நெகிழ்வான நடத்தை விதி -ரங்கராஜன் ஆர்.

 மத்திய அரசும், மாநில அரசுகளும் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் மாதிரி நடத்தை விதியின் (Model Code of Conduct (MCC)) உண்மையான நோக்கத்தை மீறுகின்றன.


எவ்வளவு சிறந்த அரசியலமைப்பாக இருந்தாலும், அதை செயல்படுத்தும் நபர்கள் சரியானவர்களாக இல்லை என்றால் அந்த அரசியலமைப்பு தோல்வியடைய வாய்ப்பு உள்ளது என்றும் இது நாட்டின் செயல்பாட்டிற்காகவும் அதன் பல்வேறு பொது செயல்முறைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டம் அல்லது நெறிமுறைக்கும் சமமாகப் பொருந்தும் என்றும் அரசியல் நிர்ணயசபையில் அம்பேத்கர் குறிப்பிட்டார்.


அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டுதலுக்கான மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct (MCC)) என்பது அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் உருவான விதிமுறைகளின் தொகுப்பாகும். அவர்கள் கூறப்பட்ட நடத்தை விதிகளில் உள்ள கொள்கைகளைப் பின்பற்ற ஒப்புக்கொண்டுள்ளனர். இது அவர்களை அதன் எழுத்து மற்றும் ஆன்மாவில் மதிக்கவும் கடைப்பிடிக்கவும் கட்டாயப்படுத்துகிறது. இந்த விதிகள் 1990-களில் கண்டிப்பாக செயல்படுத்தத் தொடங்கி 2013-ஆம் ஆண்டில் இந்த விதிகள் இந்திய ஆணையத்தின் மூலம் (Election Commission of India (EC) திருத்தப்பட்டது.

தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் தேதி வரை மாதிரி நடத்தை விதி நடைமுறையில் இருக்கும்.


அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரத்தின்போது பொது நடத்தைக்கான நெறிமுறைகளை மாதிரி நடத்தை விதி வகுக்கிறது. அதிகாரத்தில் உள்ள கட்சி அல்லது கட்சிகளைப் பொறுத்தவரை, அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் எந்தவொரு நிதி மானியங்களையும் அறிவிக்கவோ, சாலைகள் அமைக்கவோ அல்லது குடிநீர் வழங்கவோ அல்லது  உறுதியளிக்கவோ, புதிய திட்டங்களை அறிவிக்கவோ, கட்சி அல்லது அதிகாரத்தில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவாக வாக்காளர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் விளைவைக் கொண்ட எந்தவொரு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவோ கூடாது என்று மாதிரி நடத்தை விதி விதிக்கிறது.


ஏரளமான விதிமீறல்கள் உள்ளன


மாதிரி நடத்தை விதி என்பது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் பின்பற்றப்பட வேண்டிய தன்னார்வ விதிமுறைகளின் தொகுப்பாகும். இது சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட முடியாததாக உள்ளது. பிரச்சார செயல்முறை தொடர்பாக மாதிரி நடத்தை விதியின் சில விதிகளை மீறுவது குற்றவியல் சட்டங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 (Representation of the People Act, (RP Act)) ஆகியவற்றில் தொடர்புடைய விதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் செயல்படுத்தப்படலாம். இருப்பினும், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆளும் அரசாங்கத்தால் நிதி மானியங்கள் அல்லது புதிய திட்டங்களை அறிவிப்பது சமநிலையை சீர்குலைத்து, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைப் பாதிக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் நடந்துவரும் திட்டங்களின்கீழ் மானியங்கள் அல்லது விநியோகங்களை இந்த விதி கட்டுப்படுத்தாது.


ஹாம்லெட் நாடகத்தில், “மீறுவதிலேயே அதிகக் கௌரவம், பின்பற்றுவதைவிட” (“more honoured in the breach than in the observance”) என்பது ஒரு பிரபலமான மேற்கோள் ஆகும். இது பின்பற்றுவதைவிட புறக்கணிப்பதே சிறந்ததாக இருக்கும் வழக்கங்கள் மற்றும் சட்டங்களுக்காகக் கூறப்பட்டது. ஆனால் இந்தியத் தேர்தல் சூழலில், குறியீடுகளையும் சட்டங்களையும் மீறுவது ஒரு வழமையாகிவிட்டது. திட்ட அறிவிப்புகள் அல்லது மானியங்கள் விநியோகம் செய்வதில் MCC-ஐத் தவிர்க்க அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டறிகின்றனர்.


