தேர்தல் பத்திரங்கள் மீதான நீதிமன்றத்தின் தெளிவான செய்தி -திரிலோச்சன் சாஸ்திரி

 இந்திய உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, ஜனநாயகத்தில் குடிமக்கள் எப்போதும் எச்சரிக்கையுடன்  இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது


பிப்ரவரி 15, 2024 அன்று, இந்திய உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பை அறிவித்தது. ஜனநாயகத்திற்கு வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது. துரதிர்ஷ்டவசமாக, தேர்தல் பத்திரங்கள் திட்டம் வெளிப்படையானதாக இல்லை. இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு யார் எவ்வளவு நிதி அளிக்கிறார்கள் என்பது வாக்காளர்களுக்கு  தெரியாது. பிரச்சார நிதியில் வெளிப்படைத்தன்மை பல ஜனநாயக நாடுகளில் முக்கியமானது. நீதிமன்றத்தின் இந்த  தீர்ப்பு  வெளிப்படைத்தன்மையை மீண்டும் கொண்டு வருகிறது.


நிதி வரம்புகள் நீக்கம் 


கருத்தில் கொள்ள சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று, ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பு எவ்வளவு பணம் நன்கொடை அளிக்க முடியும் என்பதற்கான வரம்பு. அரசாங்கத்தின் மீது தேவையற்ற செல்வாக்கைத் தடுக்க இந்த வரம்பு உலகளவில் இருக்கின்றது. தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் இந்த விதி இருந்தது. அரசியல் செயல்முறையைத் திசைதிருப்ப நிறுவனங்கள் பெரும்பாலும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளாக அளிக்கின்றன. இது, அவர்களின் வணிகத்திற்கு உதவும் என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.


ஒரு நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கக்கூடிய லாபத்தின் மீதான முந்தைய கட்டுப்பாடுகளையும் தேர்தல் பத்திரங்கள் நீக்கின. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை நன்கொடை அளிக்கவும் அனுமதித்தது. இது அரசியல் கட்சிகளுக்கு பணத்தை அனுப்புவதற்காக மட்டுமே ஷெல் நிறுவனங்கள் உருவாக்கப்படுவது குறித்த கவலைகளை எழுப்பியது. இந்த நோக்கத்திற்காக ஷெல் நிறுவனங்கள் உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்தது. இந்த விதிகளையும் நீதிமன்றம் இப்போது ரத்து செய்துள்ளது.


பணக்கார முதலாளித்துவம்  அல்லது குழுக்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் ஒரு பிரச்சினையை ஜனநாயகங்கள் ஒரு காலத்தில் எதிர்கொண்டன. பதிலுக்கு, நன்கொடையாளர்களின் நலனுக்காக சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் செய்யப்பட்டன. ஒரு வரையறுக்கப்பட்ட வழியில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்தியாவில் இது நடக்காமல் தடுக்கிறது.


தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்காக, நிதி மசோதாவில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. பொதுவாக, எந்த நாட்டிலும் நோட்டுகள் மற்றும் பத்திரங்களைப் போன்ற நாணயங்களை வெளியிட மத்திய வங்கிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி  சட்டத்தின் பிரிவு 31 இன் படி, இந்த அதிகாரம் இந்திய ரிசர்வ் வங்கி  சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது.


இருப்பினும், அரசாங்கம், ரிசர்வ் வங்கி சட்டத்தில் நிதிச் சட்டத்தின் மூலம் திருத்தம் கொண்டுவந்தது. இது ஒரு புதிய ஷரத்து 31 (3) இன் கீழ், தேர்தல் பத்திரங்களை வெளியிட எந்த ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கியையும் அங்கீகரிக்க மத்திய அரசை அனுமதித்தது. இந்த நிதிச் சட்டத் திருத்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டம்


சில முக்கிய விஷயங்களை புரிந்துகொள்ள சிறிது நேரம் எடுத்துக்கொள்வோம். ரிசர்வ் வங்கி (RBI) சட்டத்தில் திருத்தம் நிதி மசோதா மூலம் செய்யப்பட்டது. இதற்கு மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லை. தேர்தல் பத்திரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஆளும் கட்சிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், அங்கு வாக்கெடுப்பைத் தவிர்க்க விரும்பியது. ஆனால் நிதி மசோதாவில் எந்த பிரச்சினையையும் சேர்க்க முடியுமா? தேர்தல் பத்திரங்கள் நிதி மசோதாவின் விதிகளுடன் தொடர்புடையவை அல்ல. ரிசர்வ் வங்கி சட்டம் 1934, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act) 1951, வருமான வரிச் சட்டம் 1961(Income Tax Act,1961) மற்றும் நிறுவனங்கள் சட்டம் 2013 (Companies Act 2013) போன்ற பல சட்டங்கள் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்த திருத்தப்பட்டன. இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட நடவடிக்கை. அரசியல் கட்சிகள் தங்கள் நிதியை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் (Central Information Commission (CIC)) அளித்த தீர்ப்புக்கு பதிலளிக்கும் விதமாக இது அமைந்தது. இந்த தீர்ப்பை புறக்கணிக்க தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால், வெளிப்படைத்தன்மைக்கு அரசியல் கட்சிகள் அஞ்சுவது ஏன்?


சட்ட செயல்முறை பெரும்பாலும் சராசரி வாக்காளருக்கும சிக்கலானதாகத் தெரிகிறது. ஜனநாயகத்தின் வெளிப்படைத்தன்மையின் முக்கியமதிப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த பல சட்டங்கள் மாற்றப்படும்போது, அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது , குடிமக்கள் புரிந்துகொள்வது கடினம். இருப்பினும், இவை தொழில்நுட்ப விஷயங்கள் மட்டுமல்ல, இவை ஜனநாயகத்தின் அடிப்படையையே மிகவும் பாதிக்கும் பிரச்சினைகள்.


இது ஜனநாயகத்தில் அடிப்படைப் பிரச்சினைகளையும் எழுப்புகிறது பெரும்பான்மை உள்ள எந்த அரசும் எந்த மசோதாவையும் நிறைவேற்றி, அதை சட்டமாக மாற்ற இயலும். இந்தியாவில், சுயேச்சையாக வாக்களிக்கும் முறை (concept of an independent vote) இல்லை, அமெரிக்காவைப் போலல்லாமல், ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இதன் பொருள் ஒரு ஆளும் கட்சியின் உயர்மட்டத்தில் உள்ள ஒரு சிறிய குழு அவர்கள் விரும்பும் எந்த சட்டத்தையும் நிறைவேற்ற இயலும். தேர்தல் பத்திரங்களைப் பொறுத்தவரை, முறையான பொது ஆலோசனை செயல்முறை திட்டம் , மேலும் பாராளுமன்றத்தில்  விவாதங்கள் புறக்கணிக்கப்பட்டன.


தீர்ப்பின் சாராம்சம்


உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு:


1. தேர்தல் பத்திரங்கள் திட்டம் இனி செல்லுபடியாகாது.


2. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், நிதிச் சட்டம் 2017 மற்றும் நிறுவனங்கள் சட்டம் 2013  ஆகியவற்றில் திருத்தங்கள் அரசியலமைப்பின் 19 மற்றும் 14 வது பிரிவுகளை மீறுகின்றன.


3. அரசியலமைப்பின் பிரிவு 19 தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துகிறது, பிரிவு 14  கீழ் சமத்துவத்தை  உறுதிப்படுத்துகிறது.


4. இந்த  பிரிவுகள் அடிப்படை உரிமைகள் மற்றும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது .


5. தேர்தல் பத்திரங்களை வழங்குவதை நிறுத்துமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு (SBI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


6. வழங்கப்பட்ட அனைத்து தேர்தல் பத்திரங்களின் விவரங்களையும் எஸ்பிஐ (SBI)  மார்ச் 6, 2024 க்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) வழங்க வேண்டும்.


7. தேர்தல் ஆணையம் இந்த தகவலை இரண்டு வாரங்களுக்குள் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும். 


தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் ஜனநாயகத்தை ஆதரித்தன. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களை நீதித்துறை மறுஆய்வு செய்வது இன்றியமையாதது. அரசியல் சாசனத்தையும், அதை உருவாக்கியவர்களையும் நாம் போற்ற  வேண்டும்.


தேர்தலில் பணம் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதில் கறுப்புப் பணம் மற்றும் வாக்காளர்களுக்கு பிரச்சார நிதி மற்றும் இலவசங்கள் லஞ்சம் கொடுப்பதும் அடங்கும். ஜனநாயகத்திற்கு தொடர்ந்து கண்காணிப்பு தேவை என்று மக்கள் விரும்புகிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்கள் விழிப்புடன் இருப்பதைக் காட்டுகிறது. அரசியல் கட்சிகள் அவசியம் தேவை ஆனால் அவை சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.


திரிலோச்சன் சாஸ்திரி, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (Association for Democratic Reforms (ADR)) தலைவர் மற்றும் நிறுவனர்  மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம், பெங்களூரில் பேராசிரியராக உள்ளார்.




Original article:

Share: