தீவிர வறுமையை (extreme poverty) முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய வழிகள் -ஜிஜு பி. அலெக்ஸ்

 கேரளாவின் பங்கேற்பு மாதிரி (Kerala’s participatory model) உலகிற்கு மதிப்புமிக்க பாடங்களை வழங்குகிறது.


கேரளா அரசு, தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தை (Extreme Poverty Eradication Programme(EPEP)) அறிமுகப்படுத்தியது. வறுமையைக் குறைக்க மாநிலம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற கருத்தாக்கத்தை மறுவரையறை செய்துள்ளது. மேலும், இது மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக மாறும் திறனையும் கொண்டுள்ளது.


மிக முக்கியமாக, பற்றாக்குறையை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்வதற்கான அணுகுமுறையை இது எடுத்துக்காட்டுகிறது. இது முதல் மற்றும் இரண்டாவது நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDG)) கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. உள்ளூர் அரசாங்கங்கள், சமூகங்கள் மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் பங்கேற்பு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு மூலம் வறுமையை ஒழிக்க முடியும் என்பதை இந்த திட்டம் காட்டுகிறது.


வறுமை குறைப்புக்கான கேரளாவின் அணுகுமுறை நாட்டின் வழக்கமான வறுமை ஒழிப்பு திட்டங்களிலிருந்து வேறுபட்டது. நீண்ட காலமாக இயற்றப்பட்ட நிலச் சீர்திருத்தங்கள் (land reforms), உலகளாவிய ஆரம்பக் கல்வி மற்றும் பொது விநியோகத்திற்கான கொள்கைகள் போன்றவை மக்களின் வாழ்வாதார பாதுகாப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


மேலும், ஜனநாயக பரவலாக்கம் உள்ளூர் அரசாங்கங்கள் பல உள்ளூர் திட்டங்களைச் செயல்படுத்த உதவியது. அதே நேரத்தில், குடும்பஸ்ரீ (Kudumbashree) இந்தியாவில் ஒரு முன்னணி சுய உதவிக்குழு (self-help group (SHG)) மாதிரியாக மாறியது. இது அதன் பெரிய அளவிலான மற்றும் வறுமையைக் குறைப்பதிலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் கவனம் செலுத்தியதற்காக தனித்து நின்றது.


மாநிலத்தில் வறுமையானது 1973-74 நிதியாண்டில்  59.74% ஆக இருந்தது. இது 2011-12 நிதியாண்டில் 11.3% ஆக குறைந்ததுள்ளது. நிதி ஆயோக் (NITI Aayog) கூற்றின்படி, கேரளா இப்போது மிகக் குறைந்த வறுமை உள்ள மாநிலமாக உள்ளது. 2019-21ஆம் ஆண்டில் 0.55 சதவீதம் பல பரிமாண வறுமை குறியீட்டைக் (Multidimensional Poverty Index (MPI)) கொண்டுள்ளது. இது 2015-16 நிதியாண்டில் 0.70% ஆக இருந்தது.


தீவிர வறுமையை அடையாளம் காணுதல்


இருப்பினும், மாநிலத்தில் சில பகுதிகள் இன்னும் தீவிர வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்த தெளிவான புரிதலின் அடிப்படையில் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ஆதரவு தேவைப்பட்டது.


பல பரிமாண வறுமை குறியீடு (Multidimensional Poverty Index(MPI)) கட்டமைப்பைப் பின்பற்றி, தீவிர வறுமைக்கான காரணங்கள் பங்கேற்பு செயல்முறை (participatory process) மூலம் அடையாளம் காணப்பட்டன. மோசமான சுகாதார நிலைமைகள், உடல்நலக் குறைபாடுகள், முதுமை, உரிமைகள் இல்லாமை, உணவு, நிலம், தங்குமிடம், வேலை வாய்ப்பு, வசதிகள் மற்றும் குழந்தைகளில் கடுமையான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு (Severe Acute Malnutrition(SAM)) ஆகியவை கடுமையான துயரத்திற்கு பங்களிப்பதாகக் கண்டறியப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (SC), பிற்படுத்தப்பட்ட பழங்குடி (ST) வகுப்பினர் மற்றும் மீனவர்கள் போன்ற சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் எதிர்கொள்ளும் வரலாற்று ரீதியிலான குறைபாடுகளையையும் இந்த ஆய்வு அங்கீகரித்தது. இதில், HIV பாதிக்கப்பட்ட நபர்கள், ஆதரவற்றோர்கள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் பால் புதுமையினர் (LGBTQIA) எதிர்கொள்ளும் சமூக பற்றாக்குறை ஆகியவையும் அடையாளம் காணப்பட்டன.


ஏழைக் குடும்பங்களை அடையாளம் காண, உள்ளூர் அரசாங்கங்களின் தலைமையில் குடும்பஸ்ரீ தன்னார்வலர்கள், உள்ளூர் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அடங்கிய குழுவால் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.


சுமார் 1,18,309 ஏழை குடும்பங்கள் ஆரம்பத்தில் வார்டு மற்றும் பிரிவு நிலைகளில் பங்கேற்பு செயல்முறை மூலம் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் உள்ளூர் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட 87,158 குடும்பங்கள் குறுகியளவில் பட்டியலிடப்பட்டன. பின்னர், அவர்களுக்கு மொபைல் செயலி (mobile application) மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. இது 73,747 குடும்பங்களின் முன்னுரிமைப் பட்டியலைத் தயாரிக்க வழிவகுத்தது.  பின்பு, தகுதியற்ற குடும்பங்களை நீக்குவதற்காக கிராம சபைகள் (Grama Sabhas) இந்தப் பட்டியலை மீண்டும் மதிப்பாய்வு செய்தன.  இந்த இறுதிச் சுற்று ஆய்வுக்குப் பிறகு, 64,006 வீடுகள் மிகவும் ஏழ்மையான குடும்பங்களாக உறுதி செய்யப்பட்டன.


குறுகிய கால இலக்கு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்கள்


தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தின் (Extreme Poverty Eradication Program (EPEP)) மிகவும் தனித்துவமான அம்சம், அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் தனிப்பயனாக்கப்பட்ட குறுகிய கால திட்டங்களை உருவாக்குவதாகும். இது வழக்கமான நலத்திட்ட மாதிரியிலிருந்து வேறுபட்டது. இங்கு அனைவருக்கும் ஒரே  மாதிரியான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூன்று தெளிவான நிலைகளில் செயல்படுத்ததப்பட்டது. அவை: உடனடி பராமரிப்பு திட்டம் (immediate care plan), இடைநிலை திட்டம் (intermediate plan) மற்றும் நீண்ட கால திட்டம் (long-term plan).


உடனடி பராமரிப்புத் திட்டம் உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்புக்கான உரிமை ஆவணங்கள் போன்ற அவசர தேவைகளை நிவர்த்தி செய்தது.  இடைநிலைத் திட்டமானது (immediate care plan) வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், சுய சார்புநிலையை உறுதி செய்வதற்கும் இடைக்கால ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்தியது. உதாரணமாக, தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்தி தருதல்  போன்றவை அடங்கும். நீண்ட கால திட்டங்கள் (long-term plan) நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் அல்லது நிரந்தர வீட்டுவசதி வழங்குதல் மற்றும் பிற இலக்குகளையும் நோக்கமாகக் கொண்டிருந்தன. அனைத்து ஆதரவும் சரியான நேரத்தில் மற்றும் பொறுப்புணர்வுடன் வழங்கப்படுவதை உறுதிசெய்ய,  மேலாண்மை தகவல் அமைப்பு (Management Information System (MIS)) உருவாக்கப்பட்டு, திட்டத்தின் முழு செயல்முறையையும் கண்காணித்தது.


முன்னோக்கிச் செல்லும் வழி


தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு பயனுள்ள வழியை தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் (EPEP) தெளிவாகக் காட்டியுள்ளது. இது பல பரிமாண வறுமையின் கொள்கைகளையும், பரவலாக்கப்பட்ட நிர்வாகத்தின் சக்தியையும் பயன்படுத்துகிறது. அடுத்து என்ன?


இந்த முயற்சியைத் தொடர்வதற்கு, இந்தக் குடும்பங்கள் மீண்டும் தீவிர வறுமைக்குத் திரும்பாமல் இருப்பதை உறுதி செய்ய தொடர்ச்சியான கண்காணிப்பு தேவைப்படுகிறது. தற்போதைய துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு அமைப்பு, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களிலிருந்து பற்றாக்குறையின் ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் கண்டறிவதற்கான மகத்தான ஆற்றலை வழங்குகிறது. இந்த முன்னேற்றத்தைத் தொடர ஒரு நிரந்தர நிறுவன அமைப்பு தேவை. அது இந்த மாதிரியை ஒரு நீடித்த தீர்வாக வைத்திருக்க உதவும்.


ஆசிரியர் கேரள மாநில திட்ட வாரியத்தில் (Kerala State Planning Board) உறுப்பினராக உள்ளார்.



Original article:

Share: