உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) உள்ள சீனாவின் 'சியாவோகாங்' எல்லை பாதுகாப்பு கிராமங்கள், இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன -அம்ரிதா நாயக் தத்தா

 திபெத்துடனான இந்தியாவின் எல்லைகளில் சீனா ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 600 க்கும் மேற்பட்ட ஜியோகாங் (Xiaokang) அல்லது "வசதியான கிராமங்களை" (well-off villages) உருவாக்கி வருகிறது. இப்போது என்ன நடக்கிறது, இதற்கு முன்பு இந்தியா எப்படி நடந்துகொண்டது? 


சீன குடிமக்கள் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் எல்லையில் உள்ள பல 'சியாகாங்' (Xiaokang) மாதிரி எல்லை பாதுகாப்பு கிராமங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர். 


2019 முதல், இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) சீனா கிராமங்களை அமைத்து வருகிறது. இருப்பினும், இந்த கிராமங்கள் சில மாதங்களுக்கு முன்பு வரை ஆக்கிரமிக்கப்படாமல் இருந்தன.


அதிகாரிகளின் கூற்றுப்படி, உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) உள்ள சில கிராமங்கள், குறிப்பாக லோஹித் பள்ளத்தாக்கு (Lohit Valley) மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் துறை (Tawang secto) முழுவதும் இப்போது குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர்.


இந்த சியாவோகாங் எல்லை பாதுகாப்பு கிராமங்கள் என்றால் என்ன?


திபெத்துடனான இந்தியாவின் எல்லைகளில் சீனா ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 628 ஜியோகாங் அல்லது "வசதியான கிராமங்களை" (well-off villages) உருவாக்கி வருகிறது. இந்த கிராமங்கள் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உட்பட உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் (LAC) பரவியுள்ளன.


இந்த கிராமங்களில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலும் இரண்டு மாடி, பெரிய மற்றும் விசாலமானவையாக உள்ளன. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த திட்டமிடப்பட்ட கிராமங்களுக்கான பெரும்பாலான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன.


இந்த கிராமங்களின் நோக்கம் முற்றிலும் தெளிவாக இல்லை. ஆனால் அவை சிவில் மற்றும் இராணுவ செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படலாம் என நம்பப்படுகிறது. இது ஒரு பாதுகாப்பு நிலைப்பாட்டில் இருந்து கவலைகளை எழுப்பியுள்ளது. உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் (LAC) சில பகுதிகளில் சீனா தனது உரிமைகோரல்களை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வழியாக வல்லுநர்கள் இதைப் பார்க்கின்றனர்.


உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (LAC) சரியான அளவு பல ஆண்டுகளாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு சர்ச்சைக்குரிய புள்ளியாக இருந்து வருகிறது. இதன் எல்லை 3,488 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்று இந்தியா கூறுகிறது. அதே நேரத்தில் சீனா இது சுமார் 2,000 கிலோமீட்டர் என்று கூறுகிறது.


இந்த கிராமங்கள் தொடர்பாக ஏதாவது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதா?


சீனாவின் நில எல்லைகள் தொடர்பான புதிய சட்டம் ஜனவரி 1, 2022 அன்று தொடங்கியது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் (National People’s Congress) நிலைக்குழு (சீனாவின் ரப்பர்-ஸ்டாம்ப் பாராளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது) 2021இல் நிறைவேற்றிய இந்த சட்டம், நாட்டின் எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, அரசாங்கம் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும், எல்லைப் பகுதிகளில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், பொது சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். மேலும், இந்த பகுதிகளில் வாழும் மற்றும் பணிபுரியும் மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். எல்லை பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது. எனவே, இந்த எல்லைச் சட்டம் (border law) எல்லைப் பாதுகாப்பு கிராமங்கள் திட்டத்தை உள்ளடக்கியது.


இதை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது?


இந்திய அரசு தனது எல்லை கிராமங்களை நவீன, முழுமையாக பொருத்தப்பட்ட கிராமங்கள் மற்றும் சுற்றுலா தலங்களாக மேம்படுத்த 2022 இல் துடிப்பான கிராமங்கள் திட்டத்தை (Vibrant Villages Programme) அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் தற்போதுள்ள எல்லைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை (Border Area Development Programme (BADP)) விரிவுபடுத்துகிறது.


இத்திட்டத்தின் முதல் கட்டமாக, 663 எல்லை கிராமங்களை நவீன கிராமங்களாக மேம்படுத்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. சீன எல்லையில் லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய 17 எல்லை கிராமங்கள் சோதனை முயற்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.


அருணாச்சல பிரதேசத்தில், மாநிலத்தின் கிழக்குப் பகுதி மற்றும் தவாங் பிராந்தியத்தில் உள்ள கிராமங்களான ஜெமிதாங், தக்சிங், சாயாங் தாஜோ, டுட்டிங் மற்றும் கிபிது ஆகியவை வளர்ச்சிக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.


இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் சீனா வேறு என்னென்ன உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது?


அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பிராந்தியம் மற்றும் சியாங் பள்ளத்தாக்கு உள்ளிட்ட உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) சீனா தொடர்ந்து உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. மலைப்பாதைகள் வழியாக சிறப்பாக இணைக்க புதிய சாலைகள் மற்றும் பாலங்களை உருவாக்குவது இதில் அடங்கும். கூடுதலாக, பூட்டானிய பிராந்தியத்தில் வீடுகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை சீனா கட்டி வருகிறது.


இந்தியா தனது எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், முன்னோக்கி செல்லும் பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்தவும் பணியாற்றி வருகிறது. புதிய சாலைகள், பாலங்கள் மற்றும் ஹெலிபேட்கள் கட்டுவது இதில் அடங்கும். உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LAC) மாற்று வழிகளை உருவாக்குவதிலும், வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பள்ளத்தாக்குகளுக்கு இடையிலான இணைப்புகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.




Original article:

Share: