பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுத்தல். -நிஜாரா தேகா

 பெண்கள் குரல் கொடுக்காவிட்டால் சட்டம் அதிகாரமற்றதாகவே இருக்கும்.


அரசியலமைப்புச் சட்டம் சமத்துவம், கண்ணியம் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாப்பை உறுதியளிக்கிறது. மேலும், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்-2005 (Protection of Women from Domestic Violence Act) ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. இருப்பினும், பெண்கள் தங்கள் துன்பங்களுக்குப் குரல் கொடுக்காதபோது, ​​இந்த உரிமைகளின் அர்த்தத்தை இழக்கின்றனர். பெண்கள் வீடுகளிலும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும் அச்சமின்றிப் பேசும் வரை, சட்டங்களும் கொள்கைகளும் தார்மீகப் பெருமை நிறைந்த வெற்று வார்த்தைகளாகவே இருக்கும்.


பல இந்திய வீடுகளில், மௌனமானது வார்த்தைகளைவிட சத்தமாகப் பேசுகிறது. அமைதியின் வெளிப்பாடு மௌனம் அல்ல, மாறாக வலிக்குப் பிறகு வரும் மௌனத்தின் நிலையாகும். கீழ்ப்படிதல் என்பது நல்லொழுக்கம் என்றும், சகிப்புத்தன்மை என்பது வலிமை என்றும், கணவரின் கோபம் அக்கறையின் வெளிப்பாடு என்றும் கற்பிக்கப்பட்ட பெண்களின் மௌனமாகப் பார்க்கப்படுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (National Family Health Survey (NFHS-5)) இந்த மனநிலை எவ்வளவு ஆழமாக செல்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (45 சதவீதம்) மற்றும் ஆண்கள் (44 சதவீதம்) ஒரு கணவன் தனது மனைவியை சில சூழ்நிலைகளில் அடிப்பது நியாயமானது என்று நம்புகிறார்கள். மனைவி வாதிட்டால், தனது பொறுப்புகளை புறக்கணித்தால் அல்லது பெரியவர்களுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் அது நியாயமானது என்று அவர்கள் நம்புகிறார்கள்.


இவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல, கலாச்சாரம் மக்களின் சரி மற்றும் தவறு உணர்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. வன்முறை பொதுவானதாக மாறும்போது, ​​சட்டம் அதன் அதிகாரத்தை இழக்கிறது. பல இந்திய வீடுகளில், வன்முறை மிகவும் பொதுவானது, பெண்கள் பெரும்பாலும் அதை அத்துமீறல் என்று அங்கீகரிக்கவில்லை. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS), என்பது ஒரு விரிவான மற்றும் கடுமையான கணக்கெடுப்பாகும். இது, பெண்கள் எதை வெளிப்படுத்த உணர்கிறார்கள் என்பதை அளவிடுகிறது. அவர்கள் அமைதியாக எதைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை அல்ல.


கலாச்சாரம் சட்டத்தை மீறும் போது


2023-24-ஆம் ஆண்டு அஸ்ஸாம் முழுவதும் எனது களப்பணியின் போது, வன்முறையை ஒரு மீறல் அல்ல, வழக்கமானது என்று பேசிய பல பெண்களை நான் சந்தித்தேன். வற்புறுத்தல் அல்லது கட்டுப்பாடு பற்றி கேட்டபோது, ​​சிலர் பதட்டமான புன்னகையுடன், அதை "திருமண வாழ்க்கையின் ஒரு பகுதி" என்று கூறினர். அதை வன்முறை என்று பெயரிடுவது, உணர்ச்சி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆபத்தானது என்று அவர்கள் கூறினர். "அவர் கோபமாக இருக்கும்போது மட்டுமே அடிப்பார்," என்று ஒரு பெண் என்னிடம் கூறினார், அது ஒரு வகையான கட்டுப்பாடு போல என்று நினைக்கிறேன்.


உலகம் முழுவதும், பெண்கள் பெரும்பாலும் துஷ்பிரயோகத்தை ஏற்றுக்கொள்வதால் அல்ல, மாறாக அவமானம், நிதி நெருக்கடி அல்லது சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவார்கள் என்ற பயத்தில் அமைதியாக இருக்கிறார்கள். இந்த மௌனம் உயிர்வாழ்வதற்கான ஒரு வழியாகிறது. அரசியலமைப்பு சமத்துவம், கண்ணியம் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாப்பை உறுதியளிக்கிறது. மேலும், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்-2005 (Protection of Women from Domestic Violence Act) ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. இருப்பினும், கலாச்சாரம் பெரும்பாலும் நடைமுறையில் இந்த உரிமைகளை பலவீனப்படுத்துகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS) தரவுகளின்படி, 18-49 வயதுடைய திருமணமான பெண்களில் 32 சதவீதம் பேர் தங்கள் கணவர்களிடமிருந்து உடல், பாலியல் அல்லது உணர்ச்சிரீதியான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். 14 சதவீதம் பேர் மட்டுமே உதவியை நாடியுள்ளனர். ஆணாதிக்கம் நேரடிக் கட்டுப்பாடு மூலம் மட்டுமல்ல, அன்றாட பழக்கவழக்கங்கள் மூலம் தொடர்கிறது. இதில் நகைச்சுவைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மௌனம் மூலம் நகர்கிறது.


இந்தியாவில், பொதுவாக மற்றவர்கள்-குறிப்பாக பிரபலமானவர்கள் பேசத் தொடங்கிய பின்னரே பெண்கள் பேசத் தொடங்குகிறார்கள். ஒரு பொது நபர் வன்முறையைப் பற்றிப் பேசும்போது, ​​ஆயிரக்கணக்கான சாதாரண பெண்கள் நீண்டகாலமாக உணர்ந்ததற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார்கள். சக்திவாய்ந்த ஒருவர் முதலில் பேசுவதற்காக பெண்கள் ஏன் காத்திருக்க வேண்டும்? வலுவான மாற்றம், ஒவ்வொரு பெண்ணும், நகர அலுவலகத்திலோ அல்லது கிராமப்புற முற்றத்திலோ, தயக்கமின்றி, 'இது ஏற்றுக்கொள்ள முடியாதது' (This is not acceptable) என்று சொல்ல அனுமதிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.


கல்வியும் பொருளாதார சுதந்திரமும் அவசியம், ஆனால் அவை போதுமானவை அல்ல. படித்த பெண்கள் இன்னும் மௌனமாக இருக்கலாம், பொருளாதார ரீதியாக சுதந்திரமான பெண்கள் இன்னும் கட்டுப்படுத்தப்படலாம். உண்மையான மாற்றம் பொருள் சார்ந்த அதிகாரமயமாக்கலைத் (material empowerment) தாண்டி சமூக தைரியத்தை வளர்க்க வேண்டும் — பெண்களின் சகிப்புத்தன்மையை போற்றும் மற்றும் எதிர்ப்பை கிளர்ச்சியாக கண்டிக்கும் விதிமுறைகளை சவால் செய்யும் தைரியம்.


இந்த தைரியத்தை குடும்பத்திலிருந்து வெளிப்புறமாக வளர்க்க வேண்டும். வீடுகளில் ஆண் குழந்தைகளுக்கு மரியாதை என்பது பலவீனம் அல்ல, வலிமை என்று கற்பிக்க வேண்டும். பள்ளிகளில் பச்சாதாபம், சம்மதம் மற்றும் சமத்துவத்தை குடிமக்கள் கல்வியின் ஒரு பகுதியாக சேர்க்க வேண்டும். ஊடகங்கள், எதிர்க்கும் பெண்களை இகழ்ந்து சித்தரிக்காமல், மரியாதை அளிக்கக்கூடிய ஆண்களை ஏளனம் செய்யாமல் காட்ட வேண்டும். நிறுவனங்கள் பெண்களின் சாட்சியங்களை சந்தேகத்துடன் அல்ல, ஒற்றுமையுடன் நடத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்கள் பேசும்போது சமூகம் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும் — அவர்களின் நோக்கங்களை கேள்வி கேட்காமல், அவர்களின் வலியை சந்தேகிக்காமல், அவர்களின் வார்த்தைகளை அதிகப்படுத்தல் என்று நிராகரிக்காமல். உண்மையான சுதந்திரம் சட்டத்தின் எழுத்தில் இருந்து அல்ல, மௌனத்தை எதிர்க்கும் பெண்களின் குரலில் இருந்து பாயும்.




எழுத்தாளர் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) உறுப்பினர்.



Original article:

Share: