தீர்ப்பின் நடைமுறையை விட இலட்சியங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. பெறுநிருவனங்களும், அரசியல் கட்சிகளும் 2018-க்கு முந்தைய நிதியைப் பிரிக்கும் பாதையில் பின்வாங்கலாம் அல்லது முற்றிலும் கணக்கில் காட்டப்படாத அரசியல் நன்கொடைகளை வழங்கலாம்..
பிப்ரவரி 15 அன்று, உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds (EB)) திட்டம் 2018-ஐ முடிவுக்குக் கொண்டு வந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of People Act (RPA)), நிறுவனங்கள் சட்டம் (Companies Act (CA)) மற்றும் வருமான வரிச் சட்டம் (Income Tax Act (ITA)) ஆகியவற்றில் உள்ள அனைத்து திருத்தங்களும் சட்டப்பிரிவு 19(1)(a) இன் கீழ் தகவல் பெறுவதற்கான அடிப்படை உரிமை மற்றும் அரசியலமைப்பின் சமத்துவ உரிமையை (பிரிவு 14) மீறுவதாக நீதிமன்றம் கருதுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் (Representation of People Act (RPA)) ஒரு திருத்தம், பிரிவு 29 சி, அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (Elections Commission of India (ECI)) தேர்தல் பத்திரங்களைப் (Electoral Bonds (EB)) பற்றிய அறிக்கை வழங்குவதிலிருந்து விதிவிலக்கு அளித்தது. வருமான வரிச் சட்டத்தில் (Income Tax Act (ITA)), பிரிவு 13ஏ(பி) மாற்றப்பட்டது. இதனால் காசோலை, வங்கி வரைவோலை, மின்னணு தீர்வு முறை அல்லது தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட ரொக்க நன்கொடைகள் ரூ. 2,000 மட்டுமே, வருமான வரியிலிருந்து வரி விலக்கு பெறுவதற்கு தகுதியுடையதாக ITA இன் பிரிவு 13A(b) திருத்தப்பட்டது.
நிறுவனங்கள் சட்டத்தின் (Companies Act (CA)) பிரிவு 182 (1) மற்றும் பிரிவு 183 (3) ஆகியவற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள் அனைத்து நிறுவனங்களையும், லாபம் அல்லது இழப்பைப் பொருட்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற பெறுநிறுவன நிதிகளை வழங்க அனுமதித்தன. இது, முந்தைய 7.5% லாப வரம்பை நீக்கியது.
உச்ச நீதிமன்றம் மாற்று அரசியல் நிதி திட்டத்தை முன்மொழியவில்லை. திருத்தங்கள் அரசியலமைப்பிற்கு முரணானதாக அறிவிக்கப்பட்டதாலும், மாற்று முறை எதுவும் பரிந்துரைக்கப்படாததாலும், தேர்தல் பத்திரங்களை நிறுத்தப்பட்டு, தேர்தல் பத்திரங்களுக்கு முந்தைய பண நன்கொடைகள் மற்றும் பெருநிறுவன நன்கொடை முறை மீண்டும் கொண்டுவரப்படும்.
தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதலாக, பாரத ஸ்டேட் வங்கி ஏப்ரல் 12, 2019 முதல் (உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் தேதி) வாங்கிய தேர்தல் பத்திரங்களின் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், சமர்ப்பிக்கப்படும் தகவல் ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தையும் வாங்கிய தேதி, வாங்குபவரின் பெயர் மற்றும் பெறப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ஆகியவற்றை உள்ளடக்கும்.
மேலும், இடைக்கால உத்தரவுக்குப் பிறகு தேர்தல் பத்திரங்களை பெற்ற மற்றும் பணமாக்கிய அரசியல் கட்சிகளின் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கிக்கு வழங்க வேண்டும். இந்த தகவலில் பணமாக்கல் தேதி மற்றும் பத்திர மதிப்பு ஆகியவை இருக்க வேண்டும். இதில், வழங்கப்பட வேண்டிய தகவல்களில் பணமதிப்பீடு செய்யப்பட்ட தேதி மற்றும் ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தின் மதிப்பும் இருக்க வேண்டும். இந்த விவரங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 6 ஆகும். பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவல்களை மார்ச் 13-ம் தேதிக்குள் தனது இணையதளத்தில் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 12, 2019 க்குப் பிறகு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் பெரும்பாலான விவரங்கள் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் பொதுமக்களுக்குத் தெரியும். எந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்ககளை வாங்கின மற்றும் ஒவ்வொரு தேர்தல் பத்திரங்கள் பற்றிய குறிப்பிட்ட விவரங்கள், அவற்றைப் பெற்றவர்கள் உட்பட இதில் அடங்கும். ஒரு தேர்தல் பத்திரம் செல்லுபடியாகும் 5 நாட்களுக்குள் ஒரு அரசியல் கட்சியால் பயன்படுத்தப்படவில்லை என்றால், அது வாங்குபவருக்குத் திருப்பித் தரப்பட வேண்டும். டெபாசிட் செய்த பிறகு, வாங்குபவரின் கணக்கில் தேர்தல் பத்திரங்களின் தொகையை வழங்கும் வங்கியானது திருப்பிச் செலுத்தும்.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழங்கப்பட்ட மற்றும் பெறப்பட்ட ஒவ்வொரு தேர்தல் பத்திரங்ககளுக்கும் குறிப்பிட்ட அடையாள எண்ணை வழங்க தேவையில்லை. அவர்கள் ஒவ்வொரு தேர்தல் பத்திரங்ககளையும் அதன் வாங்குபவர் மற்றும் வைப்புத்தொகையாளருடன் பொருத்த வேண்டிய அவசியமில்லை. எனவே, பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழங்கிய மற்றும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தகவல்கள், எந்த நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு தேர்தல் பத்திரங்களை வழங்கியது என்பதை நேரடியாக வெளிப்படுத்தாது. இதற்கு தரவு நிபுணரின் பகுப்பாய்வு தேவைப்படலாம், இது நேரடியானதாக இருக்காது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றம் இரண்டு முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் தனது தீர்ப்பை வழங்கியது.
உச்ச நீதிமன்றம் "திறந்த நிர்வாகத்தின்" (open governance) முக்கியத்துவத்தை வலியுறுத்தியது மற்றும் "வாக்களிக்கும் தேர்வை திறம்பட செயல்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளின் நிதியுதவி பற்றிய தகவல் முக்கியமானது" என்பதை ஒப்புக்கொண்டது. கூடுதலாக, நீதிமன்றம் அரசியல் ஆதாயங்களுக்காக பெருநிறுவன நிதியுதவியை ஊக்கப்படுத்துவதையோ அல்லது நிறுத்துவதையோ உச்ச நீதிமன்றம் நோக்கமாகக் கொண்டுள்ளது. "முதன்மை நிலையில், அரசியல் பங்களிப்புகள் பங்களிப்பாளர்களின் அட்டவணையில் ஒரு இடத்தைப் பெறுகின்றன. அதாவது இது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அணுகலை மேம்படுத்துகிறது. இந்த அணுகல் கொள்கை வகுப்பதில் செல்வாக்கு செலுத்துகிறது. ஒரு அரசியல் கட்சிக்கு நிதி பங்களிப்பிற்கான சட்டபூர்வமான வாய்ப்பும் உள்ளது. பணத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு காரணமாக பரஸ்பரம் ஏற்பாடுகளுக்கு (quid pro quo arrangement ) வழிவகுக்கும்" என்று நீதிமன்றம் கூறியது.
தேர்தல் பத்திரங்ககள் தற்போது வரலாறாகியுள்ளன
லாபகரமான நிறுவனங்கள் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக, அவர்களின் லாபத்தில் அதிகபட்சம் 7.5% வழங்க முடியும். இந்த விருப்பம் முன்பு இருந்தது ஆனால் அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. இது எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை. வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சிகளுக்கு இன்னும் நிதி தேவைப்படும்.
லோக்சபா தேர்தலில் அவர்கள் எவ்வாறு பங்களிப்புகளைப் பெறுவார்கள்?
பெருநிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் 2018க்கு முந்தைய முறைக்குத் திரும்பக்கூடும். இதில் தலா ரூ.20,000 க்கும் குறைவான ரொக்க நன்கொடைகளாக நிதியைப் பிரிப்பது அடங்கும். மாற்றாக, அவர்கள் முற்றிலும் கணக்கில் காட்டப்படாத அரசியல் நன்கொடைகளை நாடலாம். ஒட்டுமொத்தமாக, நடைமுறையை விட இலட்சியவாதம் மேலோங்கியுள்ளதால், இந்தியா விலையுயர்ந்த வெற்றியை எதிர்கொள்ளும்.
கட்டுரையாளர் முன்னாள் நிதித்துறை செயலாளர் ஆவார்.