பஞ்சேஷ்வர் திட்டம் (Pancheshwar project) குறித்து நேபாளம்-இந்தியா அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையின் மவுனம் -கல்லோல் பட்டாச்சார்ஜி

 இந்தியாவும் நேபாளமும் நீண்டகால அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டம் (Pancheshwar Multipurpose Project (PMP)) தொடர்பாக நிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.


புதன்கிழமை, வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா, நேபாள வெளியுறவுச் செயலர் சேவா லாம்சலை சந்தித்தார். இந்த சந்திப்பில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில், இரு தரப்பும் "பன்முக ஒத்துழைப்பு" (multifaceted cooperation) பற்றி விவாதித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய மின் திட்டமான பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டம் (Pancheshwar Multipurpose Project (PMP)) பற்றிக் குறிப்பிடவில்லை. இது இரு தரப்புக்கும் இடையே உருவாக்கப்பட்ட மிகப்பெரிய இருதரப்பு மின் திட்டமாகும்.


நேபாள வெளியுறவு அமைச்சர் என்.பி.சவுத்  வருகை தந்த சிறிது நேரத்திலேயே நேபாள வெளியுறவுச் செயலர் திருமதி சேவா லாம்சலின் டெல்லி பயணம் மேற்கொண்டு, புதுதில்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் ரைசினா உரையாடலில் (Raisina Dialogue) பங்கேற்றார். அதைத் தொடர்ந்து அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கும் திரு.சவுத் அவர்கள் பயணம் செய்தார். மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்த திருமதி லாம்சல், வியாழன் அன்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் புனே சர்வதேச மையம் ஏற்பாடு செய்த 8வது ஆசிய பொருளாதார உரையாடல் (8th Asia Economic Dialogue) 2024இல் பங்கேற்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, இரு வெளியுறவுச் செயலர்களும், இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இடையேயான விரிவான ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்தனர். வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் மற்றும் நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து நடத்திய 7வது இந்தியா-நேபாள கூட்டு ஆணைய சந்திப்பின் விளைவுகளையும் ஆய்வு செய்தனர். இதை, கடந்த மாதம் காத்மாண்டுவில் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் எச்.இ.என்.பி.சௌத்” (H.E. N.P. Saud)  தெரிவித்தார்.


கூட்டு ஆணைக்குழு (Joint Commission) சந்திப்பிற்கு பின்னர், இரு அமைச்சர்களும் நீண்டகால மின்சார வர்த்தகம் தொடர்பில் அரசாங்கங்களுக்கிடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை இரு அமைச்சர்களும் கவனித்தனர். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கான நேபாளத்தின் மின்சார ஏற்றுமதியை 10,000 மெகாவாட்டாக உயர்த்துவதே இதன் முக்கிய இலக்காகும். இருப்பினும், பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டம் (Pancheshwar Multipurpose Project (PMP)) சுமார் 6,480 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையில் மின்சாரமானது சமமாக பிரிக்கப்படுகிறது. இது நேபாளத்தில் 1,30,000 ஹெக்டேர் நிலங்களுக்கும், இந்தியாவில் 2,40,000 ஹெக்டேர் நிலத்திற்கும் நீர்ப்பாசன வசதியை அளிக்கும் முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பஞ்சேஷ்வர் மேம்பாட்டு ஆணையத்தின் (Pancheshwar Development Authority) ஆளும் குழுவின் கீழ் நிபுணர்கள் குழுவிற்குள் தேவையான விவாதம் தற்போது வரை நடைபெறவில்லை.


இந்தியா மற்றும் நேபாளத் தரப்பு பலன்-பகிர்வு தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால், திட்டம் தற்போது முடங்கியுள்ளது. மின்சாரம் சமமாகப் பிரிக்கப்பட்டாலும், நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு தொடர்பான பெரும்பாலான நன்மைகளை இந்தியா பெறுகிறது. மாறாக, காத்மாண்டு தண்ணீரை 'வெள்ளை தங்கம்' (white gold) என்றும் மற்றும் நேபாளத்திற்கு இந்தியா பணம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. எவ்வாறாயினும், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty) உட்பட மற்ற நீர் அடிப்படையிலான ஒப்பந்தங்களைப் புரிந்துகொள்வதை இந்தியா சவால் செய்வதால், இந்தக் கூற்றை ஏற்க முடியாது. ஒரு அனுபவமிக்க பார்வையாளர், நேபாளுக்கு திருப்திகரமான முறையில் இழப்பீடு வழங்குவதற்கான வழியை இந்தியா கண்டுபிடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். 


இருப்பினும், பஞ்சேஷ்வர் திட்டத்தைத் தொடங்குவதற்கு இரு தரப்பிலிருந்தும் அரசியல் துணிச்சல் மற்றும் திட்டமிடல் இரண்டும் தேவைப்படும்.  




Original article:

Share: