திரிசூல் மற்றும் BRASS TACKS-ன் மரபு -ரோஷ்ணி யாதவ்

 ஏன் செய்திகளில்?


முப்படையின் பாதுகாப்புச் சேவைகளும் குஜராத்தில் உள்ள சதுப்பு நிலமான சர் க்ரீக் பகுதியையும் (Sir Creek sector), சௌராஷ்டிரா கடற்கரையையும், கட்ச் பாலைவனத்தையும் (Rann of Kutch), இராஜஸ்தானின் பாலைவனப் பகுதிகளையும் உள்ளடக்கிய ‘திரிஷூல்’ (Trishul) என்ற பெயரிடப்பட்ட ஒரு முக்கியமான பயிற்சியில் பங்கேற்கத் தொடங்கியுள்ளன. ஆப்பரேஷன் சிந்தூரைத் (Operation Sindoor) தொடர்ந்து நடைபெறும் இந்த 'திரிஷூல்' பயிற்சி, பாகிஸ்தான் இராணுவத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள்  முப்படைப் பிரிவினருக்கு தொடர்ச்சியான எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னர் 1987-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 'ஆப்பரேஷன் பிராஸ் டாக்ஸ் IV' (Exercise BRASS TACKS IV) என்ற பெயரில் ஒரு இராணுவப் பயிற்சியை நடத்தியபோதும் இதேபோன்ற ஒரு நிகழ்வு நடந்தது. இதன் பின்னணியில், நாம் 'திரிஷூல்' பயிற்சி பற்றி அறிந்துகொள்வோம் 'பிராஸ் டாக்ஸ் IV' பயிற்சியை பற்றிய செய்தியை மறுபரிசீலனை செய்வோம்.


முக்கிய   அம்சங்கள்:


1. இந்த பயிற்சியானது மேற்கு கடற்கரை மற்றும் கழிமுகப் பகுதிகளில் (creek sectors) தரைவழி நகர்வுகள், விமான நடவடிக்கைகள் மற்றும் கடற்படைச் சொத்துக்களை ஒருங்கிணைத்து, அதன் மூலம் ஒரு பல-கள செயல்பாட்டு கட்டளையை (multi-domain theatre of operations) திட்ட வரைபடமாக்குகிறது.


2. குஜராத் கடற்கரை மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதியை உள்ளடக்கி - தரைப்படையின் தெற்குப் பிரிவு கட்டளை (Army Southern Command), மேற்குக் கடற்படை கட்டளை (Western Naval Command), மற்றும் தென்மேற்கு விமானப்படை கட்டளை (South Western Air Command) ஆகியவை பயிற்சியில் பங்கேற்கும் முக்கிய அமைப்புகளாகும்.


3. ஆயுதப்படைகளின் மூன்று பிரிவுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குதிறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள், இந்திய விமானப்படையின் போர் மற்றும் ஆதரவு விமானங்கள் ஆகியவற்றின் பெரிய அளவிலான நிலைநிறுத்தல்களைக் கொண்டுள்ளது. அத்துடன் இந்தியத் தரைப்படை மற்றும் இந்தியக் கடற்படையின் நீர்நிலப் பிரிவுகளை (amphibious component) உள்ளடக்கிய நீர்நிலச் செயல்பாடுகளை உள்ளடக்கியது. இதில் ஐஎன்எஸ் ஜலாஷ்வா (INS Jalashwa)  தரையிறங்கு தளக் கப்பல் (Landing Platform Dock) மற்றும் தரையிறங்குதளப் பயன்பாட்டு கப்பல்கள் (Landing Craft Utility vessels - LCUs) ஆகியவை அடங்கும். இது போன்ற பலதரப்பட்ட நிலப்பரப்பு மற்றும் பணி வரம்புகளில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை அடைவதே இதன் நோக்கமாகும்.


4. மூன்று படைகளும் T-90 மற்றும் அர்ஜுன் டாங்கிகள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், ஏவுகணை அமைப்புகள், ரஃபேல் மற்றும் சுகோய்-30MKI போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் பல்வேறு போர்க்கப்பல்கள் உள்ளிட்ட முழு வளங்களையும் திறன் மற்றும் ஆற்றலுக்காக செயல்பாட்டு ரீதியாக சோதனை செய்கின்றனர். பயிற்சிகளில் சேர்க்கப்பட்ட அல்லது சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு தளங்கள் மற்றும் கருவிகளும் பங்கேற்கக்கூடும். 


5. முப்படைகளின் சொத்துக்கள் மின்காந்த நிறமாலையிலும் (electromagnetic spectrum), மின்னணு மற்றும் தகவல் போர்க்களத்திலும் சோதிக்கப்படும்.


6. "திரிசூல் பயிற்சி, 'ஒருங்கிணைப்பு (Jointness), ஆத்மநிர்பரதா (தன்னம்பிக்கை) (Atmanirbharta) மற்றும் புதுமை (Innovation)' என்பதைக் குறிப்பிடும்விதமாக 'JAI’ என்ற உணர்வின் மூலம் இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கும் உறுதியை வெளிப்படுத்துகிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.


பிராஸ் டாக்ஸ் (BRASS TACKS) பயிற்சிகள்


1. 1987-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் பிராஸ் டாக்ஸ் IV (Exercise BRASS TACKS IV) எனப் பெயரிடப்பட்ட ஒரு இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.


2. பிராஸ் டாக்ஸ் IV என்பது 1986-ஆம் ஆண்டு கோடையில் தொடங்கிய நான்கு பயிற்சிகளின் வரிசையில் இறுதிக் கட்ட பயிற்சியாகும். பிராஸ் டாக்ஸ் I மற்றும் II ஆகியவை ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில், இந்திய இராணுவத்தின் மூத்த தளபதிகளின் நிர்வாகம், தகவல் தொடர்பு மற்றும் தளவாடத் திறன்களைச் சோதிக்கும் நோக்குடன் பயிற்சிகள் நடத்தப்பட்டன. ஜெனரல் கே. சுந்தர்ஜி அப்போது இராணுவப் படைத் தலைவராக இருந்தார். மேலும், இந்தப் பயிற்சிக்கு அவரே பிரதான சக்தியாக இருந்தார்.


3. இந்தப் பயிற்சியின் பின்னணியில் உள்ள இந்தியாவின் நோக்கங்களைப் பகுப்பாய்வு செய்த அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பானது, பிராஸ் டாக்ஸ் IV இந்திய இராணுவத்தின் வழக்கமான வருடாந்திர பயிற்சி சுழற்சியைப் பொருந்துவதாக நம்பியது. இந்திய இராணுவம் வழக்கமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ராஜஸ்தானில் படைப்பிரிவின் அல்லது பல படைப்பிரிவுகளின் பயிற்சிகளுடன் அதன் பயிற்சி சுழற்சியை நிறைவு செய்யும் என்று கூறியது.


4. பிராஸ் டாக்ஸ் பயிற்சிகள் போருக்கான முன்னோடியாக இல்லை என்பதை சான்றுகள் சுட்டிக்காட்டுவதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் பகுப்பாய்வு கூறியது.


5. திரிசூல் பயிற்சிக்கு எதிர்வினையாக பாகிஸ்தான் தனது படைகளை நிலைநிறுத்தியது போலவே, பிராஸ் டாக்ஸ் IV பயிற்சியின்போதும் செய்தது. அப்போது, அந்த நகர்வுகள் குறித்து இந்திய தரப்பிலிருந்து எந்தவிதமான தகவல்களும் அறிவிக்கப்படாததால், இந்தியப் படைகளின் நோக்கம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசியல் தலைமைகளிடையே ஒருவிதமான அச்சம் நிலவியது.


இந்தியாவின் சமீபத்திய கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சிகள்


1. யுத் அப்யாஸ் (Yudh Abhyas): அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியான 'யுத் அப்யாஸ்'-ன் 21வது பயிற்சி செப்டம்பர் 1 முதல் 14 ஆம் தேதி வரை அலாஸ்காவில் உள்ள ஃபோர்ட் வெயின்ரைட்டில் (Fort Wainwright) நடைபெற்றது. சுங்க வரி (tariffs) விவகாரம் மற்றும் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது தொடர்பாக டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான உறவுகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கமான சூழ்நிலை இருந்தபோதிலும், இந்த இராணுவப் பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையேயான நிலையான இராஜதந்திர மற்றும் தற்காப்பு உறவுகளின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.


2. மித்ர சக்தி (Mitra Shakti): இந்தியா - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான 'மித்ரா சக்தி'யின் 10வது பயிற்சி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் 25 ஆம் தேதிவரை, மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது. மித்ரா சக்தி என்பது இந்தியா மற்றும் இலங்கையில் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திரப் பயிற்சி நிகழ்வு ஆகும். அதன் கடைசி பயிற்சி நடைமுறை புனேவில் நவம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.


3. கடற்படைக் கூட்டுப் பயிற்சி (Passage Exercise): இந்திய கடற்படையின் மறைமுகத் தாக்குதல் போர்க்கப்பலான INS தபார், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பி-8 கடல்சார் ரோந்து விமானம் ஆகியவை இங்கிலாந்தின்  ஏர்போர்ன் ஸ்ட்ரைக் குழுமத்துடன் (Carrier Strike Group) இணைந்து, வடக்கு அரபிக் கடலில் ஜூன் 9 மற்றும் 10, 2025 ஆம் நாளன்று கடற்படை கூட்டுப்பயிற்சியில் (PASSEX) பங்கேற்றன. இந்தக் கூட்டுப் பயிற்சியானது இந்திய கடற்படைக்கும், ராயல் கடற்படைக்கும் இடையிலான ஆழமான ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதுடன், கடல்சார் பாதுகாப்பு மற்றும் வலுவான இருதரப்பு உறவுகளுக்கான ஆழமான உறவைப் பறைசாற்றுகிறது.


4. நாடோடி யானை (Nomadic Elephant): இந்தியா-மங்கோலியா கூட்டு இராணுவப் பயிற்சியின் 17வது பயிற்சி நடைமுறை, மங்கோலியாவின் உலான்பாதரில் (Ulaanbaatar) 2025-ஆம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 13 வரை நடத்தப்பட்டது. இது இந்தியாவிலும் மங்கோலியாவிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும். 2024-ஆம் ஆண்டில் மேகாலயா மாநிலத்தில் உள்ள உம்ரோயில் (Umroi) நடத்தப்பட்டது.


5. டஸ்ட்லிக் (Dustlik): இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் ஆறாவது பயிற்சி 'டஸ்ட்லிக்' புனேவின் ஔந்த்தில் (Aundh) உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையில் (Foreign Training Node (FTN)) 2025-ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. டஸ்ட்லிக் பயிற்சி என்பது இந்தியாவிலும் உஸ்பெகிஸ்தானிலும் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். கடைசி பதிப்பு 2023-ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் உள்ள டெர்மெஸிலும் (Termez) உத்தரகண்டில் உள்ள பித்தோராகரிலும் (Pithoragarh) நடத்தப்பட்டது. பல்வேறு சூழல்களிலும் நிலப்பரப்புகளிலும் இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதும் ஒருங்கிணைந்த திறன்களை மேம்படுத்துவதுமே  இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.


Original article:

Share: