காலநிலை மாற்றம் குறித்து அதிக அச்சத்தை எழுப்புவதும் பின் அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குவதுமான பில்கேட்ஸின் நடவடிக்கைகள் இரண்டுமே சமஅளவில் தீங்கானவை என்பதையே காட்டுகிறது.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, பில் கேட்ஸ் அவர்களின் கருத்துக்கள் அமெரிக்க உயரடுக்கு வர்க்கத்தினரிடையே காலநிலை விவாதத்தின் மையக்கருத்தாக அமைந்தன. அவரது வார்த்தைகள் அதிகாரத்தின் குரலாக கருதப்பட்டன. அறிவியல், மூலதனம், மற்றும் பொதுநலச் செயல்பாடுகளை தொழில்நுட்ப நோக்கில் இணைக்கும் ஒரு தனித்துவமான நடைமுறையையும் அவர் உருவாக்கினார்.
2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரை, பில் கேட்ஸ் அவர்கள் காலநிலை குறித்த கருத்துக்களில் உலக அழிவு போன்ற பேரழிவு அவசரநிலையை வெளிப்படுத்தினார். சுற்றுச்சூழல் சரிவு, மக்கள் இடம்பெயர்வு, மற்றும் நிகர-பூஜ்ஜிய (net-zero) இலக்கை அடைய குறைந்த காலவாய்ப்பு போன்ற எதிர்வரும் ஆபத்துகளைக் குறித்து அவர் எச்சரித்தார். இந்தக் கருத்துக்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும் "காலநிலை அச்சுறுத்தல்" எனப்படும் குறைபாடுகளையும் உருவாக்கின. அதாவது, மனிதனின் தகவமைக்கும் திறன் (adaptive capacity) மனித ஆற்றல் (human agency) சார்ந்த செயல்திறனையும் வலியுறுத்தாமல், முழுமையான பேரழிவை தவிர்க்க முடியாத ஒன்றாக நிலைநிறுத்த முயல்கிறது. குறுகியகாலத்தில் கிளப்புவது குறுகிய காலத்தில் சமூகங்களைச் செயல்படத் தூண்டினாலும், நீண்டகாலப் போக்கில் அது அவநம்பிக்கைக்கும் அரசியல் ரீதியிலான எதிர்ப்புகளுக்கும் வழிவகுக்கும் என்கின்றனர்.
பில்கேட்ஸ் அவர்கள் இப்போது அந்தக் கருத்திற்கு எதிராகத் திரும்பியுள்ளார். காலநிலை மாற்றம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தினாலும், மனிதகுலத்தின் இருப்பை அச்சுறுத்தாது என்று தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், வறுமையையும் நோய்களையும் குறைப்பது, புவி வெப்பமயமாதலை எதிர்கொள்ள ஏதுவாக இருக்குமென்றும் பரிந்துரைத்துள்ளார். 'உலகப் பேரழிவு இல்லை' (not apocalyptic) என்பதற்கும் 'விளைவுகள் கடுமையானது இல்லை' (not severe) என்பதற்கும் இடையிலான வேறுபாடுகள் மிக முக்கியமானவை. ஆனால், பொதுமக்கள் இதை வேறுபடுத்திப் பார்ப்பது கடினம். அவர் தனது வாசகர்கள் அறிவியல் சாத்தியங்களை நுணுக்கமாகப் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்தார். ஆனால், பெரும்பாலானோர் சொல்லும் தொனியையே (tone) உணர்ந்தனர் என்பது இந்த விவாதத்தின் மூலம் தெரியவருகிறது.
ஆபத்தான திருப்பம்
பில்கேட்ஸ் அவர்களின் காலநிலை ஏற்பு பற்றிய பார்வை எப்போதும் தொழில்நுட்ப புதுமைகள், முதலீடுகள் மற்றும் அமைப்புக் கையாளுதல் மூலம் வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தது. இந்த நம்பிக்கையின் மூலம் குறைந்த கார்பன் எரிசக்தி ஆராய்ச்சிக்கென்று பெரும் நிதியுதவி கிடைத்தது. ஆனால், அதேநேரத்தில் சில அரசியல் ரீதியானப் பிரச்சனைகளையும் உருவாக்கியது.
முக்கியமான சிக்கல் என்னவெனில், இந்த நம்பிக்கை நடைமுறையில் அடக்குமுறையாக மாறக்கூடும். கேட்ஸ் அவர்களின் தொண்டு மாதிரி (philanthropic model) தனியார் செல்வத்தை (private wealth) அரசாங்கங்களின் முன்னுரிமைகளை நிர்ணயிக்கப் பயன்படுத்துகிறது. அவரது முந்தைய நிலைப்பாட்டில், கார்பனை குறைக்கும் தொழில்நுட்ப வழிமுறைகள் மட்டுமே கவனிக்கப்பட்டன. ஆனால், அந்த கார்பன் ஏன் உருவாகிறது என்ற அடிப்படை இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் காரணங்களை அவர் பார்க்கவில்லை. இந்த அணுகுமுறை மக்களின் கருத்துகளை கேட்காமல் முடிவெடுப்பதால், அமைப்புரீதியான பெரிய மாற்றங்களை வலியுறுத்தும் பிற கருத்துக்கள் ஒதுக்கப்படுகின்றன.
இப்போதும்கூட, உமிழ்வுகளை குறைப்பதில் உலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்று அவர் கூறுகிறார். ஆனால், எந்தத் தரவுகளும் அதை உறுதிப்படுத்தவில்லை. 2022-2024-ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலகளாவிய புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகள் (global fossil fuel emissions) வரலாற்றிலேயே அதிக அளவில் இருந்தன என்று உலகளாவிய கார்பன் திட்டம் (Global Carbon Project) மற்றும் கார்பன் ப்ரீப் (Carbon Brief) அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவற்றின் வளர்ச்சி வீதம் 2000-ஆம் ஆண்டுகளில் வருடத்திற்கு 3 சதவீதமாக இருந்ததைவிட கடந்த பத்தாண்டுகளில் 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. நிலப் பயன்பாடு மாற்றத்தால் உமிழ்வுகள் 1990-களின் இறுதியில் இருந்து 28 சதவீதமாகக் குறைந்தது. ஆனால், சீனா மற்றும் இந்தியாவில் உமிழ்வுகளின் தொடர் வளர்ச்சி (continued growth in emissions) இதனை சமநிலைப்படுத்துகிறது.
மேலும், உமிழ்வு கணக்கீட்டில் நிச்சயமற்றத் தன்மைகள் உள்ளன. காடுகளின் சேதம் மற்றும் பிராந்திய தரவுக் குறைபாடுகள், குறிப்பாக வெப்பமண்டலப் பகுதிகளில் (tropical regions), நிலப் பயன்பாட்டு மாற்ற உமிழ்வு மதிப்பீடுகள் (land-use change emissions estimates) நிச்சயமற்றதாக இருக்கின்றன. ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையிலும்கூட அதிகப் பிழைகளுக்கான வாய்ப்புகள் (error ranges) உள்ளன. இத்தகைய நிச்சயமற்றத் தன்மைகள் (uncertainties) அனைத்தையும் கருத்தில்கொண்டு பார்க்கும்போது வெளியேற்றங்களின் வளர்ச்சி விகிதம் (rate of emissions growth) குறைந்திருக்கலாம் என்றும் நிலப் பயன்பாட்டு வெளியேற்றங்கள் (land-use emissions) குறைந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், வெளியேற்றங்களைக் குறைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று இப்போதே கூறுவது அவசரமான முடிவாகும்.
அதேபோல், கேட்ஸ் அவர்களின் வறுமை மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் மாற்றமானது மேற்கத்திய அல்லது பெருநிறுவனம் சார்ந்த வட்டாரங்களில் “"“நாம் இப்போது எரிக்கலாம் (புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதைத் தொடரலாம்), பின்னர் ஏழைகளுக்கு தடுப்பூசி போட்டால் போதும் (பாதுகாத்தால் போதும்)” (we can keep burning now if we vaccinate the poor later) என்று படிக்கப்படும் அபாயத்தையும் கொண்டுள்ளது. இந்த மாற்றீட்டு தர்க்கம், பருவநிலை தழுவல் நடவடிக்கை கோரும் அமைப்பு ரீதியான ஒரே நேரத்தில் நிகழ்வை பலவீனப்படுத்துகிறது.
“காலநிலை மாற்றத்திற்கு எதிரான போரில், தான் வெற்றி பெற்றதாக" வெளியான பில்கேட்ஸின் குறிப்பாணைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அளித்த எதிர்வினையானது ஆச்சரியப்படத்தக்க வகையில் மறுமதிப்பீட்டை ஒரு வெற்று அரசியல் வெற்றியாகக் குறைத்தது. பில்கேட்ஸின் சொந்த அலை விளைவு மாற்றங்களில்தான் எதிர்வரும் மிக முக்கியமான விளைவுகள் உள்ளன.
மாற்றத்தின் சலன விளைவுகள்
இது பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதன் உணர்வை இரண்டு உண்மைகள் சிக்கலாக்குகின்றன. முதலாவதாக, கேட்ஸ் உலகளாவிய காலநிலை விவாதத்தில் அளவுக்கு அதிகமான இடத்தைத் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளார், ஏனெனில் அவர் அறிவியலை உயரடுக்கினருக்கான ஒருவித காலநிலை பொது அறிவாக மொழிபெயர்க்கிறார். அவரது மிதவாதம் குறியீட்டு மதிப்பீடு மற்றும் நடைமுறை மதிப்பீடு இரண்டையும் கொண்டுள்ளது. இரண்டாவதாக, அவரது முதல் எச்சரிக்கும் நிலைப்பாடு பங்குகளை தாங்க முடியாத அளவுக்கு உயர்த்தியது, பின்னர் முரண்பட்ட சான்றுகளை எதிர்கொண்டு அவற்றைத் தாழ்த்தியது, இது விளிம்பு நெருக்கடி உத்தி (brinkmanship) ஏன் கெட்டது என்பதற்கான படிப்பினை உதாரணமாக அமைந்தது. விளிம்பு நெருக்கடி உத்தியிலிருந்து பின்வாங்குவது பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அது டிரம்ப் போன்ற அதீத மறுப்பாளர்களுக்கு எரிபொருளாக அமையும், அவர்கள் மிதவாதத்தை பின்வாங்கலுடன் வேறுபடுத்துவதில் சிரமப்படுகிறார்கள்.
கேட்ஸ் அவர்களின் காலநிலை அதிகார நிலைமை, அவரது தொழில்நுட்ப வாழ்க்கையின் அதே “மாற்றுத்திறன்” சிந்தனையிலிருந்து வந்தது என்கின்றனர். அவர் விலையுயர்ந்த (high-end) தயாரிப்புகளால் மட்டும் கணினித் துறையில் வெற்றி பெறவில்லை. மாறாக கணினியை மிகவும் அணுகக்கூடியதாக (accessible) மென்பொருள் மற்றும் வன்பொருளை மாற்றி வடிவமைத்து, தேர்ந்த உத்திரமுறைகளின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். ஆனால், அவர் தனது வணிக ஆதிக்கத்தைப் பாதுகாக்க திறந்த மூல மென்பொருள் (open-source) இயக்கத்திற்கு எதிராக இருந்தார். ஏனெனில் அது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வியாபாரத்திற்கான நேரடி அச்சுறுத்தல் என்று அவர் கருதினார். பின்னர், இணையம் மற்றும் மேகக் கணினி (cloud computing) வளர்ச்சியுடன் மைக்ரோசாஃப்ட் அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. புதிய முன்மாதிரி தனது வணிக மாதிரியைப் பாதிக்காது என்று தெளிவாகத் தெரிந்த பின் கேட்ஸ் இதனை ஏற்றுக்கொண்டார்.
இன்றைய உலகில் பெரும் வெற்றியும் செல்வமுமே அனைத்து முக்கியமான சமூகப் பிரச்சினைகள் குறித்தும் தீர்ப்பளிக்க உரிமையாகக் கருதப்படுகின்றன. ஆகையால், கேட்ஸ் அவர்கள் காலநிலை தீர்க்கதரிசியாக மாறுவது தவிர்க்க முடியாத ஒன்றே. அதே சமயம், காலநிலை மாற்றம் குறித்த அவரது கருத்துகளை முற்றிலும் நிராகரித்துவிட முடியாது.