நம்பக தகுந்த மருந்துகளை உருவாக்க இந்தியா அடிப்படை ஆராய்ச்சியில் முதலீடு செய்ய வேண்டும்.
இந்தியாவுக்கும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்திற்கும் (European Free Trade Association (EFTA) இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவடையும் என்று மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர். எனினும், 2008 ஆம் ஆண்டு முதல் அறிவுசார் சொத்துரிமைகளில் நீண்டகால பிரச்சினை உள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள். அவை பல மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனங்களின் தாயகமாக உள்ளன. இந்த நிறுவனங்கள் உலக அளவில் பயன்படுத்தப்படும் பல மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்குகின்றன. மருந்துத் தொழில் தனித்துவமானது. புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பது மிகவும் விலை உயர்ந்தது. பொதுவான நகல்களை உருவாக்குவது மிகவும் மலிவானது. இந்த மருந்துகளுக்கு ஒரு பெரிய தேவை உள்ளது.ஆனால் எல்லோராலும் அவற்றை பெற இயலாது. இந்த நிலைமை மருந்துகளைக் கண்டுபிடிக்கும் நிறுவனங்களுக்கும் பொதுவான பதிப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் இடையே மோதல்களுக்கு ஏற்படுத்துகிறது.
காப்புரிமைகள் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களின் படைப்புக்கான பிரத்யேக உரிமையை வழங்குகின்றன. அரசாங்கங்களும் கட்டாய உரிமத்தை வழங்கலாம். இதன் பொருள் அவர்கள் பொது சுகாதார காரணங்களுக்காக இந்த ஏகபோகங்களை உடைக்க முடியும். இந்த அமைப்பு பல ஆண்டுகளாக உலகளாவிய மருந்துத் துறையை வைத்திருக்கிறது. ஆனால், புதிய சவால்கள் உள்ளன. ஒன்று சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைகளில் தரவு பிரத்தியேகத்தன்மை. இந்த விதி மருத்துவ பரிசோதனைகளின் தரவை தனியுரிமமாக்குகிறது. தரவு குறைந்தது ஆறு ஆண்டுகளாக மருந்து தயாரித்த நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும்.பொதுவான மருந்து தயாரிப்பாளர்களுக்கு அவர்களின் பதிப்புகளுக்கு ஒப்புதல் பெற பெரும்பாலும் இந்த தரவுகள் தேவைப்படுகிறது. அவர்கள் வழக்கமாக அசல் நிறுவனம் வெளியிட்ட தரவைப் பட்டியலை பயன்படுத்துகிறார்கள்.
தரவு விலக்கு என்ற கருத்து (principle of data exclusivity) ஐரோப்பாவிலும் பல வளரும் நாடுகளிடம் இருக்கின்றது. இந்தியாவில் பயன்படுத்தப்பட்டால்,இது இந்தியாவின் மருந்துத் துறையை கடுமையாகப் பாதிக்கும். குறைந்த விலையில் மருந்துகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. சுதந்திர வர்த்தக ஒப்பந்த (Free Trade Agreement (FTA)) பேச்சுவார்த்தைகளில் தரவு விலக்குத்தன்மையை (data exclusivity) சேர்க்க வேண்டாம் என்று இந்திய அதிகாரிகள் தங்கள் ஆலோசனைகளை கூறியுள்ளனர். ஆனால், கசிந்த வரைவுகள் தலைப்பு இன்னும் பரிசீலனையில் இருப்பதைக் காட்டுகின்றன.
பல வருடங்களாக மருந்து உற்பத்தியில் இந்தியா மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, நெறிமுறை மருந்து சோதனைகளை நடத்தும் திறனில் முதலீடு செய்ய வேண்டும். இது தொடக்கத்தில் இருந்தே புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்கத் தொடங்க வேண்டும். விலை அதிகம் என்பதால் மேற்கத்திய நாடுகள் மட்டுமே மருந்துகளை உருவாக்க முடியும் என்ற மனநிலை மாறி வருகிறது. கோவிட் -19 பெரும்தோற்று தொற்றுநோய்களின் போது இந்தியாவில் உருவாக்கப்பட்ட புதிய தடுப்பூசி தொழில்நுட்பங்களை உருவாக்கியபோது இந்த மாற்றம் தெளிவாகத் தெரிந்தது. இந்த முன்னேற்றத்தைத் தொடர, இந்தியா அடிப்படை ஆராய்ச்சியில் துறை சார்பாக அதிக பணம் செலுத்த வேண்டும். இந்த முதலீடு வரும்காலங்களில் உள்ளூர் மருந்து தொழிலை வளர்க்க பெரிதும் உதவும்.