முக்கிய அம்சங்கள்:
— செப்டம்பர் 19அன்று புது டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது மாநில நிதிச் செயலாளர்கள் மாநாட்டின் முடிவுகளை செயல்படுத்துவதற்காக இந்த குழு அமைக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். இதில் நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, தலைமைக் கனக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
— மத்திய நிதியுதவி திட்டங்களை வழங்குவது குறித்து ஆலோசிப்பது குழுவின் பணி அல்ல என்று அந்த அதிகாரி கூறினார். இது பட்ஜெட் பற்றியது. எடுத்துக்காட்டாக, நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDGs)) சில தனிப்பட்ட திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஹரியானா மற்றும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் இது மிகச் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் அது இல்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
— மத்திய நிதியுதவி திட்டத்திற்கான (Centrally Sponsored Schemes (CSS)) ஒதுக்கீடு பல ஆண்டுகளாக அதிகரித்து வருவதால், சில திட்டங்களுக்கு ஆண்டு பட்ஜெட் 50,000 கோடிக்கும் அதிகமாக இருப்பதால், தலைமைக் கனக்குத் தணிக்கையாளரின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏப்ரல் 2026 முதல் தொடங்கும் அடுத்த நிதி குழுவின் சுழற்சியில் திட்டங்களைத் தொடர அனுமதிப்பதற்கு முன்பு, அவற்றை மதிப்பிடும் செயல்முறையையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது.
— 2025-26 மத்திய பட்ஜெட்டில், மத்திய அரசு அதன் மொத்த செலவினமான ரூ.50.65 லட்சம் கோடியில் ரூ.5.41 லட்சம் கோடியை மத்திய நிதியுதவி திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)), ஜல் ஜீவன் மிஷன் மற்றும் PM-Kisan உள்ளிட்ட பல திட்டங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ரூ.50,000 கோடிக்கு மேல் பட்ஜெட்டைக் கொண்டிருந்தன. அரசாங்கம் செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும், 8 பைசா மத்திய நிதியுதவி திட்டத்திற்குச் செல்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
— மத்திய நிதியுதவி திட்டங்கள் என்பது மத்திய அரசால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிதியளிக்கப்பட்டு, மாநிலங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகும். ஏனெனில், அவை மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பாடங்களைக் (state list) கையாள்கின்றன.
- தேசிய வளர்ச்சி குழுவின் கூற்றுப்படி, மத்திய நிதியுதவி திட்டங்கள் (CSS) என்பது “ஒன்றிய அமைச்சகங்கள்/துறைகளால் நேரடியாக நிதியளிக்கப்பட்டு, மாநிலங்கள் அல்லது அவற்றின் நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் நிதியளிப்பு முறை எதுவாக இருந்தாலும், அவை ஒன்றிய அரசின் பொறுப்புப் பகுதியான இணைப்புப் பட்டியலின் கீழ் வராத வரை.”