இயற்கையுடனான அவற்றின் தொடர்பின் அடிப்படையில் நாடுகளை, புதிய ஆய்வறிக்கை தரவரிசைப்படுத்துகிறது. திறன் சார்ந்த வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க முடியாது என்று நினைக்கும் மக்களுக்கு இந்த ஆய்வு ஒரு முக்கியமான செய்தியை வழங்குகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் விதிகளை உருவாக்கும் அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது ஒரு முக்கியமான விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது: இயற்கையைப் பாதுகாக்க முயல்பவர்களுக்கு, இயற்கையோடு சேர்ந்து வாழும் அனுபவம் குறித்து அதிகம் தெரிவதில்லை. அவர்களின் நல்ல நோக்கங்களைத் தவிர்த்து, மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் தவறான பிரிவை ஏற்படுத்துவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
'ஆம்பியோ' (Ambio) என்ற பத்திரிகையில் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை, மக்கள் இயற்கையுடன் எவ்வளவு தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை அளவிட 61 நாடுகளில் 56,968 பேரை ஆய்வு செய்தது. 'இயற்கைத் தொடர்பு' (Nature-connectedness) என்பது ஒரு உளவியல் கருத்தாகும். இது மக்களுக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் இடையே உள்ள உறவை அளவிடுகிறது. இத்தகைய தொடர்புகள் மக்களின் நல்வாழ்வைப் பாதிக்கின்றன என்றும், மக்கள் சுற்றுச்சூழலுடன் எவ்வாறு செயல்படுகிறார்கள் போன்ற அனைத்துமே தொடர்புடையவை என்றும் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
ஆய்வின்படி, நேபாளம் இயற்கையுடன் மிகவும் தொடர்புடைய நாடாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஈரான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் உள்ளன. இந்தியா 22வது இடத்தில், நடுப்பகுதியில் மேல் எல்லையில் உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து, ஸ்பெயின், ஜப்பான், ஜெர்மனி மற்றும் கனடா போன்ற நாடுகள் இயற்கையுடன் மிகக் குறைந்த பிணைப்பைக் கொண்டுள்ளன. அரசியல் செயல்பாடுகளுக்கும் மக்கள் இயற்கையுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது. எடுத்துக்காட்டாக, ஜெர்மனி, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஈரானை விட மிகவும் வலுவான பசுமை குழுக்களை கொண்டுள்ளன. ஆனால், இந்த ஆய்வின்படி, அங்கே உள்ள மக்கள், மனிதர்களைத் தவிர வேறு உயிரினங்களுடன் (அதாவது விலங்குகள் அல்லது இயற்கையுடன்) பிணைப்பை ஏற்படுத்துவது குறைவாக உள்ளது. "ஆன்மீகம்" என்பது ஒருவரோடு ஒருவர் இணைந்திருப்பதற்குச் சாதகமானத் தொடர்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் உலக வங்கியின் வணிகம் செய்வதற்கான எளிதான குறியீட்டில் (Ease of Doing Business index) உயர் இடத்தைப் பெறுவது அதற்கு நேர்மாறாக இணைக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் ஒன்றாகச் செல்ல முடியாது, "முன்னேற்றம்" மற்றும் "வளர்ச்சி" ஆகியவை தனித்தனியானவை என்ற பழைய சிந்தனைக்கு நாம் திரும்பிச் செல்கிறோம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறதா? என்கிற சந்தேகம் எழுகிறது. இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சிறந்த பாடம் என்னவென்றால், செவிகொடுத்துக்கேட்பது, கற்றுக்கொள்வது மற்றும் சமநிலையைக் கண்டறிவதுதான். பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடுகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மக்களும் "வளர்ச்சி"யை விரும்புகிறார்கள். நகரங்களையும் நாடுகளையும் மேலும் "பசுமை" மற்றும் "திறன்" சார்ந்து மாற்றுவதற்காக திட்டமிடுவதற்கு முன், இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களிடம் பேசுவதும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவுதும் தான் இதற்கான வழியாக இருக்கலாம்.