ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகளை மறுவடிவமைக்கும் யோசனை மத்திய அரசாங்கத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே அதிகாரம் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும். இந்த ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 97 கோடி வாக்காளர்கள் தயாராக உள்ளனர். இந்தியா உலகின் மிகப்பெரிய தேர்தல் ஜனநாயக நாடாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தும். 2019 ஆம் ஆண்டு வாக்களிக்க தகுதியான வாக்காளர்களை விட வரும் பொது தேர்தலில் வாக்களிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 6% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்கள் கணிசமான எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்டுள்ளன. உலகின் மிகப் பெரிய நாடுகளின் மக்கள்தொகைக்கு நிகரான பல வாக்காளர்கள் இந்தப் பகுதிகளில் உள்ளனர். Map 1-ல் உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் 14.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையானது உலகின் ஏழாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான பிரேசிலின் மக்கள்தொகையைப் போன்றது. மகாராஷ்டிராவில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மெக்சிகோ நாட்டின் மக்கள்தொகைக்கு சமம். பிகாரின் வாக்காளர்களின் எண்ணிக்கை பிலிப்பைன்ஸின் மக்கள்தொகையுடன் ஒப்பிடப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட கோவாவில் கூட, பஹ்ரைன் மற்றும் சைப்ரஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு மக்கள்தொகை உள்ளது.
மாநிலங்களை பொறுத்து 2019 முதல் 2024 வரை மக்களவையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் உள்ளது. சராசரியாக, டெல்லியைச் சேர்ந்த ஒரு எம்.பி., 20.5 லட்சம் வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு எம்.பி., 18.3 லட்சம் வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆந்திராவில் 15.8 லட்சம் வாக்காளர்களும், தமிழகத்தில் 15.4 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். கேரளா மற்றும் திரிபுராவில் ஒவ்வொரு எம்.பி.யும் 13.1 லட்சம் வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். Map 2 இரண்டாவது வரைபடம் மாநில வாரியாக ஒவ்வொரு எம்.பி.க்கும் சராசரி வாக்காளர்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
முக்கிய மாநிலங்களில் அதிக மற்றும் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளை அட்டவணை 3 சுட்டிக்காட்டுகிறது . தெலுங்கானாவில் உள்ள மல்காஜ்கிரி தொகுதியில் 31.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு 28.5 லட்சம் வாக்காளர்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது.
1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு, எல்லை நிர்ணயப் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாநிலங்கள் முழுவதும் ஒவ்வொரு எம்.பி.யும் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் உள்ள வித்தியாசம் உள்ளது. ஒரு நபர் ஒருவருக்கு வாக்கு என்ற கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில் எண்கள் புதுப்பிக்கப்படவில்லை. இந்த முடக்கம், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களுக்கு வெகுமதி அளிப்பதாகும். எவ்வாறாயினும், இப்போது தொகுதி எல்லைகளை மறுவடிவமைக்கும் கருத்து சிக்கலானது. மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மாநிலங்களை இது வேறுவிதமாக பாதிக்கும். மக்கள்தொகையை திறம்பட நிர்வகிக்காத அதிக பிறப்பு மற்றும் இறப்பு விகித சாரங்களை கொண்ட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மக்களவையின் அளவு ஒரே மாதிரியாக இருந்தால் அல்லது சிறிதளவு அதிகரித்தால், இந்த மாநிலங்கள் குறைவான எம்.பி.க்களுடன் முடிவடையும்.
வைஷ்ணவ் மற்றும் கார்னகி நன்கொடை வாரிய (Vaishnav et al, Carnegie endowment) கட்டுரையில் மக்களவையின் அளவு ஒரே மாதிரியாக இருந்தால், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் முறையே 11 மற்றும் 10 இடங்களைப் பெறுவது எப்படி என்று விவாதிக்கப்பட்டது. மாறாக, தமிழ்நாடு மற்றும் கேரளா தலா எட்டு இடங்களை இழக்கலாம் (அட்டவணை 4A) குறிப்பிடப்பட்டு உள்ளது . இருப்பினும், 2026 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவையின் அளவு 848 இடங்களாக அதிகரிக்கப்பட்டால், முறையே 63 மற்றும் 39 கூடுதல் எம்.பி.க்களுடன், உ.பி. மற்றும் பீகாரின் ஆதாயம் மிகவும் பெரியதாக இருக்கும். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முறையே 10 மட்டுமே அதிகரிக்கும் மற்றும் கூடுதல் இடங்கள் இல்லை (அட்டவணை 4B குறிப்பிடப்பட்டு உள்ளது) .
மக்கள்தொகை வளர்ச்சியை திறம்பட கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தேர்தல் எல்லைகளை மறுவடிவமைப்பது நியாயமற்ற பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவர்கள் வெவ்வேறு தீர்வுகளை பரிந்துரைக்கின்றனர்.
தற்போதைய முடக்கத்தை எல்லை நிர்ணயத்தில் வைத்திருக்க சிலர் பரிந்துரைக்கின்றனர். மற்றவர்கள் மக்களவை அளவையும் அதன் தேசிய பிரதிநிதித்துவத்தையும் ஒரே மாதிரியாக வைத்திருக்க முன்மொழிகின்றனர். மாநிலங்களிலேயே மாநில சட்டசபைகளின் அளவை அதிகரிப்பது மற்றொரு யோசனை. இந்த பரிந்துரைகள் தங்கள் மக்கள்தொகையை நன்கு நிர்வகித்த மாநிலங்களுக்கு அபராதம் விதிப்பதைத் தவிர்க்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.