தடுப்புக் காவல் (Preventive detention) என்பது என்ன? -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— குற்றம் சாட்டப்பட்ட இர்ஃபான் இப்ராஹிம் ஷேக் என அடையாளம் காணப்பட்டவர், செப்டம்பர் 19 அன்று நகர காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த கலவரத்தைத் தவிர, “மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறப்படும்” “செயற்கை நுண்ணறிவால்-உருவாக்கிய பதிவு” தொடர்பாக குறைந்தது ஒரு குற்றமாவது பதிவு செய்யப்பட்டுள்ளது.


— அக்டோபர் 7 அன்று வெளியிடப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் செல்லுபடி தன்மையை எதிர்த்து, ஒரு வழக்கறிஞர் மூலம் ஷேக் தாக்கல் செய்த மனுவை நீதிபதி இலேஷ் வோரா மற்றும் நீதிபதி பி.எம். ராவல் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு விசாரித்தது.


— தடுப்புக்காவல் உத்தரவுக்கு எதிராக வாதிட்ட ஷேக்கின் வழக்கறிஞர், வதோதரா நகர காவல்துறையினரால் கூறப்பட்ட தடுப்புக்காவலின் காரணங்கள் “பொது ஒழுங்குடன் எந்த தொடர்பும் இல்லை” என்றும், ஆனால் அது சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விவகாரம் என்றும், சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்புச் (Prevention of Anti-Social Activities Act (PASA) சட்டத்தின்படி, ஒரு நபருக்கு எதிரான குற்றத்தைப் பதிவு செய்வது பொது ஒழுங்கில் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று கூற முடியாது என்றும்  ஷேக்கின் வழக்கறிஞர் கூறினார்.


- உச்சநீதிமன்றத்தின் முன்னுதாரணங்களை மேற்கோள் காட்டி, நீதிமன்றத்தின் வாய்மொழி உத்தரவு வழங்கியது  அதன் படி, "கைது செய்யப்பட்டவர் மீது கூறப்படும் நடவடிக்கைகள் பொது ஒழுங்கைப் பராமரிப்பதில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்று கூறுவதற்கு பதிவு செய்யப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லை என்று நாங்கள் கருதுகிறோம் என்றும் தடுப்புக்காவல் அதிகாரியின் (detaining authority) தனிப்பட்ட தீர்ப்பை செல்லுபடியானதாகவோ அல்லது சட்டப்பூர்வமானதாகவோ கருத முடியாது என்று விவரித்தது.


உங்களுக்குத் தெரியுமா?


- இந்திய அரசியலமைப்பின் பிரிவு 22 கைது மற்றும் தடுப்புக்கு எதிரான பாதுகாப்பை விதிக்கிறது. இருப்பினும், இந்த பிரிவில் ஒரு விதிவிலக்கு உள்ளது. இது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு வழக்கமான சட்டப் பாதுகாப்புகள் பொருந்தாது என்று பிரிவு 22(3)(b) கூறுகிறது. பிரிவுகள் 22(4) முதல் 22(7) வரை தடுப்புக் காவல் நடைமுறை எவ்வாறு செயல்படுகிறது (preventive detention operationalises) என்பதை விளக்குகிறது.


- முதலில், “பொது ஒழுங்கை” நிலைநாட்ட தேவைப்பட்டால், மாநில அரசு, பொதுவாக மாவட்ட நீதிபதி (district magistrate) மூலம் ஒருவரைக் காவலில் வைக்க உத்தரவிடலாம். மாநில அரசு இந்த அதிகாரத்தை காவல்துறைக்கும் வழங்கலாம்.


- பிரிவு 22(4)-ன் கீழ் ஒருவரை மூன்று மாதங்களுக்கு மேல் காவலில் வைக்க வேண்டும் என்றால், ஒரு ஆலோசனைக் குழு அதை அங்கீகரிக்க வேண்டும். இந்த குழுக்கள் அரசால் உருவாக்கப்படுகின்றன. பொதுவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளைக் இந்த குழு கொண்டிருக்கும். காவலில் வைக்கப்பட்டுள்ள நபர் பொதுவாக குழுவின் முன் ஒரு வழக்கறிஞரை வைத்திருக்க முடியாது. குழு தடுப்புக்காவலை உறுதி செய்தால், தடுப்புக்காவல் உத்தரவை எதிர்த்து காவலில் வைக்கப்பட்ட நபர் (detainee) நீதிமன்றத்தை நாடலாம்.


- அரசியலமைப்பின் பிரிவு 22(5), அரசு “முடிந்தவரை விரைவாக” தடுப்புக்காவலின் காரணங்களை கைதிக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவை எதிர்த்துப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான ஆரம்ப வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது.


- தடுப்புக்காவலுக்கான அடிப்படையாக இருக்கும் அனைத்து காரணங்களையும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். தடுப்புக்காவலை நியாயப்படுத்த புதிய காரணங்களை பின்னர் சேர்க்க முடியாது. இந்தக் காரணங்கள் தடுப்புக் காவலில் உள்ள நபருக்கு புரியும் மொழியில் விளக்கப்பட வேண்டும்.


- ஆனால், இந்தப் பாதுகாப்பும் பிரிவு 22(6)-ஆல் ஓரளவு பலவீனமாக்கப்படுகிறது. அதன்படி, பிரிவு 5-ல் எதுவும் பொது நலனுக்கு எதிரான உண்மைகளை வெளிப்படுத்த மாநிலத்தை கட்டாயப்படுத்தாது.



Original article:

Share: