யானை தந்தங்களை வைத்திருப்பதற்கான அரசு சான்றிதழ் இருந்தும் மோகன்லால் ஏன் சட்ட சிக்கல்களை எதிர்கொள்கிறார்? -ஷாஜு பிலிப்

 எந்த நிபந்தனைகளின்கீழ் தந்த பொருட்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்? மோகன்லாலிடம் தந்தங்களுக்கான மாநில அரசு வழங்கிய சான்றிதழ்கள் இருந்தும், அவர் ஏன் இன்னும் சட்ட சிக்கலில் இருக்கிறார்? 




சமீபத்தில், கேரள உயர் நீதிமன்றம் நடிகர் மோகன்லாலுக்கு எதிராக தீர்ப்பளித்தது. இதில், இரண்டு ஜோடி தந்தங்களுக்கான உரிமைச் சான்றிதழ்கள் செல்லாது என்றும், மேலும் இதை சட்டத்தால் செல்லுபடியாக முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. இருப்பினும், மாநில அரசு விரும்பினால் அவரது உடைமையை முறைப்படுத்த புதிய உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


எந்த நிபந்தனைகளின் கீழ் தந்த பொருட்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்? மோகன்லாலிடம் தந்தங்களுக்கான மாநில அரசு வழங்கிய சான்றிதழ்கள் இருந்தாலும், அவர் ஏன் இன்னும் சட்ட சிக்கலில் இருக்கிறார்? 


வருமான வரி சோதனையின்போது யானைத் தந்தங்கள் மீட்பு


2011-ம் ஆண்டு, வருமான வரித் துறையானது வனத்துறைக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, வனத்துறையினர் நடிகர் மோகன்லாலின் கொச்சி வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையின்போது, ​​அதிகாரிகள் இரண்டு ஜோடி யானை தந்தங்களைக் கண்டுபிடித்தனர். ஒரு ஜோடி ரோஸ்வுட் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டதாகவும், மற்றொன்று கண்ணாடியின் இருபுறமும் வைக்கப்பட்டதாகவும் இருந்தது.


ஒரு ஜோடி தந்தங்கள் பி.என். கிருஷ்ணகுமார் என்பவருக்குச் சொந்தமான இறந்த யானையிலிருந்து சேகரிக்கப்பட்டது. அவருக்கு 1986-ம் ஆண்டில் உரிமை சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இரண்டாவது ஜோடி நளினி ராதாகிருஷ்ணனுக்கு (Nalini Radhakrishnan) சொந்தமானது, அவர் அவற்றை தனது மாமனார், கொச்சின் மகாராஜாவிடமிருந்து (Maharaja of Cochin) பெற்றிருந்தார்.


மோகன்லாலுக்கு எதிரான வழக்கு


வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்-1972 (Wildlife Protection Act)-ன் பிரிவு 40-ன் படி, அட்டவணை I அல்லது அட்டவணை II-ன் பகுதி II-ல் பட்டியலிடப்பட்டுள்ள சிறைபிடிக்கப்பட்ட விலங்கு அல்லது ஏதேனும் விலங்குப் பொருள், வேட்டைப் பொருள் (trophy) அல்லது பதப்படுத்தப்படாத வேட்டைப்பொருள் (uncured trophy) வைத்திருக்கும் எவரும் அதை தலைமை வனவிலங்கு காப்பாளரிடம் அறிவிக்க வேண்டும். அத்தகைய அறிவிப்பு செய்யப்படாவிட்டால், இந்தப் பொருட்களை வைத்திருப்பது அல்லது அலங்கரிப்பது சட்டவிரோதமாகும்.


இது தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்குள் பிரகடனம் செய்யப்பட வேண்டும். ஆனால், மோகன்லால் அதைச் செய்யவில்லை, எனவே, வனத்துறை 2012-ம் ஆண்டில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. பெரும்பாவூர் (Perumbavoor) நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, வழக்குத் தொடுத்தவர்கள் வழக்கை திரும்பப் பெற நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம் இதை அனுமதிக்கவில்லை. வழக்கின் குற்றவியல் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நடுவர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றமும் அங்கீகரித்தது.


தந்தங்களுக்கு உரிமை கோருதல்


இந்த வனச்சட்ட வழக்கு நிலுவையில் இருந்தபோது, மோகன்லால் 2015-ம் ஆண்டில் முதலில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை (Ministry of Environment and Forests) அணுகினார். அமைச்சகமானது, மாநில வனத்துறையைத் தொடர்பு கொள்ளச் சொன்னது. ஏனெனில், தந்தங்கள் (காடுகள்) மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த சிறைபிடிக்கப்பட்ட யானைகளிடமிருந்து வந்தவை.


2015-ம் ஆண்டில், மாநில அரசு, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 40(4)-ன் கீழ், மோகன்லால் தந்தங்களை வைத்திருப்பது சட்டப்பூர்வமானது என்று மாநில அரசு அறிவித்தது. பின்னர் வனத்துறை அவருக்கு தந்தங்களின் உரிமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்கியது.


இந்த விலக்குரிமை எவ்வாறு வழங்கப்பட்டது?


சட்டத்தின் பிரிவு 40 (4)-ன்படி, குறிப்பிட்ட வழக்குகளில் விலக்கு அளிக்க மாநிலத்திற்கு அதிகாரம் உள்ளது. இந்த விலக்கு அளிக்க, விண்ணப்பதாரர் அந்த பொருளை வைத்திருப்பது குறித்து அதிகாரப்பூர்வ சட்டத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும். அரசாங்கம் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டவுடன், அந்த நபர் விலங்கு அல்லது வேட்டைப் பொருளை வைத்திருப்பது சட்டப்பூர்வமானதாகிறது.


அதன் பிறகு, 1972 சட்டத்தின் பிரிவு 42-ன் கீழ் அரசாங்கம் விலங்குப் பொருளுக்கான உரிமைச் சான்றிதழ்களை வழங்க முடியும்.


மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களில் என்ன தவறு நடந்தது?


அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படவில்லை. அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விநியோகம் செய்யப்பட்டதன் மூலமும், பத்திரிகைகளுக்கும் வழங்கப்பட்டதன் மூலமும் போதுமான விளம்பரம் அளிக்கப்பட்டதாக அரசு வாதிட்டது, ஆனால் இது போதுமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டது.



Original article:

Share: