செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தகுதியை மறுபரிசீலனை செய்தல் -ஆதித்யா சின்ஹா

 தொழில்நுட்பத்திற்கும் சமூக கட்டமைப்புகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்த உலகியலுக்கு தக்கவாறு நடக்கிற புரிதல் இருக்க வேண்டும்.


தகுதி என்பது தனிநபர்களின்  வெகுமதி மற்றும் அவர்களின் சமூக பின்னணியைக் காட்டிலும் அவர்களின் திறன்கள், சாதனைகள் மற்றும் கடின உழைப்பின் அடிப்படையில் முன்னேற்றத்திற்க்கான தகுதியின் கருத்து, பற்றி விரிவாக விவாதிக்கின்றனர். நல்லது எது  கெட்டது எது என  இரண்டிலும் சமூகத்தில் அதன் விளைவுகள் குறித்து பலர் விவாதிக்கின்றனர். இது காலப்போக்கில் நிறைய மாறிவிட்டது, குறிப்பாக மைக்கேல் யங், மைக்கேல் சாண்டல் மற்றும் அட்ரியன் வூல்ட்ரிட்ஜ் போன்ற சிந்தனையாளர்களின் விமர்சனங்கள் மற்றும் பகுப்பாய்வுகளின் தாக்கத்தால், தகுதியின் பரிணாமம் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது. 


பல்வேறு  பார்வைகள்


ஒரு இளம் பிரிட்டிஷ் சமூகவியலாளர் யங்  தனது  புத்தகத்தில் ஒரு டிஸ்டோபியன் தகுதி உலகத்தை முன்னறிவித்தார், 1958 இல் "தி ரைஸ் ஆஃப் தி மெரிட்டோகிரசி" (The Rise of the Meritocracy) என்ற புத்தகத்தை எழுதினார். அதில், அவர் ஒரு எதிர்காலத்தை கற்பனை செய்தார், குறிப்பாக 2034 இல், அங்கு சமூக வர்க்கம் மற்றும் இயக்கம் ஆகியவை சோதனைகள் மற்றும் கல்வியால் அளவிடப்படும் செயற்கை நுண்ணறிவு, முயற்சியை மட்டுமே சார்ந்திருந்தது. இந்த போக்கு  ஒரு புதிய வடிவிலான சமூக அடுக்கிற்கு வழிவகுக்கும் என்று அவர் அஞ்சினார்.


தகுதி என்பது மக்களைப் பிளவுபடுத்துவதாக சாண்டல் தனது கருத்தில்  விமர்சிக்கிறார். இது வெற்றியாளர்களை உரிமையாளர்களாக உணர செய்கிறது மற்றும் மற்றவர்களை வெறுப்படையச் செய்கிறது என்று  மக்களுக்கு தெளிவு படுத்தினர். பிராங்பேர்ட் பள்ளியின் விமர்சகர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள், தகுதி நியாயமானது போல் ஏமாற்றுவதவக தனது கருத்தின்  மூலம் ஆழமான சமத்துவமின்மைகளை மறைக்கிறது என்று கூறுகின்றனர். 


பின்-கட்டமைப்பாளர்கள்தகுதி பற்றிய கருத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். தகுதியை யார் வரையறுக்கிறார்கள், அது எவ்வாறு அளவிடப்படுகிறது என்று கேள்வி எழுப்புகின்றனர். தகுதி என்பது சமூகத்தின் அதிகாரத்தில் இருக்கும் நபர்களால் உருவாக்கப்படுகிறது, அவர்களின் அதிகாரத்தை வைத்து  பிரதிபலிக்கிறது என்று அவர்கள் வாதாடுகிறார்கள். தகுதி என்பது ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.


ஒரு சீர்குலைக்கும் காரணியாக செயற்கை நுண்ணறிவு  


யங்கின் பார்வை, தகுதியானது ஒரு கண்டிப்பான வர்க்க அமைப்புக்கு இட்டுச் செல்வதைக் காண்கிறது. சாண்டல் அதன் தார்மீக மற்றும் சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறார். மாறாக, வூல்ட்ரிட்ஜ் தகுதியின் நடைமுறை மாற்றங்கள் மற்றும் அதன் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு பற்றி பேசுகிறார். "திறமையின் பிரபுத்துவம்" (The aristocracy of talent) என்ற தனது புத்தகத்தில், திறமை எவ்வாறு முன்னேற்றத்திற்கான நேர்மறையான சக்தியாகத் தொடங்கியது மற்றும் மக்கள் சமூக ரீதியாக முன்னேற உதவுகிறது என்று விவாதிக்கிறார். இருப்பினும், இது தற்செயலாக புதிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் நன்மைகள் குடும்பங்கள் மூலம் ஒப்படைக்கப்படுகின்றன. தகுதியினால் ஒரு புதிய உயரடுக்கு மக்களை உருவாக்க முடியும் என்பதை வூல்ட்ரிட்ஜ் அங்கீகரிக்கிறார். இருப்பினும், அவர் இன்னும் தகுதியை அடிப்படையில் நியாயமானதாகவே பார்க்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளை உருவாக்குவதற்கான மாற்றங்களை அவர் பரிந்துரைக்கிறார். குறைந்த சலுகை பெற்ற பின்னணியில் உள்ள மாணவர்கள் கல்விக்கு சிறந்த அணுகலைப் பெற உதவ விரும்புகிறார். தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்தும் யோசனையையும் அவர் ஆதரிக்கிறார்.


செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) தகுதிக்கு சேர்ப்பது விஷயங்களை மிகவும் சிக்கலாக்குகிறது. செயற்கை நுண்ணறிவானது தகுதியின் கருத்தை ஆறு வெவ்வேறு வழிகளில் மாற்றும்.


முதலாவதாக, செயற்கை நுண்ணறிவு (AI) தகுதி என்றால் என்ன என்று  மனித திறன்களின் அடிப்படையை கேள்விக்குள்ளாக்குகிறது, ஏனெனில் இது   மனிதர்களை விட  பல சிறப்பான விஷயங்களைச் செய்து முடித்து காட்டி கொண்டு இருக்கிறது . மனித புத்திசாலித்தனமும் படைப்பாற்றலும் தேவைப்படும் பணிகளை இயந்திரங்களால் செய்ய முடியும் என்றால், தகுதியை அளவிடுவதற்கான பழைய வழிகள் இனி அவ்வளவு முக்கியமல்ல.  OpenAI இன் சோரா (Sora) இயந்திரங்களும் ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.


இரண்டாவதாக, தனிப்பட்ட தகுதி பற்றிய பாரம்பரிய யோசனையை செயற்கை நுண்ணறிவு மாற்றுகிறது.  ஏனெனில் இது தொழில்நுட்பத்தை அணுகுவதை அதிகமாக மதிப்பிடுகிறது. செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தக்கூடியவர்களுக்கு ஒரு பெரிய நன்மை உள்ளது. இந்த நன்மை அவர்களின் சொந்த திறன்களால் அல்ல, ஆனால் இந்த கருவிகளின் மேம்பட்ட அம்சங்களிலிருந்து வருகிறது.


மூன்றாவதாக, செயற்கை நுண்ணறிவு பழைய தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ளலாம், அதாவது நியாயமற்ற பணியமர்த்தல் அல்லது காவல்துறை போன்ற நியாயமற்ற விஷயங்களைத் தொடரலாம்.


நான்காவதாக, நேச்சர் மெடிசின் (Nature Medicine) ஆய்வறிக்கையில், கதிரியக்க வல்லுனர்களை விட மூன்று ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை நுண்ணறிவு கணைய புற்றுநோயை கண்டறிய முடியும் என்பதை வெளிப்படுத்தியது. இந்த திறன் வழக்கமான, யூகிக்கக்கூடிய பணிகள் தேவைப்படும் வேலைகளை மாற்றும். அதிக ஊதியம் பெறும் வேலைகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்கக்கூடும் என்பதையும் இது காட்டுகிறது.

ஒட்டுமொத்தமாக, செயற்கை நுண்ணறிவு மக்களை மிகவும் புத்திசாலித்தனமான வேலைகள் அல்லது அங்கு ஒரு நபர் தேவைப்படும் எளிய வேலைகளுக்கு தள்ளும். இது பணக்காரர்கள் மற்றும் ஏழை இடைவெளிகளை பெரிதாக்கக்கூடும், ஏனென்றால் எல்லோரும் ஸ்மார்ட் வேலைகளுக்குத் தேவையான உயர்மட்டக் கல்வியைப் பெற முடியாது.

 

ஐந்தாவதாக, செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொள்வது கடினம், ஏனெனில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வழிமுறைகளை ரகசியமாக வைத்திருக்கின்றன. ஒரு நியாயமான சமூகத்தில், மக்கள் தாங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் செயற்கை நுண்ணறிவுடன், இது பெரும்பாலும் ஒரு மர்மம்,செயற்கை நுண்ணறிவால் எடுக்கப்பட்ட முடிவுகளை எவ்வாறு முன்னோக்கி செல்வது அல்லது கேள்வி கேட்பது என்பதை மக்கள் அறிவது கடினம்.


ஆறாவது, நிறுவன மட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் பலம் தரவு மற்றும் இந்தத் தரவைச் செயலாக்கும் வழிமுறைகள் இருந்து வருகிறது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் நிறைய தரவு உள்ளது. இது சிறந்த மற்றும் துல்லியமான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதில் அவர்களுக்கு ஒரு நன்மையை அளிக்கிறது. அவர்கள் அதிக டேட்டாவைக் கட்டுப்படுத்துவதால், டிஜிட்டல் யுகத்தில் 'தகுதி' (meritocracy) என்றால் என்ன என்பதை இந்த நிறுவனங்கள் தீர்மானிக்கலாம். இந்த நிலைமையினால்  சிறிய நிறுவனங்களை விட்டு வெளியேறலாம். இந்த சிறிய நிறுவனங்களுக்கு புதிய யோசனைகள் இருக்கலாம் ஆனால் அதிக தரவுகள் இல்லை.


எனவே, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகுதி ஆகியவற்றைக் எவ்வாறு கையாள்வது என்பது தொழில்நுட்பமும் சமூகமும்  ஒன்றிணைந்து  எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றி நாம் கடுமையாக சிந்திக்க வேண்டும் என்பதாகும். செயற்கை நுண்ணறிவு நம்மை எவ்வாறு சிறந்தவர்களாக மாற்ற முடியும், ஆனால் நமக்கிடையேயான இடைவேலிகள் பெரிதாகும் போது மக்களின்  குறைகளை எவ்வாறு தீர்ப்பது வெகுமதி அளிப்பது என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


ஆதித்யா சின்ஹா பிரதமரின் சிறப்பு கடமை, ஆராய்ச்சி, பொருளாதார ஆலோசனை கவுன்சிலில் அதிகாரியாக உள்ளார். 




Original article:

Share: