ஆதார் அடிப்படையிலான கட்டண முறை (Aadhaar-Based Payment System (ABPS)) பல சிக்கல்களைக் கொண்டிருப்பதால் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MNREGA)) கிராமப்புற குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் வரை உத்தரவாதமான வேலைகளை வழங்குகிறது. கூடுதலாக, இந்த ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான பட்ஜெட்டை அரசாங்கம் கிட்டத்தட்ட ₹86,000 கோடியாக உயர்த்தியுள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதங்களை டிஜிட்டல் அடையாள அமைப்புகளுடன் (digitised individual identification systems) இணைப்பதில் உள்ள சிக்கல்களை பல நிபுணர்கள் எடுத்துரைத்துள்ளனர். இணைய இணைப்பு, கைரேகை அங்கீகார சிக்கல்கள், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள், பதிவு செய்யப்படாத வேலை நாட்கள், பெயர் நகல், விழிப்புணர்வு இல்லாமை, இணைப்பதில் பிழைகள், அங்கீகாரம், பெயர்களை நீக்குதல், பெயர் எழுத்துக்களில் உள்ள முரண்பாடு மற்றும் சீடிங் (seeding) நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள் போன்ற பல சவால்கள் இதில் உள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 26 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. மேலும், 2022-23 ஆம் ஆண்டில் 5.2 கோடி தொழிலாளர்கள் தரவுத்தளத்திலிருந்து நீக்கப்பட்டனர். தி இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், வேலை அட்டை வைத்திருப்பவர்களில் 34.8% பேர் ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கு தகுதியற்றவர்களாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
பயனாளிகளை ஓரங்கட்டுதல்
முக்கிய பிரச்சனை என்னவென்றால், தொழில்நுட்பம் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு பதிலாக அவர்களை கட்டுப்படுத்துகிறது, இது நாம் எதிர்பார்த்ததற்கு எதிராக செல்கிறது. தொழில்நுட்பத்தையும் தொழிலாளர்களையும் அரசு எப்படிப் பார்க்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தற்போது, தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பை விட தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்தும் வழங்கப்படுகிறது.
ஆதார் அடிப்படையிலான கட்டண முறை பயன்படுத்தப்பட்டு, கட்டமைக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உத்தரவாதத் திட்டத்தில் தொழில்நுட்பம் உதவுவதற்குப் பதிலாக, அரசு ஆதரவு தொழில்நுட்பத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. ஊரக வேலைவாய்ப்பு அமைப்பு தொழிலாளர்களின் மீது அதிகப்படியான தொழில்நுட்பத்தை சுமத்துகிறது. இது நவீன, வெளிப்படையான டிஜிட்டல் பொருளாதாரத்தை அரசு இலக்காகக் கொண்டிருக்கிறதா அல்லது அதன் சொந்த நலனுக்காக தொழில்நுட்பத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தொழில்நுட்ப தீர்வுகளில் அதிக கவனம் செலுத்தி, உண்மையான பயனாளிகளை புறக்கணிக்கிறோமா?
இந்த வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டங்களின் நோக்கம், தொழில்நுட்பபத்தில் கவனம் செலுத்துவது அல்ல, மாறாக, சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் எளிதாக்கப்பட்ட பணி பாதுகாப்பு உணர்வை வழங்குவதாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற திட்டங்கள் வளர்ச்சி செயல்பாட்டில் சேர்ப்பது மற்றும் சமத்துவமின்மை மற்றும் சமூக பொருளாதார துயரங்களைத் தணிப்பது போன்ற இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை உற்பத்தி, சமத்துவமான மற்றும் இணைக்கப்பட்ட சமூகத்திற்கு பங்களிப்பதாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளவையின் வளர்ச்சித் திட்டத்தால், நியாயமான மற்றும் இணைக்கப்பட்ட சமூகத்திற்கு உதவியாக இருக்கும். இந்த இலட்சியங்களை விட அரசு தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிக்கும்போது, அது அதன் சொந்த இலக்குகளுக்கு எதிராக செல்லும் அபாயம் உள்ளது. இந்தத் திட்டங்கள், அவற்றில் பங்கேற்கும் குடும்பங்களில் அதிக ஊட்டச்சத்து உட்கொள்ளலுக்கு வழிவகுக்கின்றன, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன மற்றும் ஆண்களுக்கு இணையாக அவர்களுக்கு ஊதியம் வழங்குகின்றன, காப்பீட்டு மாற்றுகளாக செயல்படுகின்றன, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்புநிலை சமூகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு வெளிப்படையான நன்மைகளை வழங்குகின்றன மற்றும் அரசியல் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த பங்களிக்கின்றன என்பதை உலக வளர்ச்சி என்ற அறிவார்ந்த ஆய்வு காட்டுகிறது. தொழில்நுட்பத்திற்கான ஆர்வத்தில் இந்தக் கொள்கைகளை நாம் மறந்துவிடக் கூடாது. பின்தங்கிய சமூகங்களுக்கான தொழில்நுட்ப தலையீடுகளின் எதிர்மறையான தன்மை குறித்து COVID-19 தொற்றுநோய் நமக்குக் கற்பித்ததை, நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பத்தின் சாத்தியம்
தொழில்நுட்ப தலையீடுகள், வரலாற்று ரீதியாகவும் முற்போக்கான கொள்கைகளுக்கு சேவை செய்யும் திறனை நிரூபித்துள்ளன. அவை, நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDGs)) அடைவதற்கு மிகவும் முக்கியமானது. மேலும் இந்தியாவில் உள்ள ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டங்கள் பல நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான கணிசமான பட்ஜெட் ஒதுக்கீடு, தொழில்நுட்ப குறைபாடுகள் இல்லாத ஒரு அமைப்பின் மூலம் வழிநடத்தப்பட வேண்டும். இதற்காக தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத திருத்தங்கள் பகுப்பாய்வு செய்யவேண்டும். வளர்ச்சி இலக்குகள் தொடர்பாக தொழிலாளர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், தொழில்நுட்பம் தொழிலாளர்களின் பங்கை மறைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகரித்து வரும் சமூக பொருளாதார சமத்துவமின்மை, வேலையில் தீவிரமான நிலையற்ற தன்மை, குறைந்து வரும் சமூக பாதுகாப்பு மற்றும் கிராமப்புற பிரச்சனைகளின் காலக்கட்டத்தில், தொழில்நுட்பத்தால் உதவ முடியும். தொழிலாளர்களுக்கும், அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்புக்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.