திறனைப் பார்க்கிறோம்.


கடந்த 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, ​​இந்தியாவின் 3-வது அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலமாக இருந்த பீகார், மீண்டும் ஒரு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், ஒரு பெரிய பொருளாதார கேள்வி என்னவென்றால், பீகார் மாநிலத்தின் வளர்ச்சி தனக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துள்ளதா?


குறிப்பிடும்படி, எந்த அரசியல் கூட்டணி ஆட்சி செய்தாலும் அல்லது எந்தக் கொள்கைகளை செயல்படுத்தத் தேர்ந்தெடுத்தாலும், பீகாரின் வளர்ச்சி, அதன் மக்கள் பொதுவாக இடம்பெயரும் மாநிலங்களுடன் (மகாராஷ்டிரா அல்லது பஞ்சாப் போன்றவை) பொருளாதார ஒருங்கிணைப்பைக் காட்டியுள்ளதா? அதேபோல், உத்தரபிரதேசம் போன்ற பலவீனமான பொருளாதாரங்களைக் கொண்ட அருகிலுள்ள பிற மாநிலங்களைவிட பீகார் சிறப்பாக செயல்பட முடிந்ததா?


பீகார் பற்றி இரண்டு முற்றிலும் எதிரான கருத்துக்கள் உள்ளன. ஒன்று, பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை அது ஒரு முன்னேற்றமில்லா நிலையாக  (basket case) இருந்தது. இரண்டு, பீகாரின் பிம்பம் சமீப காலங்களில் அது நடத்திய பொருளாதார மறுமலர்ச்சிக்கு நியாயமற்றதாக உள்ளது.


basket case : மிகவும் மோசமான நிலை, முன்னேற்றமில்லாத மாநிலம் அல்லது பொருளாதார ரீதியாக முற்றிலும் பலவீனமான மாநிலம் என்பதைக் குறிக்கிறது.

எனவே உண்மை எங்கே இருக்கிறது? தரவைப் பார்ப்பது சில தெளிவை அளிக்கலாம், ஆனால் எந்த பகுப்பாய்வும் அதில் உள்ள எந்தவித மாறிகள் (variables) பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தது. இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க இந்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர "இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரக் கையேட்டில்" (Handbook of Statistics on Indian States) இருந்து தரவைப் பயன்படுத்தி இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறது.


பீகாரின் செயல்திறனைப் புரிந்து கொள்ள, நாம் இரண்டு விஷயங்களைப் பார்க்க வேண்டும். ஒன்று, பொருளாதார உற்பத்தி அல்லது பிற நடவடிக்கைகளின் அடிப்படையில் பீகார் இன்று எந்த நிலையில் உள்ளது எனபது. மற்றொன்று, மாநிலம் எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது. உதாரணமாக, இது மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களை பீகார் எட்டுகிறதா அல்லது உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களைவிட பின்தங்கியிருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.


இந்த பகுப்பாய்வின் நோக்கங்களுக்காக, பீகார் மாநிலத்தை மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, குஜராத், உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஆறு மாநிலங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. புவியியல் பன்முகத்தன்மையைக் காட்ட இந்த மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறந்த வாய்ப்புகளுக்காக பீகாரிலிருந்து பலர் இடம்பெயரும் மாநிலங்களும், பீகாரில் பின்தங்கிய பகுதிகளாகக் கருதப்படும் மாநிலங்களும் இவற்றில் அடங்கும்.


மேலும், கணக்கீடுகளின் அடிப்படை ஆண்டை மாற்றாமல் முடிந்தவரை முந்தைய தரவுகளையும் பகுப்பாய்வு பயன்படுத்துவதே இதன் முயற்சி.

1 : மொத்த பொருளாதார வெளியீடு

இது பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த அளவைக் குறிக்கிறது. இதை அளவிடப் பயன்படுத்தப்படும் மாறி "உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி" (real GSDP) ஆகும். அட்டவணை 1 சுருக்கமாக மாற்றங்களைக் காட்டுகிறது.

அட்டவணை 1 : TABLE 1.

பீகாரின் உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product(GSDP)), அதாவது பணவீக்கத்தை நீக்கிய பிறகு அதன் மொத்த பொருளாதார உற்பத்தி, 2011-12-ஆம் ஆண்டில் ₹2.47 லட்சம் கோடியிலிருந்து 2023-24-ஆம் ஆண்டில் ₹4.64 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது பீகாரின் பொருளாதாரம் 12 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது.


இருப்பினும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது பீகாரின் பொருளாதார உற்பத்தி எவ்வாறு மாறியது? மற்ற மாநிலங்கள் தங்கள் மொத்த உற்பத்தியை வேகமான விகிதத்தில் வளர்த்தால், பீகார், அதிகரித்த பொருளாதாரம் இருந்த போதிலும், தன்னை பின்தங்கியதாகக் காணும். 


அட்டவணை-1-ல் உள்ள முதல் பத்தி, 2011-12 ஆம் ஆண்டில் பீகாரின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை (GSDP) விட ஆறு மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி எத்தனை மடங்கு அதிகமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.


உதாரணமாக, மகாராஷ்டிராவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) பீகாரைவிட 5.18 மடங்கு அதிகமாக இருந்தது. இரண்டாவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விகிதம் குறைந்துவிட்டால், பீகார் மாநிலம் வளர்ந்தது மட்டுமல்லாமல், இந்த மாநிலங்களுடனான இடைவெளியைக் குறைத்துள்ளது என்பதையும் இது குறிக்கிறது.


மொத்த பொருளாதார உற்பத்தியின் அடிப்படையில் பீகார் சில மாநிலங்களுடனான இடைவெளியைக் குறைத்ததாக கணக்கீடுகள் காட்டுகின்றன. மிகப்பெரிய முன்னேற்றம் (பச்சை நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது) மேற்கு வங்காளத்திலும், அதைத் தொடர்ந்து கேரளாவிலும் இருந்தது.


பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவுடன், பீகார் மாநிலத்தின் வேறுபாடு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருந்தது (விகிதம் தேக்க நிலையில் இருந்தது; மஞ்சள் நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது). அதே நேரத்தில், உத்திரப் பிரதேசம் மற்றும் குஜராத்துடனான இடைவெளி அதிகரித்தது (சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது). ஏனெனில் இந்த காலகட்டத்தில் இந்த மாநிலங்கள் பீகாருடன் ஒப்பிடும்போது அவற்றின் மொத்த உற்பத்தியை இன்னும் அதிகளவில் அதிகரித்துள்ளன. இந்த விகிதம் அதிகரிப்பதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, 2011-12-ஆம் ஆண்டில், குஜராத்தின் மொத்த பொருளாதார உற்பத்தி பீகாரைவிட 2.5 மடங்கு குறைவாக இருந்தது. ஆனால், அடுத்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அது பீகாரின் உற்பத்தியைவிட 3 மடங்கு அதிகமாக மாறியது.

2. தனிநபர் பொருளாதார வெளியீடு


கருத்தில் கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமான காரணி, இந்த மாநிலங்களின் சராசரி பொருளாதார உற்பத்தி மற்றும் அவற்றுடன் ஒப்பிடும்போது பீகாரின் நிலை மற்றும் வளர்ச்சி எவ்வாறு ஒப்பிடப்படுகிறது என்பதையும் பார்ப்பது முக்கியம்.


அதைத் தொடர்ந்து, முக்கியமானது என்னவென்றால், தனிநபர் உண்மையான நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியின் (Net State Domestic Product (NSDP)) முழுமையான நிலை (இதை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் சரியான மாறி) மட்டுமல்ல, பீகார் மற்ற மாநிலங்களின் வளர்ச்சி நிலைக்கு நெருங்கி சென்றுவிட்டதா என்பதும் ஆகும்.


தனிநபர் உற்பத்தி முழுமையான அடிப்படையில் அதிகரித்துள்ளதாக அட்டவணை-2 காட்டுகிறது. இது ரூ.21,750-லிருந்து ரூ.32,174-ஆக அதிகரித்துள்ளது.

அட்டவணை 2.

ஆனால் இந்த அதிகரிப்பு மற்ற மாநிலங்களுடனான இடைவெளியைக் குறைத்ததா? இல்லை,


தனிநபர் உற்பத்தியைப் பொறுத்தவரை, பீகாரின் வளர்ச்சி போதுமான அளவு வேகமாக வளரவில்லை என்றும், பீகாருக்கும் பிற மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வரும் விகிதங்களில் காணப்படுகிறது என்றும் கணக்கீடுகள் காட்டுகின்றன. இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, இந்தியாவில் முதல் மாநிலமாக தன்னை சமீபத்தில் அறிவித்துக் கொண்ட கேரளா, தீவிர வறுமை இல்லாத, மாநிலமாக நிலைநிறுத்தியுள்ளது. இருப்பினும், அட்டவணை-1-ல் காட்டப்பட்டுள்ளபடி, பீகாரின் மொத்த பொருளாதார உற்பத்தி ஓரளவு கேரளாவின் மக்கள்தொகையைப் பிடித்தது. இருப்பினும், தனிநபர் உற்பத்தியால் அளவிடப்படும்போது, ​​இரு மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாடு அதிகரித்துள்ளது.TABLE 2.


2011-12-ஆம் ஆண்டில், கேரளாவின் தனிநபர் பொருளாதார வெளியீடு (per capita economic output) பீகாரை விட 4.5 மடங்கு அதிகமாக இருந்தது. ஆனால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அது பீகாரைவிட 5 மடங்கு அதிகமாகும்.


இதன் பொருள், 2011-12 ஆம் ஆண்டில் ஒரு சாராசரி நபர் இருந்த நிலையைவிட 2023-24-ஆம் ஆண்டில் சராசரி பீகார் குடிமக்கள் (இந்த மாநிலங்களில் வசிப்பவர்களுடன் ஒப்பிடும்போது) மோசமான நிலையில் உள்ளனர்.


பொருளாதார உற்பத்தியின் ஒட்டுமொத்த அதிகரிப்பைத் தவிர, தனிநபர் தரவுகளைப் பாதிக்கும் ஒரு முக்கியக் காரணி மக்கள்தொகை அதிகரிப்பு ஆகும். 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள்தொகை கணிப்புகளைப் பயன்படுத்தி, அவற்றை 2011 தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த பத்தாண்டுகாலத்தில் கேரளாவின் மக்கள்தொகை 6.2% மட்டுமே வளர்ந்திருக்கலாம். ஆனால், பீகாரின் மக்கள்தொகை 18.2% அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது.


பீகாரைவிட அதிக மக்கள்தொகைக் கொண்ட உத்தரபிரதேசம், இந்தப் போக்கை எவ்வாறு முறியடித்து, தனிநபர் வருமானத்தில் பீகாரை முந்தியது? ஏனெனில், இந்தப் பத்தாண்டுகளில் உத்திரப் பிரதேசத்தின் மக்கள்தொகைக் கூட 15.6% அதிகரித்திருக்கலாம்.

3. உற்பத்தித் துறையின் பங்களிப்பு


ஒரு பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்கை அதிகரிப்பது கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு முக்கிய இலக்காகும். ஏனென்றால், வேகமாக வளர்ந்துவரும் உற்பத்தித் துறை உள்ளூர் மக்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.


அட்டவணை-3 மாநிலத்தின் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையால் சேர்க்கப்பட்ட உண்மையான (அதாவது, பணவீக்கத்தின் விளைவை நீக்கிய பிறகு) மதிப்பைக் காட்டுகிறது. பயன்படுத்தப்படும் மாறி உண்மையான நிகர மாநில மதிப்பு கூட்டல் (real Net State Value) ஆகும். இது பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பின் பண மதிப்பைக் காட்டுகிறது.

அட்டவணை-3

2011-12-ஆம் ஆண்டில், பீகாரின் உற்பத்தித் துறை மதிப்பு கூட்டப்பட்ட தொகை ரூ.12,681 கோடியாகவும், 2023-24-ஆம் ஆண்டில் இந்தப் பங்களிப்பு ரூ.31,110 கோடியாகவும் அதிகரித்தது.

பீகார் முழுமையான அடிப்படையில் தெளிவாக முன்னேறியுள்ள நிலையில், இந்த புள்ளிவிவரங்கள், சில வளர்ந்த மாநிலங்களைவிட மிகக் குறைவு. உதாரணமாக, மகாராஷ்டிராவில், 2011-12-ஆம் ஆண்டில் உற்பத்தி மதிப்பு ரூ.2.06 லட்சம் கோடியாக இருந்தது.TABLE 3.

இது ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது, பீகார் மற்ற மாநிலங்களுடன் உள்ள இடைவெளியைக் குறைத்ததா? ஆச்சரியப்படும் விதமாக, இந்த அளவீட்டில், பீகார் வழக்கத்திற்கு மாறாக எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செயல்பட்டது.


அட்டவணை-3-ல் காட்டப்பட்டுள்ளபடி, குஜராத்தைத் தவிர, இந்த பட்டியலில் உள்ள மற்ற மாநிலங்களுடனான இடைவெளியை பீகார் குறைத்துள்ளதாகத் தெரிகிறது. உதாரணமாக, 2011-12-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் உற்பத்தி மதிப்பு கூட்டல் பீகாரைவிட 16.3 மடங்கு அதிகமாக இருந்தது. இது 2023-24-ஆம் ஆண்டில், இது வெறும் 10.32 மடங்கு மட்டுமே.


உண்மையில், குஜராத்தைத் தவிர, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மூன்று பெரிய மாநிலங்கள் மட்டுமே பீகாரைவிட தங்கள் முன்னிலையை அதிகரித்துள்ளன. மீதமுள்ள அனைத்து மாநிலங்களும் உற்பத்தி மதிப்பு கூட்டலில் மிதமான அதிகரிப்பைக் கண்டன.


அப்படியென்றால் பீகாரின் உற்பத்தித் துறை குறைந்த அளவிலேயே வளர்ச்சியடைந்து வருகிறது என்று அர்த்தமா? அப்படியானால், இந்த என்ன எதிர்மறையான முடிவை விளக்குகிறது?


உண்மை என்னவென்றால், இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான மாநிலங்களில் உற்பத்தி மதிப்பு கூட்டல் (Manufacturing value-added) வளர்ச்சி பலவீனமாக உள்ளது. உதாரணமாக, மகாராஷ்டிராவில், உற்பத்தித் துறையின் மதிப்புக் கூட்டல் 2017-18-ஆம் ஆண்டில் ரூ.3.28 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், அதன் பின்னர் அது குறிப்பிடத்தக்க சரிவைப் பதிவு செய்துள்ளது. மேலும், 2023-24 ஆம் ஆண்டின் இறுதியில், அதன் மதிப்பு கூட்டல் ரூ.3.21 லட்சம் கோடியாக இருந்தது. இது 2016-17-ஆம் ஆண்டில் முதன்முதலில் எட்டிய அதே நிலையாகும்.


விளைவு


பீகாரின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகள் அடிப்படையில் சிறியது., எனவே, இதன் வளர்ச்சி விகிதங்கள் சுவாரஸ்யத்தைக் காட்டி ஏமாற்றத்தை அளிக்கலாம். தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது பீகார் மாநிலம் வேகமான பொருளாதார வளர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்கிறது என்ற தோற்றத்தை அளிக்கலாம். ஆனால், இந்த பகுப்பாய்வில் காட்டப்பட்டுள்ளபடி, பீகார் மற்ற மாநிலங்களுடனான இடைவெளியைக் குறைக்கத் தவறிவிடுவது இன்னும் சாத்தியமாகும்.


உற்பத்தி மதிப்பு கூட்டல் (manufacturing value added) பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பீகார் மிகச் சிறப்பாகச் செயல்படுவதாகத் தோன்றினாலும், தரவுகள் தவறாக வழிநடத்தும். பீகாரின் வளர்ச்சியில் உண்மையான முன்னேற்றத்தைவிட, மற்ற மாநிலங்களில் வேகம் கடுமையாகக் குறைந்து வருவதையே இது சுட்டிக்காட்டுகிறது.


Original article:

Share: