இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் லால் சலாம் படத்தின் திமிறி எழுடா பாடல் குறித்து ட்வீட் செய்துள்ளார். பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் குரல்களை மீண்டும் உருவாக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். எந்திரன் 2.0 மற்றும் பிகில் போன்ற படங்களில் பாடல்களுக்காக அறியப்பட்ட பாக்யா செப்டம்பர் 2022 இல் 42 வயதில் காலமானார். 1998 இல் இறந்த ஹமீத், ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களில் பணியாற்றினார். அவர்களின் குடும்பத்தினர் குரல்களைப் பயன்படுத்த அனுமதித்தனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காக குரல்களை நகலாக்கம் (clone voices) செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது நெறிமுறையா? ஒலிப் பொறியாளர் (Sound engineer) மற்றும் இசை அமைப்பாளருமான (music producer) சாய் ஷ்ரவணம் மற்றும் பின்னணி பாடகர் ஹரிசரண் சேஷாத்ரி ஆகியோர் சீனிவாச ராமானுஜத்துடன் இந்த தலைப்பைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
இசைக்கலைஞர்களாக, பாடலைக் கேட்டபோது உங்கள் முதல் எதிர்வினைகள் என்ன?
சாய் ஷ்ரவணம்: ஹமீத் மற்றும் பாக்யாவின் குரல்களைக் கேட்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. பாடலுக்காக அவர்களின் குடும்பத்தினருக்கும் பணம் கொடுக்கப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல கலைஞர்கள் பெரிய வெற்றியைப் பெற்று பின்னர் மறைந்து விடுகிறார்கள். இந்த இரண்டு கலைஞர்களும் இப்போது நம்முடன் இல்லை, ஆனால் அவர்களின் குரல்களைக் கேட்பது அற்புதமான நினைவுகளைத் தருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த ரோஜா படத்தை இப்போது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமக்கு கொடுக்கிறார். அவர் காலத்தால் அழியாதவர். இப்போது இதற்காக 'காலமற்ற குரல்களைப்' (Timeless Voices) பயன்படுத்தியுள்ளார். ஒருவரை "மீண்டும் உயிர் பெற" (back to life) செய்யும் இந்த தொழில்நுட்பத்தால் நான் ஆச்சரியப்படுகிறேன். இது எனக்கு ஒரு அற்புதமான உணர்வாக கருதிகிறேன்.
ஹரிசரண் சேஷாத்ரி: முதலில் அவர்களின் பெயர்களைப் பார்த்ததும் அது தவறு என்று நினைத்தேன். பிறது, செய்தியும் பாடலும் கேட்டேன். இது மிகப்பெரியது, இது எப்படி நடந்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன். இது ஒரு கட்டத்தில் இசைத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால் அது ஒரு பாடகராக எனது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வைத்தது.
ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காக குரல்களை குரல்களை நகலாக்கம் (clone voices) செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது நெறிமுறையா?
சாய் ஷ்ரவணம்: நெறிமுறைகள் என்பது தனிப்பட்ட விஷயம். செயற்கை நுண்ணறிவு மனித திறமையைப் பின்பற்றுகிறது. அணுகுண்டு போல, கண்டுபிடிப்பு அல்ல, மக்கள் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் பிரச்சினை. செயற்கை நுண்ணறிவு இல்லாமல் கூட, வேறொருவரின் வேலையை நகலெடுப்பது மற்றும் அதிலிருந்து லாபம் ஈட்டுவது நெறிமுறை ரீதியாக தவறு. செயற்கை நுண்ணறிவு ஆனது மனித பாடகர்களையும் அவர்கள் கொண்டு வரும் தனித்துவமான படைப்பாற்றலையும் மாற்ற முடியாது.
ஹரிசரண் சேஷாத்ரி: பாடல்களைத் தயாரித்து, அவற்றை நன்றாக ஒலிக்க வைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது பாடல் குறிப்புகளை சரிசெய்யும் செயற்கை நுண்ணறிவின் ஒரு வடிவம் ஆகும். குரல்களைப் பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்குவதற்கும் அனைவரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் நமக்கு சட்டங்கள் தேவை. செயற்கை நுண்ணறிவு குரல் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கு அனுமதி முக்கியம். ஒரு நபர் உயிருடன் மற்றும் அணுகக்கூடியவராக இருந்தால், செயற்கை நுண்ணறிவு தேவையில்லை. ஆனால் அவர்கள் மறைந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தின் அனுமதி பெற்று, அதற்கான பணம் செலுத்த வேண்டும். இது இன்றியமையாதது. குறிப்பாக விதிகள் கடுமையாக இல்லாத இந்தியாவில், ஒரு பாடகியாக, எனது பாடல் ராயல்டி உரிமைகளுக்காக நான் இன்னும் போராடுகிறேன்.
உங்கள் பணியில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் உங்களுக்கு உதவிய சில நிகழ்வுகளை விரிவாகக் கூற முடியுமா?
சாய் ஷ்ரவணம்: எனது பயணத்தில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகித்துள்ளது. சரியாகப் பாடாத நபர்களுக்கு ஆட்டோ-டியூன் (auto-tune) எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி விவாதிக்கும் ஆவணப்படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அது செயல்பட உள்ளீடு தேவைப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசையில், தோடி (Thodi) மற்றும் பேகடா (Begada) போன்ற ராகங்கள் நுண் குறிப்புகளை (micro notes) உள்ளடக்கியவை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆட்டோ-டியூன் (auto-tune) பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அது எப்போதும் தீர்வாக இருக்காது. ஒரு இசைக்கலைஞராக, மியான் மல்ஹர் அல்லது தோடி போன்ற ராகங்களில் ஆட்டோ-டியூனைப் பயன்படுத்துவதில் வெற்றி கண்டேன். மீண்டும், கருவியை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொண்டு சரியான அமைப்புகளை இசைச் செயலியில் உள்ளீடு செய்தேன். அதை திறம்பட பயன்படுத்த வேண்டியது நமது பொறுப்பு ஆகும்.
இப்போதெல்லாம், நான் வெவ்வேறு இசைக்கலைஞர்களிடமிருந்து 200 ஆடியோ டிராக்குகளைக் (tracks of audio) கையாள்கிறேன். ஒவ்வொன்றும் மாறுபட்ட தரத்துடன் பதிவு செய்யப்படுகிறது. அவை அனைத்தையும் உகந்ததாக கையாள்வது கடினம். செயற்கை நுண்ணறிவு அவற்றை தரப்படுத்துவதன் மூலம் உதவுகிறது. சுமார் ஏழு மணிநேர வேலையை மிச்சப்படுத்துகிறது. நான் ஆக்கப்பூர்வமாக இருப்பதில் கவனம் செலுத்த முடியும். ஸ்மார்ட் செயலிகளும் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. இந்த கருவிகள் இல்லாமல், என்னால் காலக்கெடுவை சந்திக்க முடியவில்லை. செயற்கை நுண்ணறிவு எனக்கு, குறிப்பாக ஆக்கப்பூர்வமற்ற பணிகளில் நிறைய உதவுகிறது.
ஹரிசரண் சேஷாத்ரி: செயற்கை நுண்ணறிவு என்பது இசைக்கு மட்டுமல்ல. சமீபத்தில், ஒரு தொகுப்பாளர் எனக்கு 75 கேள்விகளை உருவாக்க ChatGPT ஐப் பயன்படுத்தினார், இது மிகப்பெரியது. நான் ஒரு இசைக்கலைஞர் மற்றும் பாடகராக இருந்தாலும், சில நேரங்களில் நான் வீட்டில் பதிவு செய்து ஒரு இசையமைப்பாளருக்கு அனுப்ப வேண்டும். எனக்கு எப்படிப் பாடுவது என்று தெரியும் என்றாலும், ஒரு தொழில்முறை ஒலி பொறியாளர் (sound engineer) பொதுவாக கையாளும் பதிப்பித்தல் (editing) மற்றும் மறைத்தல் (fading) போன்ற பிற பணிகள் உள்ளன. அந்த பணிகளில் செயற்கை நுண்ணறிவு எனக்கு உதவுகிறது. ஒரு பாடலைப் பதிவுசெய்ய எனது சொந்த செயற்கை நுண்ணறிவு குரல் மாதிரியைப் பயிற்றுவிக்க முயற்சித்தேன், அதை எனது அசலாக பாடும் பாணியுடன் ஒப்பிட்டேன். ஆனால் செயற்கை நுண்ணறிவு ஒரு உண்மையான பாடகரை மாற்ற முடியாது. ஏனெனில் நாங்கள் ஒரு பாடலுக்கு உணர்ச்சியையும் உணர்வையும் கொண்டு வருகிறோம். செயற்கை நுண்ணறிவை அதிகமாக நம்புவது சராசரி இசைக்கு வழிவகுக்கும் என்று நான் கவலைப்படுகிறேன்.
இது படைப்பாற்றல் மற்றும் மனிதாபிமானத்தின் முன்னேற்றத்தை சீர்குலைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம் என்றால், அதை எவ்வாறு சமாளிப்பது?
சாயி ஷ்ரவணம்: படைப்பாற்றல் என்பது கடவுள் கொடுத்த பரிசு. அது உங்கள் மூலமாக பாய்கிறது, உங்களிடமிருந்து அல்ல. கலை என்பது ஆராய்வது பற்றியது, கற்றுக்கொள்வது மட்டுமல்ல. செயற்கை நுண்ணறிவு கருவிகள் வழக்கமான பணிகளுக்கு உதவக்கூடும், ஆனால் மனித உணர்ச்சிகள் எல்லாவற்றையும் மாற்றும். என்னைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவானது படைப்பு செயல்முறையை மாற்ற முடியாது. ஹரிசரண் போன்ற ஒருவர் என் ஸ்டுடியோவுக்கு வந்து, பாடல் வரிகளைக் கற்றுக்கொண்டு, அவற்றை வழங்குவதை இது மாற்ற முடியாது.
ஹரிசரண் சேஷாத்ரி: செயற்கை நுண்ணறிவு படைப்பாற்றலை சிறிது சீர்குலைக்கலாம், அதனால் மக்கள் சலிப்படைவார்கள். திரையுலகில், சமூக ஊடகங்கள் காரணமாக சராசரியாக உள்ளடக்கம் நிறைய கவனம் பெறுகிறது. பாடல் வரிகள் அர்த்தமற்றவை, அவை போக்குகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவுக்கு நேரம் இருக்கும், ஆனால் இறுதியில், நாம் அதிலிருந்து முன்னேறுவோம்.
இசை மற்றும் செயற்கை நுண்ணறிவின் இந்த இணைப்பின், எதிர்காலம் எங்கே செல்கிறது?
சாய் ஷ்ரவணம்: மனிதர்கள் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். கலை மற்றும் இசை வெறும் தயாரிப்புகள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இது ஒரு தயாரிப்பாக மாறிவிட்டது. மனித மூளை உணர்வைச் சுற்றியே சுழல்கிறது, இன்று நான் ஒரு ஒலி பொறியியலாளராக (sound engineer) உணருவது நாளை மாறுபடலாம். இருப்பினும், ஒரு கணினி ஒரு நிலையான வெளியீட்டை வழங்குகிறது. கலைகள் பணம் சம்பாதிக்கும் தொழிலாக இருப்பதைத் தாண்டியது என்பதை அங்கீகரிப்பது முக்கியம்.
ஹரிசரண் சேஷாத்ரி: ஒவ்வொரு தொழிற்துறையிலும் செயற்கை நுண்ணறிவு நெறிமுறை பயன்பாட்டு வாரியம் (AI Ethical Usage Board) இருக்க வேண்டும். இதில் டீப்ஃபேக் வீடியோக்கள் (Deepfake videos) ஒரு கவலை. எனவே இதற்கு விதிமுறைகள் தேவை. அனைத்து அறிவுசார் சொத்துக்களும் பதிவு செய்யப்பட வேண்டும். யாராவது அனுமதியின்றி எனது குரலைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பதை அங்கீகரிக்க வேண்டும்.