பண அரசியல் (Cash politics)


சமீபத்திய உதாரணம், ஆகஸ்ட் 2025-ல் பீகாரில் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம்  (Mukhyamantri Mahila Rojgar Yojana (MMRY)) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் சுயதொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளுக்காக ரூ.10,000 மானியமாகப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார். செப்டம்பர் 26, 2025 அன்று பிரதமர் மானியத்தை 75 லட்சம் பெண்களுக்கு மாற்றியதன் மூலம் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் முதல் வாராந்திர தவணைகள் பயனாளிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தவணை அக்டோபர் 31 அன்றும், அடுத்த தவணைத் தொகை நவம்பர் 7 அன்றும் மாற்றப்பட்டது. மாநிலத்திற்கு நிதிச் சுமையை ஏற்படுத்தினாலும், ஆதரவற்ற மற்றும் ஏழைப் பெண்களுக்கு (underprivileged and needy women) ஒரு முறை பணப் பரிமாற்றம் செய்வது மிகவும் தேவையான உதவியை வழங்குகிறது.


இருப்பினும், தேர்தல்கள் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவிருக்கும் நிலையில், இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை (MCC) உண்மையில் மீறுவதாகவும், நேரடி பண மாற்றங்கள் மூலம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்காளர்களை பாதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் உள்ளது என்ற விமர்சனம் செல்லுபடியாகும். தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தின் பெயரில் தஞ்சம் அடைவது சரியாகத் தெரியவில்லை.


தேர்தல்களுக்கு முன்பு புதிய திட்டங்களை அறிவிப்பது மூலம் மாதிரி நடத்தை விதிளை மீறுவது இதற்கு முன்பே நடந்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசுகளும், அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை செய்துள்ளன. ஆனால், முதலமைச்சரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் (Mukhyamantri Mahila Rojgar Yojana (MMRY)) இந்த விதி மீறுவதைவிட புதிய மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது.


போலித்தனத்தை நிறுத்துக (Stop the sham)


2013-ஆம் ஆண்டில், பணியாளர், பொது குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழு, மாதிரி நடத்தை விதியை சட்டப்பூர்வமாக இணைக்க பரிந்துரைத்தது. இருப்பினும், தேர்தல்கள் 45 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நீதித்துறை நடவடிக்கைகள் (judicial proceedings) அதிக நேரம் எடுக்கும் என்பதால் தேர்தல் ஆணையம் இதற்கு ஆதரவாக இல்லை.


மாதிரி நடத்தை விதியின் இத்தகைய வெளிப்படையான மீறல்களை எழுத்துப்பூர்வமாக இல்லாவிட்டாலும், மனப்பூர்வமாகக் கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், தேர்தல் சட்டங்களைச் சுற்றி வேலை செய்வதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிக்கும் நமது அரசியல் தலைவர்களின் அரசியல் தந்திர மதிநுட்ப திறனைக் (Machiavellian ability) கருத்தில் கொண்டு, அத்தகைய நடைமுறைகளைத் தடுப்பதில் இருக்கும் நேர்மையான முயற்சிகளும் மிகவும் கடினமானதாக இருக்கும்.


நல்ல சட்டங்களை இயற்றுவதைவிட மோசமான சட்டங்களை ஒழிப்பது மிகவும் முக்கியம் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் Calvin Coolidge கூறினார். அரசாங்கத் திட்டங்கள் மற்றும் திட்டங்களைக் கையாளும் மாதிரி நடத்தை விதியின் பெரும்பாலான பகுதிகளுக்கு இதைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கலாம். தேர்தல் பிரச்சார விதிகளை மீறினால், தேர்தல் ஆணையம் தனது தற்போதைய அதிகாரங்களைப் பயன்படுத்தி அதை சரியாக சமாளிக்க முடியும்.


இருப்பினும், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு புதிய திட்டங்கள் அல்லது நிதி மானியங்கள் எதுவும் வழங்கக்கூடாது என்று விதிக்கும் மாதிரி நடத்தை விதியின் வழிகாட்டுதல்களை ரத்து செய்ய முடியும். ஏனெனில், அவை பின்பற்றப்படுவதைவிட உள்நோக்கத்தில் அதிகமாக மீறப்படுகின்றன.


மாதிரி நடத்தை விதிகள் என்றால் என்ன?


லோக்சபா மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான ஒரே நேரத் தேர்தல்களை நடத்துவதற்கான வாதங்களில் ஒன்று, ஒவ்வொரு ஆண்டும் பல தேர்தல்கள் நடைபெறுவதால் ஏற்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) புதிய அரசு திட்டங்கள் மற்றும் திட்டங்களை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பது என்பதாகும். மாதிரி நடத்தை விதிகளில் இந்த விதிகளை நீக்குவது, ஒரே நேரத் தேர்தல்களுக்கு ஆதரவான வாதங்களில் குறைந்தபட்சம் ஒரு அபத்தமான காரணத்தை குறைக்கும்.


ரங்கராஜன் ஆர் ஒரு முன்னாள் இந்திய ஆட்சி பணி அதிகாரி மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட அரசியல். பற்றிய கோர்ஸ்வேர் என்ற புத்தகத்தின் ஆசிரியர். 



Original article:

Share: