டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் பகுதியில் (National Capital Region (NCR)) உள்ள தெரு நாய்கள் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த தனது முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் மாற்றியமைத்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை இங்கே பார்க்கலாம்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் டிப்போக்கள் மற்றும் ரயில் நிலையங்களின் வளாகங்களில் இருந்து தெருநாய்களை "விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு விதிகளின்படி கருத்தடை மற்றும் தடுப்பூசிக்குப் பிறகு, நியமிக்கப்பட்ட காப்பகத்திற்கு" மாற்றும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெள்ளிக்கிழமை நவம்பர் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, "அவ்வாறு பிடிக்கப்பட்ட தெருநாய்களை, அவை எந்த இடத்திலிருந்து பிடிக்கப்பட்டதோ அதே இடத்திற்கு மீண்டும் விடக்கூடாது" என்றும் கூறியது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தெருநாய்கள் அந்தந்த அதிகார எல்லைக்குட்பட்ட நகராட்சி அமைப்பால் அகற்றப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனம், மருத்துவமனை, விளையாட்டு வளாகம், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களின் நிர்வாகத்தையும், "வழிகாட்டுதலின்கீழ் அடையாளம் காணப்பட்டபடி," வளாகத்தின் பராமரிப்பு மற்றும் தூய்மைக்கு பொறுப்பான ஒரு முக்கிய அதிகாரியை நியமிக்கவும், மற்றும் தெருநாய்கள் வளாகத்திற்குள் நுழையாமல் அல்லது வசிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் (NCR) தெரு நாய்கள் குறித்த தனது உத்தரவை உச்சநீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது. தெரு நாய்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை இங்கே காணலாம்.
நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, "தெருநாய்களால் நகரம் துன்புறுத்தப்படுகிறது, குழந்தைகள் பலியாகின்றனர்" என்ற தலைப்பிலான செய்தியைப் படித்த பிறகு, ஜூலை 28-ஆம் தேதி நீதிமன்றம் தாமாக வழக்கைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்த அமர்வு தெருநாய் பிரச்சினை குறித்து பல உத்தரவுகளைப் பிறப்பித்தது. டெல்லி, நொய்டா, காஜியாபாத், குர்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு "அனைத்து பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை விரைவில் பிடிக்கத் தொடங்கி" அவற்றைக் குறிக்கப்பட்ட தங்குமிடங்கள் அல்லது அடைப்பிடங்களில் வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
முக்கியமாக, "எந்தவொரு பகுதியிலிருந்தும் பிடிக்கப்பட்ட ஒரு நாய்கூட தெருக்களில் அல்லது பொது இடங்களில் மீண்டும் விடப்படக்கூடாது" என்று இந்த அமர்வு உத்தரவிட்டது.
இது நடைமுறையில் உள்ள விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள், 2023 (Animal Birth Control (ABC)) விதிகளிலிருந்து (''பிடித்தல்-கருத்தடை-தடுப்பூசி போடுதல்-திருப்பி அனுப்புதல்') தெளிவாக வேறுபடுகிறது.
'பொது நலன்' என்கிற அடிப்படையில் உயர்நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை நியாயப்படுத்தியது. இனி, கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்படக்கூடாது என்றும் கூறியது.
"இந்த முழு நடவடிக்கையிலும் எந்தவிதமான உணர்வுகளும் சம்பந்தப்படக்கூடாது," என்று உத்தரவு கூறியதுடன், அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் தனிநபர் அல்லது அமைப்பு "கடுமையான நடவடிக்கையை" எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தது.
ஆறு முதல் எட்டு வாரங்களில் 5,000 எண்ணிக்கையிலான நாய்களை வைத்திருக்கும் அளவிற்கான தங்குமிடங்களை உடனடியாக உருவாக்கவும், அவற்றில் உயிர்நேய நிலைமைகளை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 22: ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாகத்திற்கான மாறுதல்.
ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இடைக்கால உத்தரவில், நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தப் பிரச்சினை தொடர்பான நீதிமன்றத்தின் அணுகுமுறையில் ஒரு பெரிய மாற்றத்தைச் சுட்டிக்காட்டியது.
நாய்களை அவற்றின் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் : முந்தைய உத்தரவின் 'விடுவிக்கக் கூடாது' என்கிற கொள்கையை நிறுத்தி வைத்த நீதிபதிகள், அதிகாரிகள் நிறுவப்பட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று தெளிவுபடுத்தினர். பிடித்துச் செல்லப்படும் நாய்களுக்கு "கருத்தடை செய்யப்பட்டு, குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு, அவை பிடிக்கப்பட்ட அதே பகுதியில் மீண்டும் விடுவிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருந்தது.
வெறிநாய்க்கடி நோய் உள்ள நாய்களை விடுவிக்கக் கூடாது : இருப்பினும், நீதிமன்றம் ஒரு முக்கியமான விதிவிலக்கை உத்தரவிட்டது. "வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட அல்லது வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நாய்களுக்கும், ஆக்ரோஷமான நடத்தையை வெளிப்படுத்தும் நாய்களுக்கும்" இந்தக் கொள்கை பொருந்தாது என்றும் கூறியது.
அத்தகைய தெருநாய்கள் தனித்தனி இடங்களில் வைக்கப்பட வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் தெருக்களில் விடுவிக்கப்படக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.
தெருக்களிலும் பொது இடங்களிலும் தெருநாய்களுக்கு உணவளிப்பதையும் நீதிமன்றம் தடை செய்தது. ஒவ்வொரு நகராட்சி வார்டிலும் தெருநாய்களுக்கு உணவளிப்பதற்கென்று சில இடங்களை உருவாக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே நாய்களுக்கு உணவளிக்கும் நபர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எச்சரித்தது.
"கட்டுப்பாடற்ற முறையில் தெருநாய்களுக்கு உணவளிப்பதால் ஏற்படும் விரும்பத்தகாத சம்பவங்களைத்" தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. குடியிருப்போர் நலச் சங்கங்கள் (Resident Welfare Association (RWAs)) நாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களுடன் கலந்தாலோசித்து குறிப்பிட வேண்டும் என்று ஏற்கனவே விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு விதிகள் (Animal Birth Control (ABC)) பரிந்துரைக்கின்றன.
தேசிய தலைநகர் (டெல்லி) பகுதிக்கு மட்டுமல்ல, அகில இந்தியாவிற்கும் பொருந்தும்: நீதிபதிகள் குழு இந்த வழக்கின் எல்லையை டெல்லி-தேசிய தலைநகர் பகுதியைத் தாண்டி விரிவுபடுத்தியுள்ளனர்.
இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் வழக்கில் சேர்த்ததுடன், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இதேபோன்ற அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றும்படி உத்தரவிட்டது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள நகராட்சி அதிகாரிகளால் விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு விதிகளின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்துவருகிறது.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றப்படாதவை என்னென்ன?
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை முழுமையாக ரத்து செய்யவில்லை.
* நாய்களுக்கான காப்பகங்கள் மற்றும் அடைக்கும் இடங்களை நகராட்சி அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் நடைமுறையில் உள்ளது. இந்த உள்கட்டமைப்பு தெருக்களில் விடமுடியாத ஆக்ரோஷமான அல்லது வெறி பிடித்த நாய்களைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும்.
* நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்கு எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ எந்தவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது என்கிற தனது எச்சரிக்கையை நீதிமன்றம் மீண்டும் உறுதிபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.